Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும...
Delimitation: "என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" - திமுக-வின் நிலைப்பாடு குறித்து திருச்சி சிவா
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.
திமுகவின் இந்தத் திடீர் நிலைப்பாட்டிற்குப் பின்னால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா இருக்கிறார் என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இது குறித்து விளக்கித் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திருச்சி சிவா...
“என் பெயரை இழுத்துச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இழிவான, மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மன உளைச்சலைத் தருகின்றன.
Derogatory, exaggerated news spreading on social media taking my name is bothering.
— Tiruchi Siva (@tiruchisiva) November 28, 2026
It was only the adoption of a resolution in the DMK MPs meeting which was later released to media whereas some postings on social media are exaggerating using my name.
I request all to…
அது வெறுமனே திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட விஷயம் மட்டுமே; ஆனால் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகள் என் பெயரைப் பயன்படுத்தி மிகைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்போது தயவுசெய்து என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்”














