செய்திகள் :

BB Tamil 9: "ரம்யா நீ பார்த்தது தப்பு; நான் உன்னை அப்படி சொல்லவே இல்ல" - சாண்ட்ரா வாக்குவாதம்

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார்.

தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் புரொமோவில் சாண்ட்ரா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அப்போது பிரஜினிடம் பேசிய சாண்ட்ரா, " இந்த 20 நாட்கள்ள நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்'னு புரிஞ்சுக்கிட்டேன்" என்று எமோஷனலாக பேசுகிறார்.

தொடர்ந்து "ரம்யா நீ பார்த்தது தப்பு. நான் உன்னைப் பத்தி அப்படி சொல்லவே இல்ல. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன்" என்று சாண்ட்ரா சொல்கிறார்.

BB Tamil 9
BB Tamil 9

"என்கிட்ட வீடியோ இருக்கு நான் காட்டுறேன். நீங்க என்ன பாம்பு'ன்னு சொன்னது, நம்பக்கூடாதுன்னு சொன்னது இருக்கு காட்டுறேன்" என ரம்யா சாண்ட்ராவிற்கு பதிலளிக்கிறார்.

BB Tamil 9: Day 100: கண்ணில் காதலுடன் அரோ, GVM பட ரொமான்ஸ்; கலங்கவைத்த கனி - 100வது நாள் ஹைலைட்ஸ்

கிளைமேக்ஸில் வில்லன் திருந்துவது போல, கட்டக் கடேசியில் பிக் பாஸ் வீடு பாசிட்டிவிட்டிக்கு திசை திரும்பியிருப்பது மகிழ்ச்சி.துஷார் - அரோ ரொமான்ஸ் ஒரு பக்கம், விக்ரம் -கனி சென்ட்டிமென்ட் இன்னொரு பக்கம் எ... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 99: அரோரா ரொமான்ஸ்; சாண்ட்ரா அழிச்சாட்டியங்களை சொன்ன திவ்யா; முட்டுக்கொடுத்த பிரஜன்!

வீட்டில் இருப்பவர்களும் மீண்டும் வீடு திரும்பியவர்களுக்குமான சந்திப்புகள் நீடிக்கின்றன. துஷார் வருவதற்கு முன்னால் படப்படப்பாகவும் ஆவலாகவும், வந்த பின்னர் தயங்கி பின்னால் நிற்பதும் என்று அரோரா ஒரு ரொமா... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்?

நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9.இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 98: `சாண்ட்ராவை புரிஞ்சுக்கவே முடியலை' திவ்யாவின் வருத்தம்; ஒரு குறும்படம்! ஹைலைட்ஸ்

எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு கோப்பையை கொடுத்து விடுவார்களோ?’ என்கிற பீதியும் சந்தேகமும் ஓடிக் கொண்டிருந்த நிலையில் சாண்ட்ராவின் எவிக்ஷன் நிகழ்ந்தது, தமிழ் சீ... மேலும் பார்க்க