செய்திகள் :

Delimitation: "நாங்கள் நடத்த விடமாட்டோம்" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்

post image

எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளிடையே நாளை(ஏப்ரல்.16) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.

இதில் தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

மோடி, அமித்ஷா
மோடி, அமித்ஷா

தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்க முயற்சி நடப்பதாகக் கூறியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இதற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அதேபோல தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனது எதிர்ப்பைத் தெரிவித்திருகிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப் பதிவில், "தோல்வியின் பயம் தெளிவாகத் தெரிகிறது. அதனால்தான் இந்த அரசு தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் திணிக்க முயல்கிறது.

பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது, நமது கூட்டாட்சி கட்டமைப்பை ஆபத்துக்குள்ளாக்கும். இந்த முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது. இதை நாங்கள் நடக்க விடமாட்டோம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

"மீண்டும் ஸ்டாலினிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடு தாங்காது" - இபிஎஸ், டிடிவி கூட்டுப் பிரசாரம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து பிரசாரம் செய்தனர்.... மேலும் பார்க்க

Delimitation: '39 தொகுதிகளுக்குப் பதில் தமிழ்நாட்டிற்கு வெறும் 46; உபிக்கு 140ஆ?' - சீறும் தலைவர்கள்

நாளை நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவிற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொகுதி மறுசீரமைப்பு மசோதாவி... மேலும் பார்க்க

Iran: "நண்​பர் ட்ரம்ப் அழைத்​தார்; அமெரிக்கா - ஈரான் போர் குறித்து ஆலோசித்தோம்" - பிரதமர் மோடி பதிவு

ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருக்கிறார். மத்திய கிழக்குப் போர் சூழல் ஹார்முஸ் நீரிணை விவகாரம் மற்றும் பல்வேறு து... மேலும் பார்க்க

'அவனாசியில் ரோட் ஷோ, பெருமாநல்லூரில் தேர்தல் அறிக்கை' - திருப்பூரில் தவெக விஜய் பிரசாரம்|Photo Album

திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம்திருப்பூரில் வி... மேலும் பார்க்க