செய்திகள் :

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்; கோடைக்கு ஏற்றது எது, சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

post image

Doctor Vikatan: கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் - கோடைக்கு எது சிறந்தது... கேழ்வரகு கூழ் ரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உண்மையா... இந்த இரண்டையும் இரவில் எடுத்துக்கொள்ளலாமா?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்
சித்த மருத்துவர் விக்ரம்குமார்

கம்பங்கூழ் மற்றும் கேழ்வரகு கூழ் இரண்டுமே கோடைக்காலத்திற்கு மிகவும் உகந்தவை. குறிப்பாக, கம்பு இயற்கையிலேயே அதிக குளிர்ச்சித் தன்மை கொண்டது. கேழ்வரகில் மெலிதான வெப்பம் உண்டு. வெயில் காலத்தில் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கூழாக எடுத்துக்கொள்ளும்போது எந்தச் சிக்கலும் வராது.

கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி, அந்த நாளைப் புத்துணர்ச்சியுடன் தொடங்க உதவுகின்றன. இவற்றை காலை உணவாகவோ அல்லது மதிய உணவுக்கு களியாகச் செய்தோ எடுத்துக் கொள்ளலாம்.

கேழ்வரகை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பது மிக முக்கியம். சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். 
கேழ்வரகை அடையாகச் செய்து சாப்பிடும்போது, அது ரத்தத்தில் கலந்து சர்க்கரையாக மாறும் நேரம் சற்று தாமதமாகும். களியாக எடுத்துக்கொள்ளும்போது, அதைவிட சற்று விரைவாக சர்க்கரையாக மாறும். 

கூழாக எடுத்துக்கொள்ளும்போது மிக விரைவாக சர்க்கரையாக மாறும். இதன் அடிப்படையில்தான் சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகள் கூழாகக் குடிக்கும்போது, தொட்டுக்கொள்ள காய்கறிகள் சேர்த்துக்கொண்டால் பாதிப்பில்லை.

கம்பில் இரும்புச்சத்து அதிகப்படியாக உள்ளது, அதேபோல் கேழ்வரகில் கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) நிறைந்துள்ளது.

கம்பு, கேழ்வரகு உணவுகளை தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்து இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு இரவில் கீரை அல்லது பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் தன்மை இருக்கும். அவர்கள் இரவு நேரங்களில் கூழ் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மற்றவர்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த உணவுகள் உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுப்பதால் கோடைக்கேற்ற சிறந்த உணவுகளாகப் பார்க்கப்படுகின்றன. அதுவே குளிர்காலம் என்றால் இவற்றை அடையாகவோ, களியாகவோ எடுத்துக்கொள்ளலாம்.
நம் பாரம்பர்ய பானங்களான கம்பங்கூழ், கேழ்வரகு கூழ்  மட்டுமல்ல, பானகம் போன்றவற்றையும் தொடர்ந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்குமா? - எல்லோரும் குடிக்கலாமா?

Doctor Vikatan: கோடைக்காலம் நெருங்குவதால், தெருக்களில் கற்றாழைச் சாறு விற்கும் கடைகள் அதிகரித்து வருகின்றன. கற்றாழைச் சாறு குடித்தால் சளி பிடிக்கும் என்கிறார்கள் சிலர். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: சன் ஸ்கிரீன்... அதிக எஸ்பிஎஃப் உள்ளதுதான் பலனளிக்குமா? வைட்டமின் டி குறையுமா?

Doctor Vikatan: சன் ஸ்கிரீன் வாங்கும்போது எஸ்பிஎஃப் அளவைப் பார்க்க வேண்டும் என்கிறார்களே... அப்படியென்றால் என்ன... அது அதிகம் இருந்தால்தான் நல்ல சன் ஸ்கிரீனா... சன் ஸ்கிரீன் பயன்படுத்துவோருக்கு வைட்டம... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின்போது சருமத்தில் மாற்றம்... கிராம்புத்தைலம், கற்றாழை தடவலாமா?

Doctor Vikatan: என் வயது 21. எனக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸுக்கு முன்னால் சருமத்தில் பருக்கள் வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு சோற்றுக் கற்றாழை ஜெல் அல்லது கிராம்புத் தைலம் வைத்தால் சரியாகி விடும் என்று... மேலும் பார்க்க

Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

Doctor Vikatan:எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1 என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. ... மேலும் பார்க்க

தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?

தூக்கம் வரலையா... அதுக்கொரு கம்மீஸ்...முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்...ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு.... இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gum... மேலும் பார்க்க

இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு ந... மேலும் பார்க்க