செய்திகள் :

Cuba: அமெரிக்கா உடன் இணைகிறதா கியூபா? - ட்ரம்ப் கொடுக்கும் அதிர்ச்சி ஹின்ட்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 'கிரீன்லாந்து' மீதிருந்த டார்கெட் சென்று, இப்போது 'கியூபா'விற்கு வந்திருக்கிறது போலும்.

நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்‌ ட்ரம்ப். அப்போது அவரிடம்‌ அமெரிக்காவிற்கு ஈரான், கியூபா போன்ற நாடுகளுடன் இருக்கும் பிணக்கு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அமெரிக்காவின் கைகளுக்கு செல்கிறதா கியூபா?

.

இந்தக் கேள்விக்கு ட்ரம்ப், "கியூபா அரசு நம்மிடம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் பெரிய பிரச்னையில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அவர்களிடம் பணம் கிடையாது. அவர்களிடம் இப்போது ஒன்றுமே கிடையாது. அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

ஒருவேளை, தோழமை ரீதியில் கூட, நாம் கியூபாவைக் கைப்பற்றலாம்.

அவர்களிடம் இப்போது பணம் இல்லை, எண்ணெய் இல்லை, உணவு இல்லை. அதனால், அவர்களுக்கு நமது உதவி தேவைப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவு செயலர்‌ மார்கோ ரூபியோ இந்த விஷயத்தைக் கையாண்டு வருகிறார்" என்று பதிலளித்துள்ளார்.

கியூபா...

கியூபா என்றால் கம்யூனிஸம் என்பது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட்‌ கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது.

கியூபாவில் பொருளாதாரம் சரிந்து கிடக்கிறது. வெனிசுலா அதிபரை ட்ரம்ப் சிறைபிடித்ததில் இருந்து கியூபாவிற்கு கிடைக்கும் நிதி உதவி சுணங்கி உள்ளது... அவர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த மானிய விலையிலான எண்ணெய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கியூபா
கியூபா

இந்தச் சூழலை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார். ஏற்கெனவே, கடந்த இரண்டு மாதங்களாக கியூபாவில் ஆட்சி மாற வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்‌ தான்.

தனது அண்டை நாடான கியூபா தனக்கு எதிராகவும், தன் போட்டி நாடுகளுக்கு தோழராகவும் இருப்பது அமெரிக்காவிற்கு சிக்கல் தான். அதனால், கியூபாவைக் கைப்பற்ற பார்க்கலாம் ட்ரம்ப்.

ஆக, கியூபா அமெரிக்காவின்‌ 51-வது நாடாக மாறுமா‌‌ என்பதற்கு விரைவில் காலம்‌ பதில் சொல்லுமோ?

'விஜய்யே மன உளைச்சலில் இருப்பார்!' - அறிவாலயத்தில் கருணாஸ் பேட்டி

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ், பேச்சுவார்த்தை மகிழ்ச்சியாக சென்றதாக கூறினார்.கருணாஸ்அவர் பேசியதாவது, 'மீண்டும் திமுகவ... மேலும் பார்க்க

"தேர்தலில் தனித்து நிற்க காங்கிரஸிற்கு தைரியம் இல்லை.!" - குஷ்பு சாடல்

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் குஷ்பு சென்னை விமான நிலையத்தில் இன்று( பிப். 28) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். காங்கிரஸ் - திமுக காங்கிரஸ் கட்சியினர், திமுகவிடம் பேரம் பேசிக் கொண்டிருக்கின... மேலும் பார்க்க

'ஆம்லெட்டும் வடையும் சாப்பிடாத ஒரே கட்சி' - தனியரசுவின் வினோத பெருமிதம்!

அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நாங்கள் ஒரு ஏழைக்கட்சியென ஜாலியாக பேச... மேலும் பார்க்க

மீண்டும் ஒரு போர்.... பற்றி எரியும் Iran - அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல்

இன்று அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டு நாடுகளுமே ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதல் ஈரானின் உச்ச தலைவர்‌ காமேனியின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி, ஈரானின் தலைநகரான டெஹ்ரான், அணு ஆயுத பகுதிக... மேலும் பார்க்க

'6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்!' - என்ன சொல்கிறார் வேல்முருகன்

அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார்.வேல்முருகன்அவர் பேசியதாவது, 'தவாகவுக்கு கூட... மேலும் பார்க்க

'விஜய்யின் கதை நேற்று மாலையோடு முடிந்தது!' - அறிவாலயத்தில் தமீமுன் அன்சாரி!

அறிவாலயத்தில் திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது விஜய் குறித்த அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படு... மேலும் பார்க்க