"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
Bangladesh: வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து மதத் தலைவர் கைது; தொடரும் போராட்டங்கள்; பின்னணி என்ன?
வங்காளதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கெதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் மற்றும் கலவரத்தின் விளைவாக ஆட்சி கவிழ்ந்து இடைக்கால அரசு அமைந்தது. அதேசமயம், போராட்டம் முடிந்த பிறகும், அங்குச் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதும், இந்துக் கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதாகச் சில செய்திகள் வெளியாகின.
இதில், வங்கதேசத்தின் சர்வதேச கிருஷ்ணா உணர்வு சங்கத்தின் (ISKCON) முன்னாள் உறுப்பினரான இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ், தேசத்துரோக வழக்கு தொடர்பாகக் கடந்த திங்களன்று கைதுசெய்யப்பட்டார். இதன் காரணமாக, நாட்டின் தலைநகர் டாக்கா உட்பட பல்வேறு இடங்களில் சில இந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்தன. வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.
மேலும், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவிலிருந்து கண்டனங்களும் எழுந்தன. இந்த நிலையில், மேலும் ஒரு இந்து மதத் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஷியாம் தாஸ் பிரபு என்று அடையாளம் காணப்படும் அவர், சிறையிலுள்ள சின்மோய் கிருஷ்ண தாஸை பார்க்கச் சென்றபோது கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, ISKCON கொல்கத்தா பிரிவு செய்தித் தொடர்பாளர் ராதாரம் தாஸ், ``மற்றுமொரு பிரம்மச்சாரி ஸ்ரீ ஷியாம் தாஸ் பிரபு சட்டோகிராம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...