செய்திகள் :

DJD: 'சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடை' - 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் புதிய சீசன்!

post image

ஜீ தமிழ் சேனலின் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியின் புதிய சீசன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடக்க விழா மற்றும் அது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்தச் சீசன் பெண்களை மையப்படுத்தி திட்டமிடப்பட்டிருக்கிறது. முதற்கட்ட ஆடிஷன்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டாப் 20 திறமையாளர்கள் மெகா ஆடிஷனுக்கு முன்னேறுவார்கள்.

அவர்களில் மேலும் 10 சிறந்த பெண் நடனக் கலைஞர்கள் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Dance Jodi Dance - New Season
Dance Jodi Dance - New Season

தேர்ந்தெடுக்கப்படும் இந்த 10 பெண் போட்டியாளர்களும், சின்னத்திரையின் முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடனமாடுவார்கள்.

இந்த முறை, இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக நடிகர் பிரசாந்தும், நடிகை சிம்ரனும் இணைந்திருக்கிறார்கள். நடிகை சினேகா இந்த சீசனிலும் நடுவர்களில் ஒருவராகத் தொடர்கிறார்.

இவர்களுடன் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மெண்டார்களாக இருந்து போட்டியாளர்களின் திறமையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து, ஜீ தமிழ் மற்றும் ஜீ திரை சேனல் அதிகாரி வி.எஸ். ராகவன், "கடந்த 18 வருடங்களாக ஜீ தமிழ், மக்களுக்குப் பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.

வித்தியாசமான கதைகள் மட்டுமில்லாமல், 'சரிகமப', 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் திறமையான போட்டியாளர்களுக்கு, கனவு மேடையை அமைத்து, ஒரு சிறந்த அங்கீகாரத்தை வழங்கும் மேடையாக இருந்து வருகிறது.

பலரின் கனவை நனவாக்கும் மேடையாகவும், பல திறமையாளர்களுக்கு அங்கீகாரமும், அடையாளமும் தந்து அவர்களின் வாழ்வின் வழிகாட்டியாகவும் இந்த மேடை இருந்து வருகிறது.

Dance Jodi Dance - New Season
Dance Jodi Dance - New Season

'டான்ஸ் ஜோடி டான்ஸ்' கடந்த 10 வருடங்களாக பல திறமைகளையும், பல நட்சத்திரங்களையும் உருவாக்கியுள்ளது. இந்த முறையும் நிறைய திறமையாளர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் மிகுந்த திறமைசாலிகள், எனவே உங்களது எதிர்பார்ப்பு பெரியதாக இருக்கலாம்.

தமிழ்நாடே இதுவரை பார்த்திராத ஒரு பவர்ஃபுல் நடுவர் குழு இந்த சீசனில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே எந்தவொரு நிகழ்ச்சியிலும், இந்த அளவிற்கு ஒரு பிரமாண்டமான நடுவர் குழு இருந்ததில்லை.

இவர்களுடைய வழிகாட்டுதல் நிச்சயம் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சீசனில் இருந்து நாம் பல புதிய திறமைகளின் நெகிழ்ச்சி ஏற்படுத்தும் தருணங்களை எதிர்பார்க்கலாம்" எனக் கூறியிருக்கிறார்.

மாசடைந்த சுருளி அருவி; தூய்மைப் பணியில் நேரடியாகக் களமிறங்கிய கம்பம் எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா!

தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மற்றும் புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளங்கும் சுருளி அருவியில், கம்பம் தொகுதி எம்எல்ஏ பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் சிறப்பு தூய்மைப் பணி நடைபெற்றது.இயற்கை எழில் ... மேலும் பார்க்க

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த வடிவேல் கிராக்கர்ஸ் நிறுவன இயக்குநர்கள்!

கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நன்கு படித்த விருதுநகரைப் பூர்வீகமாக கொண்ட விருதை மகள் தா... மேலும் பார்க்க

நம்பிக்கையின் பாரம்பரியத்தில் புதிய அத்தியாயம்; 67-வது ஷோரூமை திறந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்

ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இராஜபாளையத்தில் தனது 67வது ஷோரூமை திறந்தது. அறுபது வருடங்களுக்கும் மேலாக மக்களின் நம்பிக்கையை வென்று வரும் இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தனது 67வது... மேலும் பார்க்க

தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, இப்போது போரூரில்!

தென்னிந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான லலிதா ஜூவல்லரி, தனது 64-வது கிளையை சென்னை, போரூரில் கடந்த மே 29-ம் தேதி திறந்திருக்கிறது. 42 ஆண்டுகால பாரம்பரியம் மிக்கது லலிதா ஜூவல்லரி. லலிதா ஜூவல்லரியின் தனிச... மேலும் பார்க்க

`தமிழ்நாடு கேரளத்தை இணைக்கும் மெட்டு சாலை; அரசிடம் வலியுறுத்தப்படும்!' - ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ

தேவாரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக தமிழகம் கேரளத்தை இணைக்கும் வண்டிப் பாதையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் தற்போது வரை கனவு திட்டமாகவே உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட அந்தப் ப... மேலும் பார்க்க

கிராமிற்கு கூடுதலாக சிறப்பு சலுகை ₹150; ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’ அறிவித்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்!

1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, சிறப்பான கைவினைத்திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டந... மேலும் பார்க்க