தொகுதி் பங்கீடு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த அறிவாலயம்... விசிக-வின் கணக்கு என்ன?
Congress: '39 லட்சியம்; 30 நிச்சயம்! - அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு
திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அறிவாலயம் வந்திருக்கிறது.

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச கடந்த நவம்பரில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்திருந்தார். மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர் அமைச்சரவையில் பங்கு, அதிக சீட்டுகள் என டிமாண்ட் ஏற்ற கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வரை தனியாக சந்தித்து பேசிய பிறகுமே கூட இருதரபுக்கும் உடன்பாடு எட்டப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கிரிஷ் சோடங்கர், 'விஜய் உட்பட எல்லா கட்சியிடமும் பேசுவோம்' எனக் கூறியது மீண்டும் கூட்டணிக்குள் புயலை கிளப்பியது.

இந்நிலையில், இன்று (பிப்28) காங்கிரஸின் குழுவுக்கு திமுகவின் தொகுதி பங்கீடு குழுவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 11:05 மணிக்கு கிரிஷ் சோடங்கர் தலைமையில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் போன்றோரை உள்ளடக்கிய காங்கிரஸ் குழு அறிவாலயத்துக்கு பேச்சுவார்த்தைக்காக வந்திருக்கிறது. காங்கிரஸ் எதிர்பார்ப்பது 39 சீட்டுகள் எனவும் குறைந்தபட்சம் 30 சீட்டுகளுக்குள்ளாவது முடிக்க நினைப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.















