செய்திகள் :

Doctor Vikatan: கோயில் குளங்கள், ஆறுகளில் குளித்தால் அரிப்பு, தவிர்க்க முடியாதபோது என்ன செய்வது?

post image

Doctor Vikatan: வீட்டைத் தவிர வெளியிடங்களில் குளித்தால்... குறிப்பாக குளங்கள், ஆறுகளில் குளித்தால் ரொம்பவும் உடல் அரிக்கிறது. புண்ணியத்தலங்கள் என்பதால் அந்த நீரில் குளிக்காமலும் இருக்க முடியவில்லை. அடிக்கடி கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில், இந்தப் பிரச்னை வராமலிருக்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பொதுவாக மக்கள் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது இப்படிப்பட்ட பிரச்னை வருவதாகச் சொல்லி, தீர்வு கேட்பார்கள், ஆனால், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பது பற்றிய இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. பலரும் அலட்சியம் செய்கிற விஷயம் இது.

நீங்கள் கேட்டுள்ளபடி வெளியூர்களுக்குச் செல்லும்போது அங்குள்ள குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்வற்றில் உள்ள தண்ணீரின்  pH அளவானது இடத்துக்கேற்ப மாறுபடும். புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருப்பதால், நீர் மிகவும் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. அதில் குளிப்பதால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்னைகள் வருவது சகஜம்தான்.

அதிலும் பிரபலமான கோயில் குளங்கள், புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் போன்ற கழிவுகள் நீரில் கலந்திருக்கும் சூழல் உள்ளது. புண்ணிய தலங்களுக்குச் சென்று புனித நீராடாமலும்  இருக்க முடியாது, அலர்ஜியும் வரக்கூடாது என்றால், சருமத்தைப் பாதுகாக்க முன் எச்சரிக்கையாக  என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சரியானது.

சருமத்தைப் பாதுகாக்க, மாய்ஸ்ச்சரைசர் (moisturizer) தடவிக்கொண்டு பிறகு குளிக்கப் போகலாம். மாய்ஸ்ச்சரைசர், ஒரு கவசம்போலச் செயல்படும்.  குளித்து முடித்த உடனேயே உடலை நன்றாகத் துடைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை மாய்ஸ்ச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டியது அவசியம்.

மக்கள் நடமாட்டம் இருப்பதால், நீர் மிகவும் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. அதில் குளிப்பதால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்னைகள் வருவது சகஜம்தான்.

ஒருவேளை நீர்நிலைகளில் நீங்கள் முழுமையாகவெல்லாம் குளிக்கவில்லை, வெறுமனே முங்கி எழுந்து வந்துவிட்டீர்கள் என்றால், உங்கள் இடத்துக்குத் திரும்பியதும் சுத்தமான நீரில் முழுமையாகக் குளித்து விடுங்கள்.  பிறகு மாய்ஸ்ச்சரைசர் தடவிக் கொள்ளுங்கள்.  சருமத்தைப் போலவே தலைமுடிக்கும் கண்டிஷனர் (conditioner) பயன்படுத்துவது  கூந்தலுக்கான பாதுகாப்பு கவசமாகச் செயல்படும். அதாவது முடியின் கியூட்டிக்கிள் (cuticle) பகுதியைப் பாதுகாக்கும். நீச்சல் குளங்களில் குளிப்பவர்களுக்கும் இதே நடைமுறைகள் பொருந்தும்.

இத்தனை விஷயங்களைச் செய்த பிறகும் சருமத்தில் அரிப்பு, தடிப்பு (rashes) அல்லது எக்ஸிமா (eczema) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சருமநல மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்; எல்லோரும் எடுக்கலாமா?

Doctor Vikatan: சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிற மருந்துகளில் பிரபலமாகவும் பிரதானமாகவும் இருக்கிறது திரிபலா சூரணம். மலச்சிக்கல் முதல் வாய்ப் புண் வரை எல்லாப் பிரச்னைகளுக்கும்அதை எடுத்துக்கொள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் பிரச்னை... குணப்படுத்தவே முடியாதா?

Doctor Vikatan: எனக்கு இரண்டு கால்களிலும் வெரிகோஸ் வெயின்ஸ் எனப்படும் நரம்பு சுருட்டி இழுக்கும் பிரச்னை உள்ளது. இதைக் குணப்படுத்த வாய்ப்புண்டா... எப்படிப்பட்ட சிகிச்சைகள் உதவும்?பதில் சொல்கிறார், சென்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகைகளின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்... தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா?

Doctor Vikatan:நடிகைகளின் உடற்பயிற்சி வீடியோக்கள் எப்போதும் வைரலாகின்றன. அவர் தீவிரமான, கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது சிலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும்,'இது மிக அதிகம்' என்று சில உடற்பயிற்சி நிப... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரபலங்களால் டிரெண்டாகும் 'மைக்ரோ பிளேடிங்'... புருவங்களை அடர்த்தியாக்குமா?

Doctor Vikatan: சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் பிரபலங்களும் டாக்டர்களும் மைக்ரோ பிளேடிங் என்ற டெக்னிக் பற்றி அதிகம் பேசுகிறார்கள். புருவங்களில் முடி வளர்ச்சி இல்லாதவர்களுக்கு அடர்த்தியான புருவங்களைக் க... மேலும் பார்க்க

Doctor Vikatan: பீரியட்ஸின் முதல் நாளில் அளவுக்கதிக ப்ளீடிங்... சாதாரணமானதா, பிரச்னையா?

Doctor Vikatan: என் வயது 38. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த ஒரு வருடமாக எனக்கு பீரியட்ஸின்போது முதல் நாளன்று ப்ளீடிங் மிக அதிகமாக இருக்கிறது. பெரிய நாப்கின்கள் நான்கு உபயோகிக்க வேண்டியிருக்கி... மேலும் பார்க்க

டிரெண்டாகும் 'மறு உலைக்கஞ்சி...' ஆறு மாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவது மருந்தா, ஆபத்தா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டது... பழைய சோறு, நீராகாரம் பற்றிய அறிவுரைகள் இந்த வருடமும் தவறாமல் நம்மிடம் வரும். நட்சத்திர ஹோட்டல்களில் இவையெல்லாம் இடம்பெறும். இந்நிலையில், 'மறு உலைக் கஞ்சி' என்ற பெயரில் ஓர... மேலும் பார்க்க