Stephen: "ஒரு Shortfilm-ல ஆரம்பிச்ச கதை தான் Stephen" - Gomathi Shankar & Mithun...
BB Tamil 9 Day 57: `பீலிங்ஸ் ஒண்ணும் கிடையாது' - FJ - ஆதிரை மீட்; வீட்டுத் தலையாக ரம்யா சாதிப்பாரா?
FJ தற்போது வியானாவுடன் ரொமான்ஸிக் கொண்டிருப்பதால் இந்தச் சமயத்தில் ஆதிரையை உள்ளே அனுப்பினால் ஏதேனும் கலகம் நிகழும் என்று பிக் பாஸ் டீம் நினைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் பெரிதாக வெடிக்காது என்று தோன்றுகிறது. இரண்டு நாட்களில் ஆதிரையும் ஜோதியில் கலந்துவிடுவார்.
பிக் பாஸ் வீட்டின் இப்போதைய தலையாய பிரச்னை. கம்மு - அம்மு - பாருவின் டிரையாங்கிள் ரொமான்ஸ்தான். அது முடிவிற்கு வருமா?

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 57
சிவப்பு - பச்சை டாஸ்க்கில் ‘நான் கனியின் நிழலை விட்டு விலகினாதான் உருப்படுவேன். எனவே அவங்களை விட்டு விலகறேன்’ என்று அறிவித்தார் ரம்யா. பதிலுக்கு கனியும் சபரியும் ரம்யாவை விட்டுத் தள்ளியிருப்பதாக அறிவித்தார்கள். இதெல்லாம் ஆட்டத்தின் போக்கில் நிகழ்வது. ஒருவர் individual player ஆக இருப்பது அவரை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
ஆனால் ரம்யா இதை பர்சனலாக எடுத்துக்கொண்டு “இந்த ஆட்டத்துக்கு நான் செட் ஆக மாட்டேன் போலிருக்கு. முன்ன காசு இல்ல. நிம்மதி இருந்தது. இப்ப காசு வந்திருக்கு. ஆனா நிம்மதி போயிடுச்சு.. வெளியே போணும்’ என்கிற மாதிரி கலங்கிக் கொண்டிருக்க “அதையெல்லாம் விடு ‘தல’ போட்டிக்கு செலக்ட் ஆகியிருக்க.. அதுல கான்ஸ்ன்டிரேட் பண்ணு” என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் விக்ரம்.
மற்றவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கு வழிகாட்டுவது, எதிரியாக இருந்தாலும் அவர்களின் வெற்றியைக் கண்டு உண்மையாகவே சந்தோஷப்படுவது போன்றவை விக்ரமின் நல்ல குணாதிசயங்களாக தெரிகின்றன. ஒருவேளை பிக் பாஸ் வீட்டின் சர்வைவலுக்காக இவற்றை வலுக்கட்டாயமாக பாவனை செய்வதாக இருந்தாலும் நல்ல விஷயம்தான்.
ஆனால் பிறகு தல போட்டியில் வெற்றி பெற்ற ரம்யா “என் முயற்சியால்தான் இந்த வெற்றி கிடைத்தது. நானே என்னை லவ் பண்றேன்” என்றுதான் கூறினார். விக்ரம் பற்றி ஒரு வார்த்தையும் சொன்னதாகத் தெரியவில்லை. சட்டென்று உணர்ச்சிவசப்படும் ரம்யா, வீட்டு ‘தல’யாக மிகவும் அவஸ்தைப்படுவார் என்று தோன்றுகிறது.

FJ - ஆதிரை சந்திப்பு - ‘அதுல ஒண்ணும் இல்ல. கீழே போட்ரு’
மக்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த FJ - ஆதிரை சந்திப்பு நடந்தது. ஆனால் பெரிதாக எதுவும் நடக்கவில்லை. “என்ன நடக்குது?” என்று ஆதிரை ஆரம்பிக்க “அதான் வெளியே பார்த்துட்டு வந்திருப்பியே.. சர்காஸமா சிரிக்கற?” என்று சாமர்த்தியமாக நழுவினார் FJ.
“நான்தான் முன்னமே சொன்னேனே.. ஒரு மாதிரி ஃபீலிங்க்ஸ் ஆவுதுன்னு சொன்னே.. அதெல்லாம் வேணாம்ன்னு நான் தெளிவா சொல்லிட்டேன்..” என்று FJ சொல்ல “நான் எப்ப ஃபீலிங்க்ஸ்ன்னு சொன்னேன்.. ஒரு comfortable zone இருக்குது..உனக்கும் எனக்கும் செட் ஆகுதுன்னுதான் சொன்னேன்’ என்று அதை மறுத்துக் கொண்டிருந்தார் ஆதிரை. (காமிரால எல்லாம் ரிகார்டு ஆகும் போதே இப்படிப் பேசறாங்க!)
நாள் 57:
‘வந்துச்சே ஃபீலிங்க்ஸூ’ என்று டைமிங்கான பாடலைப் போட்டார் பிக் பாஸ். ‘ஒண்ணுமே புரியலையே’ என்று பிக் பாஸ் 9 தீம் பாடலை, காமிரா முன்பு வியானா பரிதாபமாக பாடிக்கொண்டிருந்தார். ஆதிரையின் என்ட்ரி அவருக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ‘ஆதிரை எப்படி வெளியே போனாங்க.. நல்லா யோசிச்சுப் பாரு.. உனக்கான விடை அதுல இருக்கு’ என்று ரோபோ முகத்துடன் சொன்னார் சான்ட்ரா. FJவை தலை முழுகி விட்டு தனியாக ஆடத் தொடங்கினால் கொஞ்சமாவது உருப்படலாம் என்று அர்த்தம்.
சுபிக்ஷா எப்போதும் மீனவர் சமூகத்தைப் பற்றியே பிக் பாஸ் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது ஒரு புகாராகவே வருகிறது. மொட்டை கடுதாசி டாஸ்க்கில் கூட ‘சுபி.. கடலை விட்டு வெளியே வாம்மா’ என்று யாரோ (திவ்யா?!) எழுதியிருந்தார்கள். இது தொடர்பாக விக்ரம் தந்த ஆலோசனை பாராட்டத்தக்கது.

“நீ சார்ந்திருக்கிற சமூகம் பத்தின பிரச்னைகளைப் பத்தி தொடர்ந்து பேசற.. நல்ல விஷயம். பாராட்டுக்கள். ஆனா அதுக்குப் பின்னாடி நீ ஒளிஞ்சிட்டு இருக்கற மாதிரி இருக்குது. சுபிக்ஷா யாருன்னு மக்களுக்கு தெரிய வேண்டாமா?” என்று சரியான அட்வைஸை தந்து கொண்டிருந்தார் விக்ரம்.
வீட்டு ‘தல’யாக ரம்யா சாதிப்பாரா? சந்தேகம்தான்
தல போட்டி ஆரம்பித்தது. ஏற்கெனவே தகுதி பெற்றிருந்த ரம்யா, பிரஜினோடு புது என்ட்ரியான ஆதிரையையும் உள்ளே நுழைத்தார் பிக் பாஸ். (உன் வாய்.. உன் உருட்டு என்பது மாதிரி பிக் பாஸ் வீட்டின் விதிகளே கோக்குமாக்கானவை!)
பிஸிக்கல் டாஸ்க் என்றால் ஒருவேளை பிரஜின் ஜெயித்திருக்கக்கூடும். ஆனால் நிதானமாக ஆட வேண்டிய பந்து விளையாட்டு என்பதால் ரம்யா விரைவில் வெற்றி பெற்றார். “இந்த வாரத்துல நான் தனியா ஆடினேன். அதனாலதான் ஜெயிக்க ஆரம்பிச்சிருக்கேன்” என்று பெருமிதமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரம்யா.

நாமினேஷன் சடங்கு ஆரம்பித்தது. வீட்டு தல ரம்யாவையும் ரீ என்ட்ரி ஆதிரையையும் நாமினேட் செய்ய முடியாது. கன்பெஷன் ரூமில் நடந்த நாமினேஷன் என்பதால் காரணங்கள் ரகளையாக இருந்தது. பாருவின் மாதாந்திர அவஸ்தை குறித்து அமித் எள்ளலாக பேசியது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. எனவே அந்தக் காரணத்தை வைத்து அமித்தை குத்தினார்கள்.
‘நீ சாப்பாடுதான் சாப்பிடறியா?’ என்று கம்ருதீன் ஆபாசமாகப் பேசியதால் அவரை நாமினேட் செய்தார் திவ்யா. பதிலுக்கு கம்முவும் திவ்யாவின் பெயரைச் சொன்னார். வீட்டு தல, அஸிஸ் வார்டன் என்கிற இரண்டு பொறுப்புகளையும் சரியாகக் கையாளாத FJ மீதும் வாக்குகள் விழுந்தன. “அவரு பொண்ணுங்களை வெச்சு ‘comfort zone’ ஆட்டத்தை கேவலமா ஆடுறாரு’ என்று காட்டமான காரணத்தைச் சொன்னார் ஆதிரை.
டிரையாங்கிள் டிராமாவை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் பாரு
“பர்சனல் காரணங்களை வெச்சு என்னைப் பழிவாங்கறாங்க’ என்று பாரு குறித்து காரணம் சொன்னார் அரோரா. “சண்டைதான் இங்க என்டர்டெயின்மென்ட்டுன்னு பாரு ஓப்பனாவே சொல்றாங்க. அதைத்தான் கிரியேட்டிவிட்டின்னு நெனக்கறாங்க” என்றார் FJ. “சான்ட்ரா அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பிளே பண்றாங்க” என்பதும் அவர் சொன்ன காரணம்.
இது முடிந்ததும் காரணங்களைச் சொல்லி பெயர்களைச் சொன்னார் பிக் பாஸ். ஆனால் ‘நீ ஊதவே வேணாம்’ என்கிற காமெடி மாதிரி, யார் எதைச் சொல்லியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த அளவிற்கு திறமையாக போட்டுக்கொடுத்தார் பிக் பாஸ்.
இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள், FJ, திவ்யா, கம்ருதீன், பாரு, பிரஜின், அமித், சான்ட்ரா, விக்ரம், வினோத், கனி மற்றும் சுபிக்ஷா. தப்பித்தவர்கள் வியானா மற்றும் சபரி.

காரணங்கள் வெளிப்படையாகத் தெரிந்ததால் “ஏன் அப்படிச் சொன்னே..?” என்று கம்மு அரோராவிடம் கேட்க “அவ என்னை ரொம்ப அவமானப்படுத்தியிருக்கா.. சாணி கரைச்சு ஊத்தினா கூட நீ போவே. என்னால முடியாது.” என்று அரோரா காட்டமாக பதிலளிக்க “அப்படின்னா இனி என் கூட பேசாத’ என்று இருவருக்கும் முட்டிக்கொண்டது.
அரோராவிடம் சண்டை என்பதால் மறுபடியும் பாருவிடம் தஞ்சமடைந்தார் கம்ருதீன். (இவன் இன்னும் திருந்தலை மாமா!) “அவ உன்னை வெச்சு கேம் ஆடறா.. இந்த வாரம் அவ தப்பிச்சிட்டா பாத்தியா?” என்று ஏற்றிக் கொடுத்தார் பாரு.
“நீங்க மூணு பேரும் பண்றது வெளில பார்க்க நல்லா இல்லை. எல்லாமே மெச்சூர்ட் ஆனவங்கதானே?” என்று பாருவிற்கு எச்சரிக்கை மணி அடித்தார் ஆதிரை.
இதனால் ஞானோதயம் பெற்ற பாரு, அரோராவை சந்தித்து ‘இந்த டிரையாங்கிள் டிராமாவை முடிச்சுக்கலாம்’ என்று ஒப்பந்தம் பேச “இங்க பாரும்மா. கம்மு மேல எனக்கு ஒண்ணுமே கிடையாது. நீங்க இப்படியே வெளில போயி பக்கத்து கோயில்ல கூட கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்குப் பிரச்சினையே இல்ல” என்று கையைக் கழுவினார் அரோரா.

வெட்டியாக ஆரம்பித்த பட்டி மன்றம் - ஆண்களா, பெண்களா?
‘ஏதாவது கன்டென்ட் வேணுமே.. இவிங்களை வெச்சிக்கிட்டு இந்த சீசனை எப்படித்தான் நகர்த்தறது?’ என்று தலையைப் பிய்த்துக்கொண்டிருக்க பிக் பாஸ் டீம், ஒருவழியாக ஒரு ஐடியாவை ஆரம்பித்தது. பட்டிமன்றங்களில் வரும் அரதப்பழசான தலைப்பு.
வீட்டை சுத்தமாக நிர்வகிப்பது ஆண்களா அல்லது பெண்களா என்று இருவரையும் மோதவிட திட்டமிடப்பட்டது. ‘யார் நடுவராக இருப்பது?’ என்பதிலேயே பெண்கள் அணிக்குள் தகராறு ஆரம்பித்துவிட்டது.
“அணியில் இருந்து பேசுவதற்குத் திறமையான ஆட்கள் வேண்டும். அப்படி அல்லாதவர்கள் நடுவர்களாக இருக்கட்டும்” என்பது போல் பெண்கள் அணி திட்டமிட்டது அபத்தமானதொன்று. ஒரு நல்ல நடுவர் திறமையாக பேச்சாளராகவும் இருக்க வேண்டும்.
‘நானும் நடுவரா இருப்பேன்’ என்று வம்படியாக எழுந்த வந்த வியானா “எதிர்ப் பக்கம் என்ன பாயின்ட் சொன்னாலும் அதை டிவிஸ்ட் செஞ்சு நம்ம அணிக்கு சாதகமா வர்ற மாதிரி பேசுவேன்” என்று வாயை விட்டு மாட்டிக் கொண்டார்.
‘பாரபட்சமா இருப்பேன்னு ஒரு நடுவரே ஓப்பனா பேசறாங்க. இவங்களை எப்படி ஒத்துக்க முடியும்?” என்று விக்ரம் தலைமையில் ஆண்கள் அணியினர் ஆட்சேபம் எழுப்பினார்கள். எனவே வியானாவை தூக்கி விட்டு அரோராவை நடுவராக மாற்றினார்கள். “டம்மி பீஸா எப்படி ஜெயிக்கறது?’ என்று அரோரா சொன்னதை தனக்கு சொன்னதாக நினைத்துக் கொண்டு கோபித்துக் கொண்டார் வியானா.
பெண்கள் அணி இத்தனை மோதல்களுக்குப் பிறகு நடுவரை அறிவிக்க, ஆண்கள் அணியோ ஒரு சத்தமும் இல்லாமல் மிக சமர்த்தாக நடுவரை தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் அந்தத் தேர்வுதான் கோக்குமாக்காக இருந்தது. கம்ருதீன் நடுவராம்.

அரோரா தந்த பாரபட்சமான தீர்ப்பு - கிச்சானாலே இளிச்சவாயன்தான்
பட்டிமன்றம் ஆரம்பித்தது. முதலில் களத்தில் இறங்கிய சபரி “ஆண்கள் கிச்சன் டீம்ல இருந்தப்ப ஒரு பிரச்சினையும் வரவேயில்ல. கிச்சன் சுத்தமா இருந்தது. விசேவே பாராட்டினார். அதுக்கு அப்புறம் சாம்பார் அணில பெண்கள் வந்தாங்க. ‘கிச்சன் மூடப்பட்டது’ன்னு ஒருமுறை சொன்னாங்க. நாங்க இருந்தப்போ கிச்சனை மூடவேயில்ல. இதுல இருந்தே தெரியலையா.. ஆண்கள் அணிதான் சிறந்தது’ என்று முழங்கினார்.
அதற்குப் போட்டியாக இறங்கிய பாரு, தகுதியான காரணங்களுக்குப் பதிலாக “நாங்கதான் அம்மா மாதிரி இருந்து கருணையுள்ளத்தோட சோறு போட்டோம். அம்மி வெச்சு முதன் முதலா வடை சுட்டது பெண்கள்தான்’ என்று சென்டிமென்ட் தூவிப் பேசினார்.
ஆண்கள் அணியில் அடுத்து இறங்கிய விக்ரம் “அற்ப மானிடன்.. என்னைக் கூட மதிக்க வேணாம்யா.. பிக் பாஸைக் கூட இவங்க மதிக்கலை. தாங்க இருக்கற வீட்டை மட்டும் சுத்தமா கூட்டிட்டு மத்த ஏரியாக்களை அப்படியே விட்டுட்டாங்க. ஜெயிலுக்குப் போறதுக்கு கூட ராத்திரி முழுக்க ராவடி பண்ணாங்க” என்று சான்ட்ரா - திவ்யா சம்பவத்தைப் பற்றி ஆவேசமாக பேசினார். அவர்கள் செய்த அட்ராசிட்டி காரணமாக விக்ரமின் உண்மையான வயிற்றெரிச்சல் வெளியே வந்தது.
இதற்குப் பதிலடி தர வேண்டிய சுபிக்ஷா “திவாகர் ஏன் சமையல் டீம்ல இருந்து ரிசைன் பண்ணாரு.. திவ்யாவிற்கு உடம்பு முடியலைன்னாலும் முடிஞ்ச வரைக்கும் சுத்தம் பண்ணாங்க” என்று பலவீனமாக எதிர் வாதம் வைத்தார். அடுத்து நடந்த FJ - ஆதிரை வாதமும் மோசம்தான்.

‘பெண்கள் அணிதான் வெற்றி பெற்றது’ என்று அரோரா அநியாயமாக அறிவிக்க, கூட இருந்த கம்ருதீன் அசட்டு இளிப்புடன் சும்மா இருந்தார்.
வரவேற்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் நெக்லஸைத் திருட வேண்டிய வீக்லி டாஸ்க்கை இந்த வாரத்தில் பிக் பாஸ் அறிவித்திருப்பது இன்றைய புரொமோவில் தெரிகிறது. இந்த சீசனை எப்படியாவது ஒப்பேற்றி விடுவதற்காக பிக் பாஸ் நிறைய சிரமப்படுகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.



















