செய்திகள் :

Bhagyaraj: "கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது!" - பாக்யராஜ் பகிர்வு

post image

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாக்யராஜ் நடித்த படங்களில் சண்டைக் காட்சிகளோ, பிரமாண்ட இன்ட்ரோ காட்சிகளோ இருக்காது.

ஆனால், அவர் இயக்கிய படங்களின் மூலம் ஃபேமிலி ஹீரோவாக உருவெடுத்தார். 1984-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், "கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது" என்பதைக் குறிப்பிட்டு அவர் பேசியிருக்கிறார்.

Bhagyaraj
Bhagyaraj

24.10.1984 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழுக்குத் பேட்டியளித்திருந்தவரிடம், "வெகுளியான கதாநாயகன், வண்ண வண்ண ஜிகினா உடையில் பிரம்மாண்ட செட்டில் கனவுப் பாடல், கிராமியச் சூழ்நிலை, கற்பு, பண்பாடு. இந்தச் சின்ன வட்டத்துக்குள்ளேயிருந்து எப்ப வெளிய வரப்போறீங்க?" எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பாக்யராஜ், "ஸாரிங்க! நான் எப்படி இருக்கேனோ அப்படித்தான் இருப்பான் என் கதாநாயகன்.... ஜிகினா டிரஸ்ஸில் கனவுப் பாடல் அதை என்னால் தவிர்க்க முடியாது. கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது.

அவங்க 'சினிமாட்டிக் ஹீரோஸ்'. ஒவ்வொரு காட்சியிலேயும் நல்ல 'காஸ்டியூம்ஸ்'தான் போட்டுக்கிட்டு வருவாங்க. அதனால பாடல் காட்சி வரும்போது அவங்களும் விதம் விதமான டிரஸ் சேஞ்ச் பண்ணிக்க முடியும். என்னால முடியாது. ஏன்னா, என் கேரக்டர்கள் எல்லாமே ரொம்ப எதார்த்தமானவை.

'அந்த 7 நாட்கள்’ மாதவன் ரொம்ப ஏழை. அந்தக் கதாபாத்திரத்திற்குச் சங்கீதம் மட்டும்தான் தெரியும். அவனுக்கு வேஷ்டியும் சட்டையும்தான் காஸ்டியூம். அவன் டூயட் பாடும்போது நல்ல 'ரிச்'சா டிரஸ் பண்ண முடியாது.

டூயட்டே அவன் கனவில்தான் பாட முடியும். அப்ப அதுக்கேத்த மாதிரி கலர் கலர் டிரஸ் போட வைக்கிறேன். அதே போலத்தான் 'மௌன கீதங்கள்' ஹீரோ. அவன் நடுத்தரக் குடும்பஸ்தன்.

அவனும் கனவில்தான் பாட முடியும். 'தாவணிக் கனவுகள்' என் சொந்தப் படம். இதில் பாடல் காட்சியில் நிறைய காஸ்டியூம் உபயோகப்படுத்தாட்டி, சொந்தப் படத்தில் மிச்சம் பண்ணிட்டான்னு சொல்வாங்க.

Bhagyaraj
Bhagyaraj

அதனால கனவுக் காட்சி பாடல் தவிர்க்க முடியாதது. கிராமம், கற்பு, பண்பாடுன்னு ஒரு குறுகிய வட்டம் எனக்குக் கிடையாது. சுவரில்லாத சித்திரங்களிலிருந்து பலவிதமான கதைகள் பண்ணியிருக்கேன்.

'டார்லிங், டார்லிங், டார்லிங்' ஒளிப்பதிவாளருக்காக எடுத்த படம். அசோக்குமார் மாதிரி ஒரு கேமராமேன் இருக்கும் போது, அவருடைய திறமையை உபயோகிச்சுக்கணுமேன்னு கதை தேர்ந்தெடுத்தேன்.

அந்தப் படத்தில் நான் சினிமாட்டிக் ஹீரோ. நீங்க சொல்ற ஜிகினா டிரஸ் அதுல இருக்காது. பொதுவாகவே பாடல் காட்சி படத்தில இருக்கணுங்கிறதுதான் எனக்கு முக்கியம். பாட்டுக்கும், என் படம் ஓடறதுக்கும் சம்பந்தமில்லை. அது ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான். எனக்குச் சங்கீதத்தில் கூட அவ்வளவு டேஸ்ட் கிடையாது." எனத் தெரிவித்திருக்கிறார்.

"அவர் நிஜமான 'ஜனநாயக'னாக வர வேண்டும் என மக்கள் விரும்பினார்கள்!" - 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் கே.வி.என்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' படத்த... மேலும் பார்க்க

``போராடுபவர்களுக்கு லத்திகளும் மௌனமுமே பதிலாய்க் கிடைத்தன" - நடிகை அபிராமி ஆதங்கம்!

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க

"நான் வேலையில்லாமல் வீட்டுல இருக்கேன்; எனக்கு வேலை கொடுங்க" - வடிவுக்கரசி ஆதங்கம்

அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் 'கான் சிட்டி' திரைப்படத்தின் 25-வது நாள் விழா இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்பேசிய நடிகை வடிவுக்கரசி, "இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும... மேலும் பார்க்க

National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ளூ' இயக்குநர் பேட்டி

2024-ம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவித்ததில் இந்த முறை 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா பெற்றிருக்கிறது. அதில் 'ப்ளூ' என்ற குறும்படத்தின் ஒலி வடிவமைப்புக்கு (டி.எஸ்.ஹரிஹரசுதன்) கிடைத... மேலும் பார்க்க

Kajal Aggarwal: ``தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட் இதைக் கத்துக்கணும்" - நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பை... மேலும் பார்க்க

''ஜன நாயகன்' லீக் குறித்து விஜய் ஏன் பேசவில்லை?' - அ. வினோத் அளித்த பதில் என்ன?

அ. வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜன நாயகன்' படம் பல தடைகளுக்குப் பிறகு வரும் ஜூலை 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குநர் அ. வினோத் செய்தியாளர்கள... மேலும் பார்க்க