Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும...
Delimitation: ஸ்டாலினைச் சந்திக்க வரும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்; என்ன சொல்கிறார் ராகுல் காந்தி?
தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேச ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வருகிறார்கள்.
இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
''‘இந்தியா’ கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் சென்னை சென்று, திரு.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை எதிர்க்குமாறு அவரையும் திமுகவையும் கேட்டுக்கொள்ளப் போகிறோம்.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
— Rahul Gandhi (@RahulGandhi) November 29, 2026
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw…
இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிப்பது இந்தியாவில் ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடும். இந்தியா முழுவதுமான தேர்தல் வரைபடத்தைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றி அமைக்க பாஜக - ஆர்எஸ்எஸ்-க்கு இது வரம்பற்ற இடத்தைக் கொடுத்துவிடும்.
தமிழ்நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அண்ணன் ஸ்டாலின் எப்போதும் ஒரு பாறை போல உறுதியாக நின்றிருக்கிறார். நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாம் அனைவரும் சேர்ந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்''














