செய்திகள் :

Doctor Vikatan: ஈரமான இடத்தில் நின்றாலே கால்களில் குடைச்சல்: வைட்டமின் குறைபாடா... நரம்பு பாதிப்பா?

post image

Doctor Vikatan: எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தண்ணீரிலோ, ஈரப்பதமுள்ள இடத்திலோ நீண்ட நேரம் நின்றால், எனக்கு கால்களில் ஒருவித குடைச்சல் உணர்வு வருகிறது. இது வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்குமா அல்லது நரம்பு மண்டல பாதிப்பா... என்னுடைய இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி மீள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்

உங்களைப் போல கேள்வி கேட்பவர்கள் பலரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, அதற்கான காரணம் என்னவென்று தெரிந்துகொள்வதில்லை. மாறாக, நீங்களாகவே உங்கள் பிரச்னைக்கு ஒரு காரணத்தை யோசித்துக் கொள்வதும், சுய மருத்துவம் செய்துகொள்வதும் வேதனைக்குரிய விஷயம்.

உங்களுடைய கேள்வியில் நரம்பு பாதிப்பு (nerve damage), வைட்டமின் பி12 குறைபாடு (B12 deficiency), இதை எப்படிக் கையாள்வது?, இது மோசமானால் என்ன செய்வது? என்றெல்லாம் மிகவும் விரிவாகக் கேட்டுள்ளீர்கள். இந்தப் பிரச்னைகளுக்காக நீங்கள் மருத்துவரை அணுகினீர்களா என்று தெரியவில்லை. அடுத்தவர் சொல்வது, ஃபார்வேர்டு மெசேஜில் கேட்டது போன்றவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு நீங்களாகவே இப்படியெல்லாம் சந்தேகப்படுகிறீர்களோ என்று தோன்றுகிறது.

இருப்பினும், இது போன்ற பாதிப்புகள் இருந்தால், கால்களில் உள்ள தமனி (artery) எனப்படும் நல்ல ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதை 'டாப்ளர்' (Doppler) பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் கால் நுனிவிரல் வரை சரியாகச் செல்கிறதா என்பதை டாப்ளர் பரிசோதனை மூலம் உறுதி செய்தாலே முக்கால்வாசி பிரச்னை தெளிவுபட்டுவிடும்.

கால்களில் குடைச்சல் உணர்வு, மரத்துப் போவது அல்லது வலி தொடர்ந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரியான தீர்வாகும்.

அதற்குப் பிறகுதான் நரம்பு சேதம், வைட்டமின் பி12 குறைபாடு போன்ற பிற காரணங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். பாதிப்பு அதிகமாக இருந்தால், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணரை (vascular surgeon) அணுகி ஆலோசனை பெற வேண்டும். 

ஒருவேளை  உங்களுக்கு கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் (Diabetes), வைட்டமின் பி 12 மற்றும் பி காம்ப்ளெக்ஸ் குறைபாடு, ரத்த ஓட்டக் குறைபாடு (Peripheral Artery Disease) போன்றவை இருந்தால் நரம்பு பாதிப்பும் இருக்கக்கூடும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல கால்களில்  குடைச்சல் உணர்வு, மரத்துப் போவது அல்லது வலி தொடர்ந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதே சரியான தீர்வாகும்.

டாக்டர் அருணாசலம்:

32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பொது மருத்துவரான அருணாசலம், சென்னை கே.கே.நகரில் அருண் விஜயா மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். 1994-ல் யு.எஸ்.எஸ்.ஆரின் மின்ஸ்க் அரசு மருத்துவக் கல்லூரியில் MD பட்டம் பெற்ற இவர், இந்திய மருத்துவக் கழகத்தின் (IMA) உறுப்பினராக இருக்கிறார். பொது மருத்துவம், வளரிளம் பருவத்தினருக்கான மருத்துவம் மற்றும் தடுப்பு மருத்துவம் போன்றவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: நுரையீரல் பிரச்னைக்கு ஆங்கில மருந்து, மலச்சிக்கலுக்கு சித்த மருந்து எடுக்கலாமா?

Doctor Vikatan: நான்சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின்,மான்டெக்-எல்சி உள்ளிட்டவை)எடுத்துக் கொண்டிருக்கிறேன்.அதனுடன் மலச்சிக்கலு... மேலும் பார்க்க

தேசிய அளவில் அதிகரிக்கும் H1N1 காய்ச்சல் பாதிப்பு - சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவகாலக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்ஃப்ளுயன்ஸா ஏ (Influenza A) வைரஸின் H1N1 வகை தாக்கத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லியி... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமானால் முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலைத் தொடரலாமா?

Doctor Vikatan:ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போதுகர்ப்பமான நிலையில்,தனதுமுதல் குழந்தைக்கு(ஒன்றரை வயது) தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா... அவருக்கு தாய்ப்பால் சுரப்பும் இருக்கிறது. அவர் தாய்ப்பால் கொட... மேலும் பார்க்க

'உங்கள் பாதம் ஆரோக்கியமாக இருக்கிறதா?' - கவனிக்க ஒரு கருத்தரங்கம் | பாதமே நலமா சீசன் 3

உங்கள் உடலின் ஒரு பகுதி உங்களுக்குத் தெரியாமலே கொஞ்சம் கொஞ்சமாகச் செயலிழந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதா?ஆனால், இதுதான் கசப்பான உண்மை! சர்க்கரை நோய் (Diabetes) உள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வருடக்கணக்கில் சிகரெட் பழக்கம், பலமுறை தோல்வி... உறுதியாக கைவிட10 ஆலோசனைகள்!

Doctor Vikatan: நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக சிகரெட் பழக்கத்தில் சிக்கித் தவிக்கிறேன். அதை நிறுத்த பல முறை முயன்றும் என்னால் முடியவில்லை. சிகரெட் பழக்கத்தை அறவே நிறுத்த என்னதான் செய்வது?-dmurthy,விக... மேலும் பார்க்க

Doctor Vikatan: கையை உயர்த்தவே முடியாத அளவுக்கு தோள்பட்டை வலி... அறுவை சிகிச்சைதான் தீர்வா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 55 வயதாகிறது. கடந்த சில மாதங்களாகக் கடுமையான தோள்பட்டை வலியால் அவதிப்படுகிறான். மருத்துவர்களைப் பார்த்து வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில... மேலும் பார்க்க