செய்திகள் :

Doctor Vikatan: ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், வாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?

post image

Doctor Vikatan: ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு சற்று கடினமான வேலைகளைச் செய்தாலும் பிரச்னை தீவிரமாகும். இந்நிலையில், ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாக்கிங் உள்ளிட்ட மற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது சரியா, ஜிம் செல்லலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

நீங்கள் உடற்பயிற்சி செய்வதென முடிவெடுத்தால், அதற்கு முன் ஒரு மருத்துவரின் அனுமதியைப் பெறுவது அவசியம். அவர் உங்களின் ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை  எப்படி என்று பார்த்து, அதற்குப் பிறகு அதற்கேற்ப எந்த அளவு தீவிரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது என்று சொல்வார்.

உண்மையில், உடற்பயிற்சி செய்வது, அதாவது நீங்கள் நடைப்பயிற்சிஅல்லது பிரிஸ்க் வாக்கிங் (Brisk Walking) செய்வது (சாதாரண நடையை விட சற்று வேகமாக நடப்பது)  உங்கள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த நுரையீரல் திறனுக்கும் (Lung Capacity) மிகவும் நல்லது.

உடற்பயிற்சி
உடற்பயிற்சி

ஆனால், அதை ஒரு மருத்துவரிடம் அனுமதி வாங்கிவிட்டுச் செய்வது நல்லது.  எனது அனுபவத்தில், இப்படி ஒரு பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆஸ்துமா பாதிப்புள்ள அவர் உடற்பயிற்சி செய்வதற்கு முன், தனது இன்ஹேலரை வைத்து ஒரு பஃப் (Puff) எடுத்துக்கொள்வார். அதை உபயோகித்த பிறகுதான் அவர் உடற்பயிற்சியைத் தொடங்குவார். அவர் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரையிலும் நலமாகவே இருப்பார். 

அந்தப் பெண்ணுக்கு இது உதவியது என்பதற்காக எல்லோரும் அப்படியே செய்வது சரியல்ல.  மருத்துவரின் வழிகாட்டுதலைப் பெற்ற பிறகுதான் நீங்கள் தொடங்க வேண்டும்.

எப்படி இருந்தாலும், உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் கடுமையான  பயிற்சிகளைச் செய்யத் தேவையில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் நுரையீரல் திறனை மேம்படுத்தினால், அது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். உண்மையில், உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லதுதான். ஆனால், எதையும் அவரவர் உடல்நலத்தின் அடிப்படையில் மருத்துவர் பரிந்துரையின் பேரில்தான் செய்ய வேண்டும்.

உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும்போது அசௌகர்யம் ஏற்பட்டது என்றால், நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை, எது ஆஸ்துமாவைத் தூண்டுகிறது (Trigger) என்பதை நீங்கள் கண்டறிந்து, அதற்கேற்ப செய்ய வேண்டும்.

Doctor
Doctor

ஜிம் சென்று உடற்பயிற்சி செய்ய உங்கள் மருத்துவர் அனுமதிக்கும் பட்சத்தில் நீங்கள் முக்கியமான சில விஷயங்களை  கவனிக்க வேண்டும்.

அதாவது, அந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க வேண்டும். தூசு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்தும் இடமாக இருக்கக்கூடாது.

மிக மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும். மருத்துவர் அனுமதித்தால், உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்பு இன்ஹேலர் பயன்படுத்திவிட்டும் தொடங்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: ஸ்ட்ரோக் பாதிப்பு; பார்வை மற்றும் பேச்சுக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வந்த பிறகு, பார்வைக் குறைபாடு (Vision Loss) அல்லது பேச்சுக் குறைபாடு (Speech Impairment) ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகள், சிகிச்சைகள் உண்டா... எ... மேலும் பார்க்க

Calorie: நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னவாகும்?

"நம் உடலும் மூளையும் சரியாக இயங்குவதற்கு, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் ஆற்றல் (Energy) கிடைக்கிறது. இந்த ஆற்றல்தான், கலோரி (Calorie) எனப்படுகிறது. இந்த கலோரிகள், உடலிலுள்ள செல்களின் திறனை ஊக்கப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan:இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்உறவினர் ஒருவர், தினமும் இரவில் நான்கைந்து பற்கள் பூண்டை, பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் வைத்திருக்கிறார். அப்படிச் சாப்பிட்டால் எந்த உடல்நலப் பிரச்னையும் வராது என்கிறார். நிறைய வீடிய... மேலும் பார்க்க

Throat infection: குளிர்கால தொண்டை தொற்று; வீட்டு மருத்துவம் சொல்லும் சித்த மருத்துவர்!

குளிர்காலம் தொடங்கியதிலிருந்தே ’தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு. எச்சில் விழுங்கும்போதெல்லாம் வலிக்குது' போன்ற புலம்பல்களை அதிகமாகக் கேட்க முடிகிறது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இதுபோன்ற தொண்டை சார்ந்... மேலும் பார்க்க

குளிரில் ஏன் உடல் நடுங்குகிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதான்!

குளிர்காலம் வரும்போது அல்லது குளிர்ந்த காற்று வீசும்போது நமது உடல் தாமாகவே நடுங்குவதை நாம் அனைவரும் உணர்ந்து இருப்போம். ஸ்வெட்டர், கனமான ஆடைகள் அணிந்து இருந்தாலும் கூட சில சமயங்களில் இந்த நடுக்கம் நிற... மேலும் பார்க்க