செய்திகள் :

AI தொழில்நுட்பத்துடன் சாலைத் திட்டங்கள் - நிலம் கையகப்படுத்த புதிய டிஜிட்டல் தளம் உருவாக்கும் CUMTA

post image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகமாகவும், துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்த புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA - Chennai Unified Metropolitan Transport Authority ) டெண்டர் வெளியிட்டுள்ளது.

தற்போது புதிய சாலைத் திட்டங்களை செயல்படுத்தும்போது, எந்தெந்த நிலங்கள் பாதிக்கப்படும், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அதன் மதிப்பு என்ன என்பதைக் கணக்கிட அதிகாரிகள் GIS வரைபடங்கள், நில உரிமை ஆவணங்கள், வருவாய்த் துறை பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஆவணங்களை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் திட்டமிடல் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் காலதாமதம் ஏற்படுகிறது.

சாலை பணிகள்

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து நில விவரங்களையும் ஒரே டிஜிட்டல் வரைபடத்தில் ஒருங்கிணைக்கும் Web GIS தளத்தை உருவாக்க CUMTA திட்டமிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே PDF மற்றும் AutoCAD (DWG) வடிவில் உள்ள சாலை வரைபடங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானாக அடையாளம் கண்டு, அவற்றை டிஜிட்டல் சாலைப் பதிவேடாக மாற்றும் வசதியும் இதில் இடம்பெற உள்ளது.

இந்த புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், புதிய சாலைத் திட்டங்களுக்கு தேவையான நிலத்தின் பரப்பளவு, கையகப்படுத்தும் செலவு, பாதிக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட தகவல்களை மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக கணக்கிட முடியும். இதன் மூலம் திட்டமிடல் வேகமடைவதுடன், நிலம் கையகப்படுத்தும் செலவையும் முன்கூட்டியே மதிப்பிட முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் தரவுகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து, AI உதவியுடன் PDF மற்றும் DWG வரைபடங்களில் உள்ள தகவல்களை டிஜிட்டல் தரவுகளாக மாற்றுவதன் மூலம் திட்டத் தாமதங்களை குறைத்து, சாலை உள்கட்டமைப்பு பணிகளை விரைவாக நிறைவேற்ற இந்த தொழில்நுட்பம் உதவும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையமான CUMTA, சென்னை மாநகர எல்லையை மட்டுமல்லாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) வரம்பிற்குட்பட்ட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போக்குவரத்து மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க