செய்திகள் :

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

post image

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள். 


அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறகு நச்சு பரவி மீண்டும் ரவுடி அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த வாரத்தில் ரெட் கார்டு கொடுத்து அவரை அனுப்பினாலும் தவறில்லை. 

‘நெக்லஸை எடுத்து தரேன்’ என்று வினோத்தும் பிரஜனும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மேஜர் சுந்தர்ராஜன் பாத்திரத்தைத்தான் பிரஜன் செய்கிறார் என்பது காலை எக்கி எக்கி பேசுவதில் இருந்து தாமதமாகத்தான் உணர முடிந்தது. அவரது உருவத்திற்கு கெட்டப் பொருந்தவில்லை. நாகேஷ் இன்ஸ்பெக்டர் ரோலில் இருப்பது போல. 

திருமதி. சக்திவேல் கம்ருதீன் என்கிற பெயரை வைத்துக் கொண்டிருக்கிற பாரு, கேரக்டருடன் மிகவும் ஒன்றி விட்டார் போலிருக்கிறது. கம்முவிற்கு கழுத்து மசாஜ் செய்து ரொமான்ஸ் கொண்டிருந்த பாருவைப் பார்க்க தம்பதிகள் மாதிரியே இருந்தது. இவர்களின் உல்லாச நேரத்தைப் பயன்படுத்தி நெக்லஸ் திருட வந்த சுபிக்ஷா, சபரி முழித்துக் கொண்டவுடன் விலகி விட்டார். 

போர்வையை முழுக்க போர்த்திக் கொண்டு பாத்ரூம் பக்கம் சென்றிருந்த பெண்களை வினோத் பயமுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அத்தனை சிரமப்பட தேவையேயில்லை. அந்த விக்கை போட்டுக் கொண்டு அப்படியே சென்றிருந்தால் கூட போதும். ‘வீல்’ என்று அலறிய அரோராவும் சுபிக்ஷாவும் ‘ஏன் இப்படி பயமுறுத்தறீங்க. டாஸ்க்தான்னாலும் இதெல்லாம் நல்லாவேயில்லை’ என்று ஆட்சேபித்தார்கள்.

சான்ட்ரா வருங்காலத்தில் அரசியல்வாதியாக வருவார் போலிருக்கிறது. அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் வந்து அமர்ந்த சுபிக்ஷாவிடம் “இது நான் உக்காந்த சேர். எழுந்திரு” என்று அடம் பிடித்தார். “வேற சோ் எடுத்துக்கங்களேன்’ என்றும் கேட்காமல் சுபிக்ஷாவின் மடியிலேயே அமர்ந்து அழும்பு செய்ய இருவருக்கும் மோதல். “அடிக்கறாங்கப்பா” என்று கதறினார் சுபிக்ஷா. 

இது தொடர்பாக பிரஜனுக்கும் சான்ட்ராவிற்கும் கூட சிறிய சண்டை. இருவரும் உண்மையாகவே மனவருத்தத்தில் விலகியிருக்கிறார்களா, அல்லது ‘ஒண்ணா ஆடறாங்க’ என்கிற புகாரை உடைத்தெறிவதற்காக இப்படி பிளான் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. சான்ட்ரா செய்த அலப்பறையால் சுபிக்ஷா அழ ‘என் குழந்தையை அடிச்சீங்களாமே?’ என்று சப்போர்ட்டிற்கு வந்தார் கனி. 

இந்தச் சண்டை அப்படியே வளர்ந்து ஆதிரைக்கும் வினோத்திற்குமாக மாறியது. “ஏன் அப்படி பயமுறுத்தினீங்க?” என்று ஆதிரை கேட்க “யாரை ஏய்ன்னு சொல்ற.. ஏய்.. ஏய்..” என்று வினோத் AI மோடில் கத்த “வாட்டர் மெலன் வெளியே போனதுக்கு நீங்கதான் காரணம்” என்று ஆதிரை புகார் சொல்ல “அதுக்கு அவர்தான் காரணம். உன்னால எத்தனை போ் போனாங்க தெரியுமா.. அதனாலதான் உன்னை மக்கள் வெளியே அனுப்பினாங்க” என்று வினோத்தும் மல்லுக்கட்ட, அன்றைய தினம் சண்டையுடன் சுபமாக ஆரம்பித்தது. 

ஆதிரையை வினோத் ஒருமையிலும் அவமரியாதையாகவும் பேசியதால் ஆதிரைக்கு ஆதரவாக திவ்யா பேசியது நன்று. “இப்படி கத்தினாதான் அவங்க எழுந்து உள்ளே போவாங்க. நாம நெக்லஸ எடுக்கலாம். அதனாலதான் அப்படி பண்ணேன்” என்று சான்ட்ராவிடம் பிறகு சமாளித்துக் கொண்டிருந்தார் வினோத். 

‘எங்க கிட்ட வேஸ்ட்டா கிரியேட்டிவிட்டி எதிர்பார்க்கறீங்களே பிக் பாஸ்’ - விக்ரம் சுயபகடி

நாள் 59.

“கிச்சன் டீம்ல இருக்கறவங்களே பாத்திரம் கழுவும் வேலையையும் செய்யறாங்க.. நீங்க போய் செய்யலாமில்ல” என்று சான்ட்ராவை வம்புக்கு இழுத்தார் விக்ரம். “நான் நேத்தே என் வேலையை முடிச்சிட்டேன், உங்க வேலையைப் பாருங்க” என்று சான்ட்ரா பதில் சொல்ல இருவருக்கும் மோதல். 

இன்ஸ்பெக்டர் பிரஜன் இதை தட்டிக் கேட்காமல் சும்மா இருந்ததால் “ஏன்யா போலீஸூ.. பார்த்துட்டுதானே இருக்கே. தொட்டிலையும் ஆட்டிட்டு பிள்ளையும் கிள்ளி விடறே. எரியற நெருப்புல எண்ணைய்ய ஊத்தறே” என்று சான்ட்ரா கோபிக்க, “நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது மேடம். என்னை உள்ளே இழுக்காதீங்க” என்று பிரஜன் எஸ்கேப் ஆக, சான்ட்ரா கண்கலங்கினார். 

இப்படி கச்சா முச்சா என்று சண்டையுடன் டாஸ்க் நகர்வதால் “நாங்க பாட்டுக்கு ஷூட்டிங் போயிட்டு பேட்டா வாங்கிட்டு காலத்தைக் கழி்ச்சிட்டு இருந்தோம். எங்களை கூப்பிட்டு வந்து கிரியேட்டிவ்வா டாஸ்க் பண்ணச் சொல்றீங்க.. நாங்க என்ன வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம்.. அதெல்லாம் வராது பிக் பாஸ்.. இப்படி அப்பிராணியா இருக்கீங்களே” என்று தனிமையில் புலம்புவதின் மூலம் சிரிக்க வைத்தார் விக்ரம். 


டாஸ்க்கை இவர்கள் மொக்கையாக கொண்டு செல்வது பிக் பாஸிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே சபையைக் கூப்பிட்டு “டாஸ்க்ல இருந்து வெளியே வந்து ஹவுஸ்மேட்ஸா மாறுங்க.. ஸாரி.. ஏற்கெனவே பாதி போ் அப்படித்தான் இருக்கீங்க” என்று ஆரம்பத்திலேயே ஊமைக்குத்தாக குத்தினார். 

பிறகு நேரடியாக கடப்பாறைக் குத்துகள் இறங்கின. ‘ஒரு டாஸ்க் லெட்டரை கொடுத்து படிக்கச் சொல்லி ரெண்டு மணி நேரம் ஆச்சு.. உங்களுக்காக நாங்க நேரம் செலவு செஞ்சு கேரக்டர்கள் தந்து, அதுக்கு டிரஸ் எல்லாம் தைச்சு.. கொடுத்தா.. ஒரு உபயோகமும் இல்லை. வழக்கமா போடற சண்டையைத்தான் போடறீங்க.. சிம்ப்லி வேஸ்ட். ..


“... இங்க இருக்கவங்கள்ல சில போ் ஆக்டர்ஸ்.. சில போ் அதற்கு முயற்சி செய்யறவங்க.. உங்களுக்காக ஒரு மேடை அமைச்சுக் கொடுத்தா அதை பயன்படுத்திக்க தெரியல. I don't see any fire. உங்களுக்காக சேது கிட்ட பேசி சப்போர்ட் பண்ணி சத்தியம் பண்ணி நான் அசிங்கப்பட்டதுதான் மிச்சம்…


“... இனிமே டாஸ்க் நடுவுல பஸ்ஸர் அடிக்கும். கேரக்டர்ல இருந்து வெளியே வர்றவங்க போட்டில இருந்து வெளியேத்தப்படுவாங்க.. இதையெல்லாம் நான் செய்யக்கூடாது. ஆனா செய்ய வெச்சிட்டீங்க.. வினோத்.. ஆரம்பம்லாம் நல்லாத்தானே இருந்தது.. என்ன ஆச்சு.. இதை நான் எந்த சீசன்லயும் சொன்னது கிடையாது. I disown each and everyone of you. இதை நீங்கதான் இனி சம்பாதிக்கணும். Earn it” என்று கோபமாக சொல்லி விட்டு விலகினார் பிக் பாஸ். 

சுபிக்ஷா அழ, விக்ரம் கண் கலங்கி நீர் கசிய, மற்றவர்கள் மௌனமாக தலைகுனிந்திருந்தனர். “பேய் மாதிரி பயமுறுத்தியது தப்பா போயிடுச்சு. நைட்டு சரியா தூங்கலை பாஸ். அதான்” என்று மன்னிப்பு கேட்டார் வினோத். “உங்க பேரை காப்பாத்தலை. மன்னிச்சிடுங்க பிக் பாஸ்” என்று இன்னொரு மூலையில் அழுது கொண்டிருந்தார் ரம்யா. 


டாஸ்க் லெட்டருக்காக கன்ஃபெஷன் ரூமிற்குச் சென்ற கம்ருதீன், சும்மா திரும்பி வராமல் “பாஸ்.. நான் பண்றது ஓகேவா.. ஏதாவது மாத்திக்கணுமா?” என்று ஒழுங்குப் பிள்ளை போல கேட்க “உன்னையே மாத்த வேண்டியதுதான்’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறினாரோ, என்னமோ “எனக்குத் தெரியாது. உங்களுக்கும் எனக்கும் பர்சனலா ஒண்ணும் கிடையாது” என்று சொல்லி வெளியே துரத்தினார்.

அனைத்தையும் துடைத்துக் கொண்டு வெளியே வந்த கம்மு. டாஸ்க் லெட்டரை உற்சாகமாக வாசிக்க ஆரம்பித்தார். (எப்புட்றா!.. பாரு சகவாசம்!) ‘மாத்தி.. மாத்தி.. மாத்தி’ என்கிற விளையாட்டு டாஸ்க். முட்டையும் பந்தையும் போட்டியாளர் கையில் வைத்திருக்க வேண்டும். பிக் பாஸ் எதைச் சொல்கிறாரோ அந்தப் பொருளை தூக்கிப் போட்டு பிடிக்க வேண்டும். மாற்றிப் போட்டு பிடித்தால் அவுட். 

இன்னொரு விளையாட்டில் கையில் லாலிபாப்பும் சோப்பும் தரப்படும். பிக் பாஸ் lick என்று சொல்லும் போது லாலிபாப்பை சுவைக்க வேண்டும். ‘Smell என்றால் சோப்பை நுகர வேண்டும். (நல்ல வேளை இதை தமிழில் சொல்லியிருந்தால் கந்தரகோளமாகியிருக்கும்!) இந்த ஆட்டத்தில் ரெட்ரோ அணி வெற்றி பெற்று 5 புள்ளிகள் பெற்றது. 


ஆக்ட்டிவிட்டி ஏரியாவில் நடந்து கொண்டிருந்த இந்த டாஸ்க் முடியும் சமயத்தில் பிரஜனும் சுபிக்ஷாவும் விரைவாக ஓடி லிவ்விங் ரூமிற்கு வந்தார்கள். மற்றவர்கள் வெளியே வராதபடி விக்ரம் கதவைப் பிடித்துக் கொண்டார். இதை முன்பே பிளான் செய்திருப்பார்கள் போல. 


எதிரணியின் நெக்லஸை திருடிய பிரஜன், போக்கு காட்டி பாத்ரூம் ஏரியாவில் ஒளித்து வைத்தார். பின்னாலேயே ஓடிவந்த சபரியும் வினோத்தும் சோதனை போட்டும் கிடைக்கவில்லை. பதிலுக்கு பழிவாங்க நினைத்த சபரி, சுபிக்ஷா பார்த்துக் கொண்டிருக்கும் போதே நெக்லஸை எடுத்து போங்காட்டம் ஆடினார். “என் கண் முன்னாடியே எடுத்தாரு” என்று ஆட்சேபம் செய்தார் சுபிக்ஷா. 

கதவை அடைத்து நின்றதால் வினோத்திற்கும் விக்ரமிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பஞ்சாயத்து கூடியது. “அவங்க நெக்லஸ் எடுத்த விதம் சரியில்ல. அப்படின்னா நாங்க செஞ்சதும் கரெக்ட்டுதான். பிக் பாஸ் தப்புன்னு சொன்னா நெக்லஸை திருப்பித் தந்துடறோம்” என்று ரம்யா சொன்னார். 

ரணகளமாக நடந்த பஞ்சாயத்து - முரட்டுத்தனம் காட்டிய கம்ருதீன்


வீட்டு தல பேசிக் கொண்டிருக்கும் போது அதை மதிக்காமல் தன் குரலை ஓங்கி உரக்கச் செய்வதுதான் பாருவின் வழக்கமான ஸ்டைல். இந்தச் சமயத்திலும் அவர் அது போல் எதையோ கத்திக் கொண்டிருக்க “சும்மா இருங்க பாரு.. உங்க பாயிண்ட்டைத்தான் பேசிட்டு இருக்கேன்” என்று ரம்யா பதிலுக்கு கத்த, பதிலுக்கு பாருவும் கத்த வீடு வழக்கம் போல் சந்தைக்கடையாக மாறியது. 

பாருவிற்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவரது பாதுகாவலரான கம்ருதீனும் எழுந்து கத்த “உக்காரு கம்ருதீன்” என்று ரம்யா சொல்ல, இருவருக்கும் சண்டை மூண்டது. ‘போடா.. போடி’ என்று ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். பாருவின் அட்ராசிட்டியைத் தாங்க முடியாத ரம்யா, ஒரு கட்டத்தில் ‘எதிர் டீம் முன்னாடியே என்னை அசிங்கப்படுத்தறீங்களா.? கால்ல வேணா விழறேன்’ என்று எரிச்சலோடு பாருவின் காலில் விழுந்து விட்டு பிறகு அழுது கொண்டிருந்தார். 


வீட்டு தல ரம்யாவை, கம்ருதீன் அவமரியாதையாக பேசியதால், திவ்யா எழுந்து வந்தார். ‘தல பேசும் போது மதிக்க மாட்டீங்களா..?” என்று பொதுவாக கேட்க, அதை தனக்கானதாக எடுத்துக் கொண்ட கம்ருதீன் “அவளை இதுல வர வேணாம்ன்னு சொல்லுங்க..” என்று ஆட்சேபிக்க திவ்யாவிற்கும் கம்ருதீனுக்கும் பயங்கர சண்டை ஆரம்பித்தது. “நீ வெளியே கிளம்பு.. நீ கிளம்பு” என்று இருவரும் மோதிக் கொள்ள, எரிச்சல் தாங்காமல் கையில் இருக்கும் பொருளை தூக்கி எறிந்தார் திவ்யா “என்னை அடிக்க வரா.. பாத்தீங்களா?” என்று உக்கிரமான கம்ருதீன் ஆபாச வார்த்தைகளை இறைத்தார். 

“வார்த்தைகளை விடாத கம்ருதீன்” என்று பிரஜன் தடுத்தாலும் கம்மு அடங்கவில்லை. கூட இருந்து பாரு, கம்முவை தள்ளிக் கொண்டு செல்ல “பாரு.. நீயும் ஒரு பொண்ணுதானே.. இதைக் கேட்க மாட்டியா?” என்று திவ்யா பொங்க “அது வந்து.. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன்” என்று பம்மினார் பாரு. “அவங்க ரெண்டு பேரும் பண்ணதுக்கு வீக்கெண்டுல கிடைக்கும். நீங்க அமைதியா இருங்க” என்று திவ்யாவை சமாதானப்படுத்தினார் எஃப்ஜே. 

கம்ருதீன் செய்யும் அட்ராசிட்டி பற்றி வெளியில் பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் வீக்கெண்ட்ல கம்ருதீன் நல்லா வாங்கி கட்டிக்கப் போறான். அந்த அளவுக்கு வார்த்தையை விட்டிருக்கான்” என்றார் பிரஜன். (இவரே முன்னர் அப்படி அடி வாங்கியவர்தானே?!) “கெமியைக் கூட அடிக்கப் போயிருக்கான். என்னையும் அடிக்க வந்திருக்கான்” என்று பொங்கினார் ஆதிரை. 


ஆக.. பிக் பாஸ் கழுவி கழுவி ஊற்றியும் கூட, ஒரு FUN TASK-ஐ மீண்டும் மீண்டும் சண்டை போட்டு சந்தைக்கடையாக மாற்றிய பெருமை போட்டியாளர்களைச் சாரும். ‘அகங்காரம்’ என்பதைக் கழற்றி வைக்காமல் மனித குலத்தில் சமாதானம் ஒன்று வரவே சாத்தியமில்லை.!

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன்... மேலும் பார்க்க

BB Tamil 9: ``மரியாதையா பேசு கம்ருதீன்; நீ பண்றது தப்பு பாரு'' - காட்டமான திவ்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ் மேட்... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 58: தற்காலிக காதல்கள்; நெருங்கிய நட்பில் பிரஜின் - திவ்யா; நடந்தது என்ன?

முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்... மேலும் பார்க்க