செய்திகள் :

செஞ்சி சிறுமி மாயம்: "கட்டி வைத்து அடித்தனர்" – சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார்

post image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல் போன வழக்கு விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று கை, கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக இளைஞர்கள் குற்றச்சாட்டு.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்பியை நேரில் சந்தித்து சிபிசிஐடி போலீசாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்கள் புகார் அளித்ததால் பரபரப்பு.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த போது கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை திடீரென காணாமல் போனார்.

சிறுமி காணாமல் போய் இன்றோடு 47 நாட்களான நிலையில் 37வது நாளாக இன்று சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் தாய், தந்தை, பாட்டி, சகோதரி, உறவினர்கள், அக்கம், பக்கத்து வீட்டினர், கிராம பொதுமக்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் சிறுமியின் வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலம், செங்கல் சூளை, மலைப்பகுதிகள், வனப்பகுதி, சிறுவாடி காப்புக்காடு உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய், வனத்துறையினர், ஆயுதப்படை காவலர்கள் உதவியுடன் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையும் நடத்தி வருகின்றனர்.

இளைஞர்கள் புகார்

சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் கீதா, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் 50 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் தனித்தனிக் குழுக்களாக பிரிந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் இருந்த சாம்பல்களை எடுத்து சல்லடை மூலம் சலித்தெடுத்து தடயவியல் துறை நிபுணர்களால் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் வசித்து வரும் ரேணு, ராஜ்குமார், கமல்ராஜ் உள்ளிட்ட 3 இளைஞர்களையும் விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அடிக்கடி நேரில் வரவழைத்து கை, கால்களை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் ரேணு என்ற இளைஞர் கர்நாடகா மாநிலத்தில் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். ராஜ்குமார் ஆலம்பூண்டியில் செல்போன் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். கமல்ராஜ் சென்னையில் டாடா ஏஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்த மூன்று இளைஞர்களுமே ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, காணாமல் போன சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்கள் என்பதால் சந்தேகத்தின் பேரில் இந்த 3 இளைஞர்களிடமும் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விசாரணையின் போது இந்த மூன்று இளைஞர்களையும் அடித்து உடல் ரீதியாக துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீசார் மீது குற்றம் சாட்டி, தங்களை அடித்து துன்புறுத்தி வரும் சிபிசிஐடி போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணனை பாதிக்கப்பட்ட 3 இளைஞர்களும் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

எங்களை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் துன்புறுத்தி டார்ச்சர் செய்ததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு சென்றுவிட்டோம் என்றும் 2 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம் குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் தலைவர்கள் பட்டியல்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக கொடுத்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைக்க சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இரண்டு தனி விமானங்களில் வரும் தலைவர்கள் யார் யார் என்கிற பட்டியல் ... மேலும் பார்க்க

Delimitation: "என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" - திமுக-வின் நிலைப்பாடு குறித்து திருச்சி சிவா

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.திமுகவின் இந்தத் திடீர் நிலைப்பாட்டிற்குப் பின்னால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவ... மேலும் பார்க்க

Delimitation: ஸ்டாலினைச் சந்திக்க வரும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்; என்ன சொல்கிறார் ராகுல் காந்தி?

தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேச ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வருகிறார்கள்.இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பத... மேலும் பார்க்க

”காவிரி பிரச்னையை உன்னிடம் முறையிடுகிறேன்” - பெரியகோயில் பெருவுடையார் சன்னதியில் வைகோ தரிசனம்

தஞ்சாவூரில் மதிமுக சார்பில், கர்நாடகா அரசு மேகதாதுவில், அணை கட்டுவதையும், அதற்கு உறுதுணையாகச் செயல்படும் மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளி... மேலும் பார்க்க

திருவள்ளூர்: 18 ஏக்கர் பலபயிர் சாகுபடி; பீனா நிர்மலின் (V2M) இயற்கைப் பண்ணை | Photo Album

செங்கல்பட்டு: ரசாயன நச்சுத்தன்மை இல்லாத 100 வகை காய், கனி, கீரை... | Photo Album மேலும் பார்க்க

Delimitation: 'திமுகவின் ஆகஸ்ட் மாத நிலைப்பாடு இது' - திமுக ஆதரித்த தீர்மானத்தைப் பகிர்ந்த சிதம்பரம்

அனைத்து மாநிலங்களுக்குமே 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் 50 சதவீத தொகுதி உயர்வு...அடுத்த 25 ஆண்டுகளுக்கு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை இல்லை என்கிற நிலைப்பாட்டைத் தற்போது எடுத்துள்ளது... மேலும் பார்க்க