செய்திகள் :

Bottle Radha: ''எனக்கு கதை சொல்ல வரலைன்னு பா.ரஞ்சித் திட்டுவாரு!'' - இயக்குநர் தினகரன் சிவலிங்கம்

post image
இன்று நம் சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னையை மக்களுக்கு எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியிருக்கிற `பாட்டல் ராதா' திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிறார். படம் தொடர்பாக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

ஸ்கிரிப்ட் எழுதிய பிறகு தனியாக டைரக்ஷன் பண்ணலாம்னு நினைச்ச தினகரனின் மனநிலை என்னவாக இருந்துச்சு?

நான் `கபாலி' படத்துல வேலை பார்க்கும்போது ஸ்கிரிப்ட் எதுவும் பண்ணல. எழுத முயற்சி பண்ணுவேன் அனா வராது. ஐடியாஸ் மாதிரி மட்டும் எழுதி வைப்பேன். `காலா' முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு பயங்கர ரெஸ்பெக்ட் கிடைச்சது. அனா அது எனக்கு பயமாதான் இருந்தது. ஏன்னா இது எல்லாமே ரஞ்சித்தோட உழைப்பு. நாம் இப்படியே இருந்தா இதுல லாஸ்டாதான் வருவேம்னு தோணுச்சு. பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் அர்னால்ட் டாயின்பீ (Arnold Joseph Toinbee ) புத்தகங்கள் இருக்கு. அந்தப் புத்தகத்துல `நம்மளுக்கு தெரியுதோ தெரியலையோ தினமும் நமக்கு புடிச்ச விஷயத்தை செய்ய முயற்சி பண்ணனும்'னு சொல்லியிருப்பாங்க. அதுக்கு அப்புறம்தான் நான் எழுதவே தொடங்கினேன்.

தினகரன் சிவலிங்கம்

நீங்க எழுதின முதல் கதை கோவிட் போன்ற புறச்சூழல்களாலதான் திரைப்படமாக உருவாகவில்லையா?

நிறைய டிராவல் பண்ற மாதிரி இருந்தது. அதுக்குப் புறச்சூழல்களும் ஒரு காரணமாக இருந்ததுச்சு. தயாரிப்பாளர்கிட்ட கதையை சொல்லப்போனால் 150 பக்கம் கதையை ரெண்டு நிமிஷத்துல இல்ல பத்து நிமிஷத்துல சொல்ல சொல்றாங்க. எனக்கு எப்படி சொல்லணும்னு தெரியல. `நீ கதை நல்லா தானே எழுதற. அந்த கதையா சொல்லக்கூட உனக்குத் தெரியாதா?'ன்னு ரஞ்சித் திட்டுவாரு.

ராதாமணி என்ற கேரக்டருக்கு `பாட்டல் ராதா' அப்படிங்கிற புனைபெயர் வைக்கணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு. அதுதான் படத்தோட டைட்டிலாக இருக்கணும்னு எப்படி முடிவு பண்ணீங்க?

`பாட்டல் ராதா' என்ற பெயர் கேக்குறதுக்கு மாஸாக இருந்துச்சு. அதே போல அந்தக் கேரக்டர் டம்மி பீசாவும் இருக்கணும். அதேபோல நிறைய ஆடியன்ஸை கவர் பண்ணனும்னு தான் இப்படி வெச்சோம்.

பாட்டல் ராதா படத்தில்...

ராதா மணி என்ற கேரக்டருக்கு ஃபஹத் ,தினேஷ் போன்றவர்களை வைத்து பண்ணலாம் அப்படின்னு தான் ஃபர்ஸ்ட் முடிவு பண்ணீங்களா?

முதல்ல அந்தக் கேரக்டருக்கு வடிவேலு, யோகி பாபுன்னு காமெடியாக யோசிக்கலாம்னுதான் இருந்தோம் . லைவ் லொகேஷன்ல இறங்கி வேலை பாக்குற மாதிரி இருக்கணும். பெரிய பட்ஜெட்லையும் பண்ண முடியாது. அப்புறம்தான் புதுமுக நடிகர்களை வச்சு இந்தப் படத்தை பண்ணலாம்னு முடிவு பண்ணினோம்.

Sanchana Natarajan

சஞ்சனா நடராஜன் தான் அஞ்சலம் கதாபாத்திரத்துல நடிக்கணும்னு எப்படி முடிவு பண்ணுனீங்க?

சஞ்சனா ரொம்ப நல்ல நடிகர். சஞ்சனாவை எனக்கு ரஞ்சித்தான் பரிந்துரைப் பண்ணினார். அவங்க ரொம்ப எளிமையா, அழகா அந்தக் கதாபாத்திரத்தை பண்ணியிருந்தாங்க.

BADGIRL: விருது வென்ற வெற்றிமாறன் உதவியாளர் படம்; திரைப்பட விழாவில் கவன ஈர்ப்பு!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் `பேட் கேர்ள்' திரைப்படம் இந்தாண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அங்கு இ... மேலும் பார்க்க

``விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல" - சுசீந்திரன்

"2K லவ் ஸ்டோரி படத்துல ஒரு தனித்துவமான க்ளைமாக்ஸ் காட்சி இருக்கு. எப்படி 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துல அந்த பசங்க வாழ்கையோட கதை பயணிக்குமோ அதே மாதிரி தான் இந்தப் படத்துலயும் பசங்க வாழ்க்கைகூடவே பயணம... மேலும் பார்க்க

Amaran 100: `முகுந்தை நிலையாகக் கொண்டுள்ள இந்துவின் உலகம்தான் அமரன்' -ராஜ்குமார் பெரியசாமி உருக்கம்

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் இயக்கதில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் 'அமரன்'.ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ம... மேலும் பார்க்க

ரூ.80 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை... காரணம் என்ன?

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் காஞ்சனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடா என பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்தர் போன்ற முன... மேலும் பார்க்க

``என் மனைவிக்கு அதை ஒருபோதும் பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன்!'' - நடிகர் பொன்வண்ணனுடன் ஒரு சிட் சாட்!

சின்னத்திரையிலும் அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன்.சமீபத்தில் `உப்பு புளி காரம்' வெப் சீரிஸ் மூலம் பல குடும்பங்களுக்கும் ஃபேவரைட்டானவர் தற்போது புதியதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் `கெட... மேலும் பார்க்க