செய்திகள் :

AI Impact Summit 2026: ஏ.ஐ உச்சி மாநாடு! - இந்தியாவுக்கு வரும் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன்

post image

ஏ.ஐ உச்சி மாநாடு (AI Impact Summit 2026) - இந்தியாவின் புது டெல்லியில் இன்று தொடங்கியுள்ளது. இந்த மாநாடு வரும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) வரை நடக்க உள்ளது.

இதுவரை இங்கிலாந்து, தென் கொரியா, பிரான்ஸில் நடந்த இந்த மாநாடு, முதல் முறையாக உலகின் தென் நாடுகளில் ஒன்றில் நடக்கிறது. இதனாலே, இந்தியாவில் நடக்கும் இந்த மாநாடு சற்று ஸ்பெஷலானது.

இந்த உச்சி மாநாட்டின் தீம், 'அனைவருக்கும் வளம்... அனைவருக்கும் ஆனந்தம்'.

இந்த உச்சி மாநாட்டில் 15 - 20 நாடுகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை

மேலும், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, OpenAI-ன் சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட பல நிறுவனங்களின் சி.இ.ஓ-க்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மிக மிக முக்கியமானது ஏ.ஐ.

ஏற்கெனவே ஏ.ஐ பயன்பாட்டில் டாப் இடத்தில் உள்ளது இந்தியா. இது போக, ஏ.ஐ-க்கான உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கும் போது, 'இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பை' உலகத்திற்கு எடுத்துக்காட்டும்.

அடுத்ததாக, உலகம் முழுவதும் பல தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்துகொள்வதால், இந்தியாவின் தொழில் பிரிவில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இது பெரும் கலங்கரை விளக்கமாக இருக்கும்.

Sarvam AI: சாட் ஜிபிடி, கூகுள் ஜெமினிக்கு போட்டியாக இந்தியாவின் சர்வம் ஏ.ஐ - சிறப்பம்சம் ஓர் அலசல்!

உலகமே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பப் புரட்சியில் வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவும் இந்தப் போட்டியில் தனித்துவமான அடையாளத்துடன் களமிறங்கியுள்ளது. அதாவது... மேலும் பார்க்க

விண்வெளிப் போரில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளும் சீனா; அசரவைக்கும் புதிய மைக்ரோவேவ் தொழில்நுட்பம்!

விண்வெளிப் பாதுகாப்புத் துறையில் சீனா ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. எலான் மஸ்க்கின் 'ஸ்டார்லிங்க்' போன்ற செயற்கைக்கோள் கூட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யும் வகையில், ஒரு சக்திவாய்ந்த 'மைக்ரோவேவ... மேலும் பார்க்க

Moltbook: AI-க்கும், AI-க்கும் 'சாட்டிங்'; அதை மனிதர்கள் வேடிக்கை பார்க்கலாம்; புது ஆப்!

இந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், Moltbook என்கிற சமூக வலைதளப் பக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாக்கிராம் போன்ற வழக்கமான சமூக வலைதளப் பக்கம் அல்ல. இது கொஞ்சம... மேலும் பார்க்க

Zozo: `இந்தியாவில் பிறந்து, உலக மேடையை நோக்கி' - 11 வயதேயான இளம் ஸ்டார்ட்அப் நிறுவனர்!

ஆத்விக் அமித் குமார் - தனக்கென இந்த உலகில் 11 வயதிலேயே முத்திரை பதித்திருக்கும் மாணவன்.ZOZO Connect என்ற ஸ்டார்ட் அப்பின் நிறுவனர் இவர். கோவையில் இருந்து சென்னை வந்த ஆத்விக், நந்தினி தம்பதியின் மகன், ... மேலும் பார்க்க