செய்திகள் :

Cricket: கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் மரணம்; விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல்!

post image

இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது மறைவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமன்பிரீத் சிங் கில் ஒரு திறமையான வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். 2006 முதல் 2008 வரை பஞ்சாப் அணிக்காக 6 முதல்தர போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007-ல் இங்கிலாந்து, மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்குச் சென்ற இந்திய இளையோர் அணியில் இடம்பெற்றிருந்தார். பல ஒருநாள் போட்டிகளிலும், ஒரு மூன்று நாள் "டெஸ்ட்" போட்டியிலும் விளையாடியுள்ளார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

Amanpreet Singh Gill
Amanpreet Singh Gill

அமன்பிரீத் சிங் மரணம் கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அமன்பிரீத் சிங் இழப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது எக்ஸ் பக்கத்தில், ``அமன்பிரீத்தின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அந்த இறைவன் வழங்கட்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.

அமன்பிரீத் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் கைகளில் கருப்பு நிறப் பட்டை அணிந்து விளையாடினர்.

யுவராஜ் சிங்,``அமன்பிரீத் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மற்றும் அடக்கமான வீரர். கிரிக்கெட் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் இழப்புக்கு வருந்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. வீரராக மட்டுமல்லாமல், பஞ்சாப் மாநில சீனியர் தேர்வுக்குழு உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை சங்கம் பாராட்டியுள்ளது.

மறைந்த அமன்பிரீத் சிங்கின் இறுதிச்சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் சண்டிகரில் உள்ள மணிமஜ்ரா மயானத்தில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

SRH vs PBKS: "அதில் கோட்டை விட்டுவிட்டோம்; தோல்விக்கு அதுவே காரணம்!" - ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று (மே 6) நடைபெற்ற பஞ்சாப் vs ஹைதராபாத் போட்டியில், 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது ஹைதராபாத் அணி. SRH vs... மேலும் பார்க்க

CSK : தோனிக்கு என்னதான் பிரச்னை? அவர் ஏன் மைதானத்துக்கு வருவதில்லை? - தெளிவாக விளக்கும் மைக் ஹஸ்ஸி!

சென்னை அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதும் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் மைக்... மேலும் பார்க்க

'என்னா பங்கு இப்படி ஆயிடுச்சு?' - சன்ரைசர்ஸிடமும் அடிவாங்கிய மும்பை!

புள்ளிப் பட்டியலில் பெரியளவில் மாற்றமில்லை, இருப்பினும் இந்த ஒரு போட்டியின் முடிவு சன்ரைசர்ஸை பிளே ஆஃப்புக்கு அருகாமையிலும் மும்பை இந்தியன்ஸை அதைவிட்டு தள்ளியும் வைத்துள்ளது.!இரு வெற்றிகளை மட்டுமே நடப... மேலும் பார்க்க

IPL: டிரெஸ்ஸிங் ரூமில் தடை செய்யப்பட்ட E-Cigarette பயன்படுத்திய ரியான் பராக்? தீயாய் பரவும் வீடியோ

ஐபிஎல் தொடரில் நேற்று(ஏப்ரல்28) பஞ்சாப் vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமி... மேலும் பார்க்க

'உங்கள் லட்சியங்களுக்கு 100% நேர்மையாக இருங்கள்; எனக்கு 8 வயது இருக்கும்போதே.!'- கோலி அறிவுரை

நட்சத்திர வீரரான விராட் கோலி டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று (ஏப்ரல். 28) கிரிக்கெட் அகாடமியை திறந்து வைத்திருக்கிறார். திறப்பு விழாவில் கலந்துகொண்ட கோலி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். ... மேலும் பார்க்க