செய்திகள் :

Bisleri: 'பிஸ்லரி குடிநீர் பாதுகாப்பற்றது' - வழக்குத் தொடர FSSAI அனுமதி

post image

பிஸ்லரி தண்ணீர் பாட்டில் ‘பாதுகாப்பற்றவை’ என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

“ஆய்விற்காக பிஸ்லரி நிறுவனத்தின் வளாகத்திலிருந்து ‘தொகுக்கப்பட்ட குடிநீர் (மினரல் வாட்டர் தவிர்த்த)’ என்ற வகையின் கீழ், சட்டப்பூர்வ மாதிரி ஒன்று சேகரிக்கப்பட்டது.

அந்த மாதிரியில் நிர்ணயிக்கப்பட்ட புரோமேட் அளவுகள் பொருந்தாமல் இருந்ததால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் அது ‘பாதுகாப்பற்றது’ என அறிவிக்கப்பட்டது.

பிஸ்லரி
பிஸ்லரி

உணவு வணிக இயக்குநரின் மேல்முறையீட்டின் பேரில், அந்த மாதிரி பரிந்துரை உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது; அங்கு பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பது கண்டறியப்பட்டதால், அது பாதுகாப்பற்றது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வக முடிவுகளின்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் பாதுகாப்பற்ற உணவை விற்பனை செய்தல் தொடர்பான விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பிஸ்லரி நிறுவனத்தின் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.”

புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்களில் புற்றுநோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனத்திற்கு ரூ.110 கோடி முதலீடு - அடுத்தகட்ட வளர்ச்சிக்கு புதிய உத்வேகம்!

கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபலமான ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம், தனது அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆய்ரா வென்ச்சர்ஸ் (Ayra Ventures) தலைமையில... மேலும் பார்க்க

ஹாலிடே இன் பை IHG ஹோட்டலில் கிருஸ்துமஸ் கேக் கொண்டாட்டம்!

கிறிஸ்துமஸ் கேக் உருவாகும் பின்னணியில் இருக்கும் சுவையான பாரம்பரியம்!" கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே வண்ண விளக்குகள், அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள், பரிசுப் பொருட்கள் மட்டுமின்றி சுவையான கேக்குகள... மேலும் பார்க்க

Gym Guys! Half Boil, பச்சை முட்டை சாப்பிடாதீங்க; 'இந்த' முறையில் சாப்பிடுவது தான் Right!

ஜிம்முக்குச் செல்பவர்கள், தசைகளை வலுப்படுத்த விரும்புபவர்கள் பலரும் பச்சை முட்டையையும், ஹாஃப் பாயிலையும் புரதத்துக்காகத் தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஹாஃப்பாயில் முட்டையில்தான் சத்து அதிகமா? முழுமையாக... மேலும் பார்க்க

ரூ.600-க்கு ஒரு கிலோ மட்டன்! கிலோ கணக்கில் அள்ளும் மக்கள்: சிவகங்கை பனங்குடி 'நாட்டின்' அதிரடி மாடல்

இன்றைய காலகட்டத்தில் கறிக்கடை வாசலில் நிற்கும்போதே பர்ஸ் பதைபதைப்பது அசைவப் பிரியர்களுக்கு வழக்கமான ஒன்றுதான். சிவகங்கை, காரைக்குடி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் வெள்ளாட்டுக் கறி கிலோ ரூ.1,000 முதல் ரூ... மேலும் பார்க்க

முறுக்கு ருசி: கைச்சுற்றில் பிறக்கும் சுவை... 25 ஆண்டுகளாகத் தொடரும் தீபாவளி பாரம்பர்யம்! - வீடியோ

தீபாவளி வரப்போகுதுன்னாலே வீட்டில் என்னென்ன பலகாரம் செய்யலாம் என்ற பேச்சு ஒருபுறம் தொடங்கிவிடும். முறுக்கு, அதிரசம், ஜாங்கிரி என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ரசிகர்கள் இருப்பார்கள். சிலருக்கு முறுக்கின் மொ... மேலும் பார்க்க

மணகோலம் முதல் சீப்புச் சீடை வரை... காரைக்குடி தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள்!

சகாரைக்குடி என்றாலே நினைவுக்கு வருவது செட்டிநாட்டின் பிரம்மாண்டமான வீடுகளும், மணம் கமழும் சமையலும், தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வரும் பாரம்பர்ய உணவுகளும்தான். அந்தப் பாரம்பர்யத்தின் சுவையை இ... மேலும் பார்க்க