செய்திகள் :

Doctor Vikatan: எப்போதும் 100-க்கு மேல் இருக்கும் இதயத்துடிப்பு... கவலைப்பட வேண்டிய விஷயமா?

post image

Doctor Vikatan: எனக்கு  இதயத்துடிப்பு எப்போதும் 100-க்கு மேல்  உள்ளது. இசிஜி எடுத்துப் பார்த்தால் அதில் நார்மல் என்றே காட்டுகிறது.  பிளட் பிரஷர் 140 / 100 என உள்ளது. எனக்கு சர்க்கரைநோய் கிடையாது.  இந்நிலையிவ் இதயத்துடிப்பு குறித்து நான் கவலைப்பட வேண்டுமா?

-உமா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 90 வரை மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் அந்தப் பிரச்னையை  'சைனஸ் டாகிகார்டியா' (Sinus Tachycardia) எனப்படுகிறது. அதாவது இதயம் வழக்கத்தைவிட வேகமாகத் துடிக்கிறது என்று அர்த்தம்.

ஆமைகள் உலகிலேயே மிக நீண்ட காலம் வாழ்வதற்குச் சான்றாக, அவற்றின் இதயம் நிமிடத்திற்கு 16 முறை மட்டுமே துடிக்கிறது. யார் மன அமைதியோடும், மகிழ்ச்சியோடும், வாழ்க்கையில் 'போதும்' என்ற மனநிறைவோடும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு இதயத்துடிப்பின் அளவு குறைவாகவே இருக்கும். அதீத உற்சாகமாக, ஊக்கத்துடன் இயங்குபவர்கள், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் (Multitasking) ஆளுமை கொண்டவர்கள் போன்றோருக்கு இதயத்துடிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. 

தைராய்டு பரிசோதனை

இவ்வாறு இதயத்துடிப்பு அதிகரிக்கும் போது, இதய மருத்துவரை அணுகி எக்கோ (Echo) பரிசோதனை செய்து, இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டா, இதயத் துடிப்பைச் சீராக்கும் மருந்துகளின் மூலம் (Beta Blockers) துடிப்பின் அளவை 60 முதல் 90-க்குள் பராமரிக்க மருத்துவர்கள் வழிகாட்டுவர்.

தொடர்ந்து படபடப்பு இருப்பதாகக் கூறுபவர்களுக்கு, 'ஹைப்பர்தைராய்டிசம்' (Hyperthyroidism) பாதிப்பாலும் இதயத்துடிப்பு அதிகரிக்கலாம் என்பதால், தைராய்டு பரிசோதனையும் செய்ய வேண்டியிருக்கலாம். எனவே, இசிஜி (ECG) பரிசோதனை என்பது  அடிப்படை சோதனை மட்டுமே.  அதோடு நிறுத்திவிடாமல், இதயநல மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில்

Doctor Vikatan: தலையில் கைவைத்தாலே கொத்துக்கொத்தா முடி கொட்டுதா... உடனே நிறுத்த 10 டிப்ஸ்!

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த ஒரு மாதமாக எக்கச்சக்கமாக முடி உதிர்கிறது. எண்ணெய், ஷாம்பூ போன்றவற்றை மாற்றிப் பார்த்தும் முடி உதிர்வது நிற்கவில்லை. முடி உதிர்வை ஒரே வாரத்தில் நிறுத்தலாம் என்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தோள்பட்டை வலி, ஜூனியர் NTR செய்துகொண்ட ஆர்த்ரோஸ்கோப்பி சிகிச்சை: என்ன ஸ்பெஷல்?

Doctor Vikatan: நான் கடந்த ஒரு வருடமாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறேன். வலி நிவாரணிகள், பிசியோதெரபி எல்லாம் செய்து பார்த்தும் வலி குறைந்தபாடில்லை. கடைசியாக சந்தித்த மருத்துவர், எனக்கு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை ஷகிலாவுக்கு ஏற்பட்ட பிரச்னை; உங்களுக்கும் வரலாம்; எச்சரிக்கும் மருத்துவர்

Doctor Vikatan: அளவுக்கதிக மொபைல் பயன்பாட்டினால், கழுத்து நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது அறுவை சிகிச்சைவரை கொண்டு போய் விட்டதாகவும், லட்சக்கணக்கில் செலவழித்ததாகவும் நடிகை ஷகிலா சமீபத்தில் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பஸ் பயணத்தின்போது தலைச்சுற்றல், வாந்தியா... மீள்வது ரொம்ப சிம்பிள்!

Doctor Vikatan: எப்போது பஸ், கார், வேன் போன்றவற்றில் பயணம் செய்தாலும் எனக்கு சில நிமிடங்களிலேயே தலைச்சுற்றலும் வாந்தியும் வருவதை உணர்கிறேன். இதனாலேயே பெரும்பாலும் பயணங்களைத் தவிர்க்கிறேன். தவிர்க்க மு... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணத்துக்கு முன்பு கருக்கலைப்பு, 8 வருடங்களாக குழந்தை இல்லை; இதுவே நிரந்தரமா?

Doctor Vikatan: எனக்கு இப்போது 30 வயதாகிறது. கல்லூரியில் படித்தபோது, காதல் வயப்பட்டு, கர்ப்பம் தரித்தேன். அந்தச் சமயத்தில் என் காதலர் வீட்டில் பெரிய பிரச்னை நடந்து, திருமணத்துக்கு சம்மதிக்காததால், பயத... மேலும் பார்க்க

Doctor Vikatan: உணவு உண்ணும்போது தொண்டையை அடைக்கும் உணர்வு... சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 40. எனக்கு கடந்த சில மாதங்களாக உணவு உண்ணும்போது தொண்டையில் உணவு அடைத்துக் கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. தொண்டையிலிருந்து உணவு இறங்க சில நிமிடங்கள் ஆகின்றன. அதன் பிறகே இயல்... மேலும் பார்க்க