செய்திகள் :

Asian Games: 0.2 விநாடியில் நழுவிய இறுதிப்போட்டி வாய்ப்பு; மகன் வேதாந்த்தைப் பாராட்டிய நடிகர் மாதவன்

post image

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் பொதுவாக வெள்ளித்திரையையே தங்களின் முதல் களமாகத் தேர்ந்தெடுக்கும் சூழலில், கடின உழைப்பும் உடல்தகுதியும் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதித்துக் காட்டியும் வருகிறார் நடிகர் ஆர்.மாதவனின் மகன் வேதாந்த்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய நீச்சல் அணியில் தனது முதல் போட்டியைத் தொடங்கி சர்வதேச அளவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். ஆண்களுக்கான 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே தகுதிச் சுற்றில் வேதாந்த் மாதவன், சாஜன் பிரகாஷ், தக்ஷன் சசிகுமார் மற்றும் அனீஷ் சுனில் ஆகிய நால்வர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியது.

13 அணிகள் பங்கேற்ற இந்தச் சுற்றில், இந்திய அணி பந்தய தூரத்தை 7 நிமிடம் 24.32 விநாடிகளில் கடந்து 9-வது இடத்தைப் பிடித்தது.

வேதாந்த், மாதவன்
வேதாந்த், மாதவன்

முதல் 8 அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையில், 8-வது இடத்தைப் பிடித்த கத்தார் அணியை விட வெறும் 0.22 விநாடிகள் மட்டுமே பின்தங்கி இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டது.

போட்டிக்குப் பின் வேதாந்த், "0.2 விநாடிகளில் இறுதிப்போட்டி வாய்ப்பு நழுவியது; எனது அடுத்த 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் தனிநபர் போட்டியில் சிறப்பாகச் செயல்படுவேன்" எனப் பதிவிட்டார். அவரது விடாமுயற்சியைப் பாராட்டும் விதமாக, தந்தை மாதவன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கும் எமோஜியுடன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டு தனது பாசிட்டிவான ஆதரவை வெளிப்படுத்தினார்.

“நான் மாதவனின் மகனாக மட்டும் அறியப்படக் கூடாது; ஒரு சிறந்த விளையாட்டு வீரராக என் சொந்த உழைப்பால் என் தந்தைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்” என்ற உறுதியான நிலைப்பாட்டோடு நீச்சலைத் தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெறத் தொடங்கினார் வேதாந்த். மாதவனும் பல நேர்காணல்களில், "அவன் பாதையை அவனே அமைத்துக் கொள்கிறான். விளையாட்டில் எந்தக் குறுக்குவழியும் கிடையாது; வியர்வையும் உழைப்பும் மட்டுமே வெற்றியைத் தரும். ஒரு விளையாட்டு வீரனின் தந்தையாக இருப்பதே எனக்குப் பெருமை" எனக் கூறியுள்ளார்.

மாதவன் - வேதாந்த்
மாதவன் - வேதாந்த்

விளையாட்டுத் துறையில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் போவது ஒரு தற்காலிகத் தடையே தவிர, முடிவு அல்ல. தனது கடின உழைப்பாலும் ஒழுக்கத்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளிலும், எதிர்கால ஒலிம்பிக் கனவுகளிலும் வேதாந்த் இந்தியாவிற்குப் பெருமை சேர்ப்பார் என்ற நம்பிக்கை விளையாட்டு ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

சாதனைகள்

  • 2018 தாய்லாந்து ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப்: 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இது சர்வதேச அளவில் அவருக்குக் கிடைத்த முதல் பதக்கம்.

  • கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2023 (மத்தியப் பிரதேசம்): மகாராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கி மொத்தம் 7 பதக்கங்களை வென்றார்.

  • ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் 2022: 4 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்றார். குறிப்பாக, 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பந்தயத்தை 16 நிமிடம் 01.73 விநாடிகளில் கடந்து புதிய ஜூனியர் தேசிய சாதனை படைத்தார்.

வேதாந்த்
வேதாந்த்

முக்கிய தனிநபர் சாதனைகள்

  • 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல்: 24.43 விநாடிகள் (மலேசிய இன்விடேஷனல், 2023)

  • 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல்: 51.79 விநாடிகள் (சீனியர் தேசிய சாம்பியன்ஷிப்)

  • 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல்: 1 நிமிடம் 52.74 விநாடிகள் (தேசிய தகுதிப் போட்டிகள்)

  • 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல்: 8 நிமிடங்கள் 17.28 விநாடிகள் (டேனிஷ் ஓபன், 2022 - தங்கப் பதக்கம்)

  • 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல்: 15 நிமிடங்கள் 57.86 விநாடிகள் (டேனிஷ் ஓபன், 2022 - வெள்ளிப் பதக்கம்)

HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் - என்ன நடந்தது?

2017-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ‘ஹைராக்ஸ்’ (Hyrox) உடற்பயிற்சி போட்டி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 1 கிலோமீட்டர் ஓ... மேலும் பார்க்க

மகளிர் T20I: `அதிக ரன்கள் குவித்தவர்...' - வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தானா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்... மேலும் பார்க்க

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்; தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளவேனில் வாலறிவன் சோனம் மாஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம... மேலும் பார்க்க

ஆசிய விளையாட்டுகள்: சொகுசு கப்பலில் வீரர்கள்; தங்குமிட திட்டத்தில் சிக்கல்.. ஜப்பானின் முன்னெடுப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பிரமாண்டமான கிராமங்கள், வண்ணமயமான அணிவகுப்புகள் நினைவுக்கு வரும். ஆனால், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஜப்பான், வழக்கமான நடைமுறைகளை மாற்றி யோசித்து புதி... மேலும் பார்க்க

`ஒரு நாள் விளம்பரத்தில் நடிக்க ரூ.2 கோடி?'- அதிகரிக்கும் இளம் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி செல்வாக்கு

15 வயதில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தனது செல்வாக்கை நிலைநாட்டி இருக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் புகழ், கடந்த ஐ.பி.எல் போட்டியைத் தொடர்ந்து உச்சத்தை தொட்டு இருக்கிறது. அவருக்கு இந்திய அணியில்கூட வாய்ப... மேலும் பார்க்க

'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!

பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி 'நோவிக்' என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந... மேலும் பார்க்க