செய்திகள் :

CJP: ``நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகரிலும் எதிரொலிக்கிறது" - உதயநிதி

post image

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசு தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த சமூக ஆர்வலர் சோனம் வான்சுக் 21 நாள்களைக் கடந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரை காவல்துறை வலுகட்டாயமாக அப்புறப்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்தது.

அதைத் தொடர்ந்து சிஜேபி அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அபிஜித் திப்கே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா
cjp அமைப்பினருடன் ஜே.பி.நட்டா

ஆனால் இதுவரை மத்திய அரசு தரப்பிலிருந்து யாரும் போராட்டக்காரர்களிடம் பேசவே இல்லை. இதற்கிடையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. அதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி சிஜேபி போராட்டக் குழுவினர் அமைதிப் பேரணியை நடத்தினர்.

அப்போது இணையதளம் துண்டிக்கப்பட்டது. மேலும், போராட்டக்காரர்களைக் கலைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை கண்ணீர் புகைகுண்டு, தடியடி உள்ளிட்ட தாக்குதல்களைத் தொடங்கியது.

இதில், பெண்கள், கல்லூரி மாணவர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கிடையில், சிஜேபி குழுவினர் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கியிருக்கின்றனர்.

ஜே.பி.நட்டாவும் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதே நேரம், மத்திய அமைச்சர் எங்கள் கோரிக்கை குறித்து எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை என்பதால், எங்கள் போராட்டம் அமைதிவழியில் தொடரும் என சிஜேபி தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, காவல்துறை போராட்டக்காரர்களை அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்த தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் கிடைக்கின்றன. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, விவாதமாகிவருகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``நீட் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்ட சிஜேபி (CJP) இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அடாவடித்தனத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

டெல்லியில் இருந்து வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன. இளைஞர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசு தனது காவல் படையைக் கொண்டு பதிலளித்து வருகிறது. இது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல், நாட்டின் தலைநகர் உட்பட தேசம் முழுவதிலும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. நாட்டின் இளைஞர்களின் கோரிக்கை தெளிவாக உள்ளது. அவர்களுக்குச் செவிசாயுங்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெயர் மாறிய 'தாயுமானவர்' திட்டம்? 'நான் முதல்வன்', 'விடியல்' வரிசையில் தவெக அரசின் அடுத்த மாற்றம்?

திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை தவெக அரசு 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்தது நினைவிருக்கலாம். அதேபோல மகளிர் இலவசமாகப் பயணம்... மேலும் பார்க்க

பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிமொழி கண்டனம்

முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்த விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறையில், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி... மேலும் பார்க்க

'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.Cockroach Protestநீட் வினாத்தாள் கசிவுக்க... மேலும் பார்க்க

திமுக பொதுச்செயலாளராகிறாரா கனிமொழி? தகவலும் பின்னணியும்!

தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் லண்டன் சென்று திரும்பிய நிலையில், கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள் உடன்பிறப்புகள். மேலும் வயது மூப்பு காரணமாக பொதுச்செயலாளர் து... மேலும் பார்க்க

CJP: ``மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பிரதமர் ஏன் இன்னும் அமைதிகாக்கிறார்" - ராகுல் காந்தி கேள்வி

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க