Parasakthi Audio Launch: "சுதாகிட்ட இருந்து ஒரு நடிகரும் தப்பிக்க முடியாது" - மண...
BB Tamil 9: `2 பேருக்கு ரெட் கார்டு' சாண்ட்ராவை உதைத்து தள்ளிய பாரு, கம்ருதீன்; வலுக்கும் எதிர்ப்பு
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 89 நாள்களைக் கடந்துவிட்டது.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.

அந்தவகையில் நேற்று கார் டாஸ்க் நடந்திருக்கிறது. அந்த ஒரு காரில் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும்.
அப்போது சாண்ட்ராவிடம் வாக்குவாதம் செய்த பார்வதி, கம்ருதீன் இருவரும் ஒரு கட்டத்தில் சாண்ட்ராவை காரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளிவிடுகின்றனர்.
குறிப்பாக பார்வதி காலை வைத்து உதைத்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிடுகிறார்.
இதனையடுத்து சாண்ட்ராவிற்கு மயக்கம் வர மருத்துவக்குழு வந்து அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்நிலையில் மோசமான முறையில் நடந்துகொண்ட பார்வதி, கம்ருதீனுக்கு எதிராக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் போட்டியாளரான ஷிவின் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டா பதிவில், "இரண்டு பேரும் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை என்டர்டெயின்ட்மென்ட்டாக எடுத்துக்கொள்ள முடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா பகிர்ந்திருக்கும் பதிவில், " ஒருவரை காலை வைத்து மிதித்து கீழே தள்ளுவது பலம் கிடையாது. அது ஒரு மோசமான செயல்" என்று தெரிவித்திருக்கிறார்.
தவிர ஜாக்குலின் வெளியிட்டிருக்கும் பதிவில், " இந்த வாரம் இரண்டு பேருக்கு ரெட் கார்டு கிடைக்கும். அப்படி நடந்தால் பிக் பாஸில் அது ஒரு சிறந்த தருணமாக இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Evana #paaru#kamarudin hu somba thookitu vandheenga somba thooki thalaiyile adipen
— Avinash Jayavel (@JayavelAvinash) January 2, 2026
Thalli vittitu kadhava moodura avalukunu oru fan page vera
Iam not a #sandra fan but this too much
NOTCOOL. #BiggBoss9Tamil#Paaru#Kamarudin#Sandrapic.twitter.com/NjTJR4xFdS



















