செய்திகள் :

Doctor Vikatan: குழந்தைகளுக்கு காபி, டீ.... எந்த வயதிலிருந்து அறிமுகப்படுத்தலாம்?

post image

Doctor Vikatan: என்னுடைய நண்பன், தன்னுடைய  ஒன்றரை வயதுக் குழந்தைக்கு காபியும் டீயும் கொடுத்து வளர்க்கிறான். இந்த வயதில் ஏன் பழக்குகிறாய் என்று கேட்டால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எல்லா உணவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறான். பொதுவாக, குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து காபி, டீ கொடுக்கலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு 12 வயது வரை காபி அல்லது டீ கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. காபியில் கஃபைனும் (Caffeine), டீயில் டானினும் (Tannins) குழந்தைகளுக்கு ஏற்றவை அல்ல என்பதுதான் காரணம்.

காயில் உள்ள கஃபைன் என்பது ஸ்டிமுலன்ட்  (Stimulant) எனப்படும் தூண்டல் தன்மை கொண்டது. பெரியவர்கள்கூட சோர்வாக இருக்கும்போது, அதிலிருந்து மீள, ஒருவித புத்துணர்ச்சிக்காக  காபி குடிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். குழந்தைகள் காபி எடுத்துக்கொள்ளும்போது, அதிலுள்ள கஃபன் காரணமாக அவர்கள் அதிக சுறுசுறுப்புடன் (Hyperactive) மாற வாய்ப்புள்ளது. அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதோடு, அவர்களின் கவனத்திறனிலும் (Concentration) குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

டீயில் உள்ள டானினும் கஃபைன் போன்றதுதான்.  டீயில் உள்ள 'பாலிபினோல் டானின்' (Polyphenol Tannin) என்பது, சத்துகள் உடலில் சேர்வதற்குத் தடையாக இருக்கிறது. குறிப்பாக, நாம் உணவு உண்ணும்போது அதனுடன் டீ அருந்தினால், உணவில் உள்ள இரும்புச்சத்து (Iron) மற்றும் கால்சியம் (Calcium) ஆகியவற்றை உடல் உறிஞ்சுவதை இது தடுக்கிறது. இந்தச் சத்துகள் சரியாகக் கிடைக்காதபோது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.

12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு காபி, டீ கொடுப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது

ஆரம்பத்தில் ஒரு வாய் தானே என்று குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்க ஆரம்பிப்போம். நாளடைவில் அது குழந்தைகளுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் குழந்தைகளும் நிறைய காபி, டீ குடிக்கப் பழகுகிறார்கள்.  இந்திய மற்றும் அமெரிக்க குழந்தை நல மருத்துவ சங்கங்களின் (Indian and American Association of Pediatric Guidelines) அறிவுறுத்தலின்படி, 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு காபி, டீ கொடுப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிதமான அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

HPV: ஆண்களுக்கும் வரும் 'அந்த' புற்றுநோய்; திருமணத்திற்கு முன்பே போட வேண்டிய ஓர் ஊசி - ஏன் தெரியுமா?

தடுப்பூசி திட்டம்பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியமான காரணம் HPV (Human Pap... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் Microgreens: ஆரோக்கியத்தை அள்ளித் தருமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் மைக்ரோ க்ரீன் என்ற கான்செப்ட் டிரெண்டாகி வருகிறது. அதென்ன மைக்ரோ க்ரீன்ஸ்.... எதில் தயாரிக்கிறார்கள்... யாருக்கு நல்லது?பதில் சொல்கிறார், கோவையைச் சே... மேலும் பார்க்க

உடல் பருமன் மட்டும் அல்ல… நாக்கும் பருமனாகலாம்! - காரணங்களும், தீர்வும்!

உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு பற்றிய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால், உடலின் முக்கிய உறுப்பான நாக்கின் பருமன் பற்றி, பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. பேசுவது, சாப்பிடுவத... மேலும் பார்க்க

Doctor Vikatan: Pregnancy Test-ல் ஆணுக்கு பாசிட்டிவ்... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: மனைவிக்காக வாங்கிய பிரெக்னன்சி கிட்டில், கணவன் தனது சிறுநீரை டெஸ்ட் செய்ததாகவும், அதில் அவருக்கு பிரெகன்சி பாசிட்டிவ் என்று வந்ததாகவும் சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஆண்களுக்கும் பி... மேலும் பார்க்க

Doctor Vikatan: வேகமாகப் பரவும் சின்னம்மை; தடுக்கவும் தொற்றுக்குள்ளானவர்கள் குணமாகவும் என்ன வழி?

Doctor Vikatan: கோடையின் தாக்கம் ஆரம்பிப்பதற்கு முன்பே, சின்னம்மை தொற்று பரவுவதாகக் கேள்விப்படுகிறோம். வீட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன வழி... தொற்று பாத... மேலும் பார்க்க

Doctor Vikatan: Soap அல்லது Syndet bar... சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்?

Doctor Vikatan: காலங்காலமாக நம்மில் பலரும் குளிப்பதற்கு சோப்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், சோப் பயன்படுத்தவே கூடாது, அது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும் என்றும், அதற்கு பதிலாக சி... மேலும் பார்க்க