செய்திகள் :

Doctor Vikatan: எப்போதும் அதிக வியர்வை... மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமா?

post image

Doctor Vikatan: எனக்கு எப்போதும் அதிகமாக வியர்த்துக்கொண்டே இருக்கிறது. அதீத வியர்வை என்பது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு ஏற்படும் இந்த வியர்வைப் பிரச்னையும் இதய பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா? - விகடன் இணையத்திலிருந்து.

பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.

கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்
கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்

ஒருவருக்கு அதிகமான வியர்வை இருந்தால், அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமா என்ற பயம் உங்களைப் போல பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் அப்படி அர்த்தப்படுத்திக் கொண்டு பயப்படத் தேவையில்லை. பொதுவாக வியர்வை என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

அதிகப்படியான வியர்வை ஏற்படுவது என்பது, மாரடைப்பின் முக்கிய அறிகுறியாக இருந்தாலும், பொதுவாக உடலில் சர்க்கரையின் அளவு (Blood sugar level) குறைந்தால் கூட (Hypoglycemia) இதுபோல அதிகமான வியர்வை ஏற்படுடலாம். உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இப்படி அதிகப்படியாக வியர்க்கும் என்பது சர்க்கரைநோய் உள்ள பலருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயம்தான்.

அத்தகைய சூழ்நிலைகளில், நோயாளிக்கு உடனடியாக சர்க்கரையோ அல்லது ஏதேனும் இனிப்புப் பண்டத்தையோ சாப்பிடக் கொடுத்தாலே, இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.

உடலில் சர்க்கரையின் அளவு குறையும் போது இவ்வாறு அதிகப்படியாக வியர்க்கும்.

சர்க்கரை குறைபாட்டினால் வியர்க்கும்போது, நெஞ்சுவலி, நெஞ்சில் பாரமான அழுத்தம் போன்ற உணர்வு, நெஞ்சை இறுக்குவது போன்ற வலி ஆகியவை  இல்லாமல் வெறும் வியர்வை மட்டும் இருந்தால் பயப்பட வேண்டாம்.

எனவே, அதிக வியர்வையோடு சேர்ந்து மூக்கிற்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நெஞ்சு அழுத்தமோ அல்லது நெஞ்சு வலியோ இருந்தால் மட்டும்தான் நாம் பயப்பட வேண்டும். பொதுவாக, 'எனக்குச் சாதாரணமாகவே கொஞ்சம் அதிகமாக வியர்க்கிறது' என்றால், அதை நாம் இதயநோயின் அறிகுறியாக நினைத்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: தூக்கத்தின்போது திடீரென உடல் தூக்கிப் போடுவது ஏன்... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: எனக்கு வயது 43. அடிக்கடி தூக்கத்தில் உடல் தூக்கிப் போடுவது போல உணர்கிறேன். அதன் காரணமாக தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... இதற்கு மருத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: த்ரில்லர் சினிமா பார்த்தால் அபார்ஷன் ஆகுமா?

Doctor Vikatan:த்ரில்லர் படக் காட்சியைப் பார்த்ததால் தனக்கு அபார்ஷன் ஆனதாக சமீபத்தில் ஒரு நடிகை தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார். பொதுவாகவே த்ரில்லர் படங்கள் ஆரம்பிப்பதற்கு முன், வயதானவர்கள், குழந்த... மேலும் பார்க்க

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் ஆகாதா?

Doctor Vikatan: பழங்களை உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... அப்படி உணவோடு சேர்த்துச் சாப்பிட்டால் என்ன பாதிப்பு வரும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது என்பதற்கு விஞ்ஞானரீதியான காரணம் உண்டா?

Doctor Vikatan: பொதுவாகவே சாப்பிட்ட உடன் குளிக்கக்கூடாது என்பது காலங்காலமாகச் சொல்லப்படுகிற அறிவுரையாக இருக்கிறது. இது உண்மையிலேயே அறிவியல்ரீதியான அறிவுரையா அல்லது மூட நம்பிக்கையா... சாப்பிட்ட உடனே கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலப்போக்கில் புற்றுநோய்க் கட்டியாக மாறுமா கொழுப்பக்கட்டி?

Doctor Vikatan: என் வயது 45. எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நெற்றிப் பகுதியில் லேசான புடைப்பு போல வந்தது. சரியாகவே இல்லை. மருத்துவரைப் பார்த்தபோது, அது கொழுப்புக்கட்டி என்று சொன்னார். உடலில் கொழுப... மேலும் பார்க்க

Doctor Vikatan: வார இறுதி நாள்களில் தூக்கம்... மற்ற நாள்களின் தூக்க இழப்பை ஈடுகட்டுமா?

Doctor Vikatan: ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறேன். போக்குவரத்துக்கு 3 மணி நேரம் செலவாகிறது. இதனால் என்னால் தினமும் இரவில் போதுமான நேரம் தூங்க முடிவதில்லை. இதை ஈடுகட்டும் வகையில் வார இறுதியில் ... மேலும் பார்க்க