கோவிட் காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி - நாளை கலந்தாய்வு!
Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'! RBI சென்னை கிளையில் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்!
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
அசிஸ்டென்ட் பணி
மொத்த காலிப்பணியிடங்கள்: 650; சென்னை 53.
வயது வரம்பு: 20 - 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ஆரம்ப சம்பளம் ரூ.29,000; இப்போது இந்தப் பணிக்கு மாதாந்திர மொத்த ஊதியம் ரூ.58,514.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
குறிப்பு: விண்ணப்பிப்பவர்களுக்கு அந்தந்த மாநில மொழி எழுத, படிக்க, பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு, ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு, மொழித் திறன் தேர்வு.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோயில் அல்லது கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், புதுச்சேரி.
ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மதுரை, சேலம், புதுச்சேரி.
தேர்வு தேதிகள்:
ஆன்லைன் பிரிலிமினரி தேர்வு: ஏப்ரல் 11, 2026
ஆன்லைன் மெயின்ஸ் தேர்வு: ஜூன் 7, 2026
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 8, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!





















