டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் எ...
BB Tamil 9: "தவறான குற்றச்சாட்டை வச்சு, என் முதுகில குத்திருக்காங்க.!"- சாண்ட்ரா குறித்து திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 95 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில், தற்போது 6 பேர்தான் இருக்கின்றனர்.
கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வாங்கி வெளியேறிய நிலையில், சுபிக்ஷா கடந்த வாரத்திற்கான எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

இந்த வாரம் பணப்பெட்டி 2.0 டாஸ்க் நடந்து வருகிறது. பழைய போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா, கெமி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் வெளியே சென்றால் எந்த நபருடன் நிச்சயமாக தொடர்பில் இருக்க மாட்டீர்கள் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேள்வி கேட்கப்படுகிறது.
அப்போது "எனக்கும், திவ்யாவுக்கும் ஆரம்பத்தில இருந்தே செட் ஆகல" என்று விக்ரம் திவ்யாவை சொல்கிறார்.

தவிர "என்னை விட இவங்க வாழ்க்கையில முன்னேறி போறாங்களே அப்படின்னு நினைக்கிற நபர் வெளியே போனாலும் நமக்கு தேவையில்ல" என்று வியானா விக்ரமை சொல்கிறார்.
"என் மேல ஒரு தவறான குற்றச்சாட்டை வச்சு, பின்னாடி என் முதுகில குத்தின சாண்ட்ரா கூட நான் என்ன ஆனாலும் தொடர்பில இருக்க மாட்டேன்" என திவ்யா சாண்ட்ராவின் பெயரை சொல்கிறார்.




















