செய்திகள் :

Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ

post image

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் நடைபெற்றது.

Sai Abhyankar
Sai Abhyankar

அதில் அட்லீ பேசுகையில், "சாய் அபயங்கர்... நீ உண்மையிலேயே கடவுள் கொடுத்த பரிசு. மத்தவங்க சும்மா சொல்ற மாதிரி நீ ஒன்னும் நெப்போ கிட் கிடையாது, நீ கடவுளின் குழந்தை.

அதுக்கு நான் ஓர் உதாரணமே சொல்றேன். சமீபத்துல நானும் சாய் அபயங்கரும் என்னோட 'ராக்கா' பட வேலைக்காக லண்டன்ல இருக்குற பிரபல 'ஆபே ரோடு' ஸ்டுடியோவுக்குப் போயிருந்தோம்.

ஹான்ஸ் ஜிம்மர் உள்ளிட்ட உலக அளவில் புகழ்பெற்ற இசை ராட்சசர்கள் எல்லாம் வேலை பார்த்த இடம் அது. அங்க இருக்குறவங்களுக்கு நாங்க யாருன்னே தெரியாது. 'யாரவன் கருப்பா கோட்டு போட்டுக்கிட்டு? இவன் யாரு... கூட இருக்குற சின்னப் பையன்? கொஞ்ச நேரம் வெளிய உட்காருங்க'னு முதல்ல சொன்னாங்க.

நாங்களும் வெளியவே உட்கார்ந்திருந்தோம். அப்போ இவன் கொண்டு வந்திருந்த சிம்பனி இசைக்குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை அங்க இருக்குற ஒருத்தர் எடுத்துட்டுப் போய் வச்சாரு.

அங்க 'அவதார்', 'பிளாக் பேந்தர்' படங்களுக்கு ஆர்கஸ்ட்ரேஷன் பண்ண பெரிய பெரிய ஃபாரின் இசைக்கலைஞர்கள் ஒரு 200 பேர் இருந்தாங்க. அந்தப் பேப்பரை விரிச்சுப் பார்த்துட்டு அவங்களுக்குள்ள ஏதோ பேசிக்கிட்டாங்க, எங்களுக்கு ஒண்ணுமே புரியல. வாசிச்சு முடிச்சதும் அத்தனை பேரும் ஒட்டுமொத்தமா எந்திரிச்சு நின்னு கைத்தட்டி ஆரவாரம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.

Director Atlee
Director Atlee

அப்புறம் இவன்தான் இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர்னு தெரிஞ்சதும், ஓடி வந்து இவனைக் கட்டித் தழுவி கொண்டாடுனாங்க. அதிர்ஷ்டத்துல, 'கட்சி சேர', 'ஆசைகூட' மாதிரி தொடர்ந்து ஹிட்டான பாடல்களால் இவனுக்கு இடம் கிடைச்சிருச்சுனு நினைக்கிறோம்.

நான் எழுதித் தர்றேன், தமிழுக்கும், தமிழ் சினிமாவுக்கும், தமிழ் மக்களுக்கும் மிகப்பெரிய பெருமை சேர்க்கப் போற செல்லக்குட்டிதான் நம்ம சாய் அபயங்கர்!" எனப் பேசியிருக்கிறார்.

காக்கா முட்டை : வர்க்க அரசியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 30

`சினி'ஸ்கோப் 30காக்கா முட்டைசின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்றழைக்கப்படும் அண்ணன் தம்பிகளான இரண்டு சிறுவர்கள் சென்னையின் குடிசைப் பகுதியொன்றில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நண்பன் இருக்கி... மேலும் பார்க்க

Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" - 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இன்... மேலும் பார்க்க

Baththa: "அந்த சீன்ல உண்மையாவே அழுதுட்டேன்!" - 'பத்தா' சபரியாக நடித்த சாய் ப்ரித்விராஜ்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்... மேலும் பார்க்க

Jailer 2: "இன்னைக்கு என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்!" - 'ஜெயிலர் 2' டிரெய்லர் ஹைலைட்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவானது 'ஜெயிலர... மேலும் பார்க்க

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​... மேலும் பார்க்க

`ஒரு நாவலாசிரியைக்கும் ஹீரோவுக்குமான நட்பு டு காதல்!' - `நேர்காணல்' குறும்படம் குறித்து இயக்குநர்

குறும்படங்கள் (Short Films) திரைப்படம் மற்றும் கலைத் துறையில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. புதுமுகங்களின் திறமையை வெளிப்படுத்தவும், புதிய இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்ந... மேலும் பார்க்க