செய்திகள் :

Doctor Vikatan: தாமதமாகும் மருத்துவர் Appointment; மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா?

post image

Doctor Vikatan: உடல்நலத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். டாக்டர் சொன்ன இந்த மாத்திரை முடியும் நாள் அன்றுதான் டாக்டரைச் சந்திக்க வேண்டுமா...  இரண்டு, மூன்று நாள்களுக்கு முன்தாகவோ அல்லது இரண்டு, மூன்று நாள்களுக்குப் பிறகோ டாக்டரைச் சந்திக்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

இந்தக் கேள்விக்கான பதில், நீங்கள் எந்தப் பிரச்னைக்காக மருத்துவரைச் சந்தித்தீர்கள், எதற்காக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சாதாரண விஷயத்துக்காக மருந்துகள் சாப்பிடுகிறீர்கள் என்றால், மருந்துச்சீட்டில் (Prescription) குறிப்பிட்ட நாள் அன்றே நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்கள் வசதி மற்றும் நேரத்தைப் பொறுத்து ஒன்றிரண்டு நாள்கள் முன்னதாகவோ அல்லது பின்னரோ செல்லலாம்.

சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குகளை (Antibiotics) சொல்லலாம். அவற்றை 3 நாள்கள், 7 நாள்கள் அல்லது 10 நாள்கள் என எடுக்கச் சொல்லியிருப்பார்கள்.

அப்படிப்பட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு நிறுத்திவிடலாம். ஆனால், சர்க்கரைநோய் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்கான மருந்துகளை, மருந்துச்சீட்டில் 30 நாள்கள் என்று போட்டிருந்தாலும் அத்துடன் நிறுத்தக்கூடாது.

மருத்துவரைச் சந்திக்க அடுத்த அப்பாயின்ட்மென்ட் கிடைக்க இரண்டு, மூன்று நாள்கள் தாமதமாகலாம். சில மருந்துகளை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டியிருக்கும். எனவே, அடுத்த முறை மருத்துவரைப் பார்க்கும் வரை அந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வது அவசியம்.

எப்போதுமே மருத்துவர் சந்திப்பை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

மற்றபடி, எப்போதுமே மருத்துவர் சந்திப்பை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. ஒருவேளை மருத்துவர் புதிய ரத்தப் பரிசோதனைகள் ஏதேனும் செய்யச் சொன்னால், அவற்றின் முடிவுகள் வருவதற்கு ஒன்றிரண்டு நாள்கள் ஆகலாம். மருந்துகள் கையில் இருக்கும்போதே இதைச் செய்துவிடுவது நல்லது. 

உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால், மருத்துவர் மருந்தின் அளவைக் குறைக்கவோ அல்லது மாற்றவோ வாய்ப்புண்டு. அதை முன்கூட்டியே அறிந்துகொள்வது நல்லது. ஒருவேளை உங்களால் குறிப்பிட்ட நாளில் செல்ல முடியவில்லை என்றால், உங்கள் பார்மசியில் பேசி, அதே மருந்துகளை இன்னும் இரண்டு நாள்களுக்கு மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, பிறகு மருத்துவரைப் பார்க்கலாம். ஆனால், இதை எப்போதாவது ஒரு முறை செய்யலாமே தவிர, வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: தினமும் கோதுமைப்புல் சாறு குடித்தால் புற்றுநோயே வராது என்பது உண்மையா?!

Doctor Vikatan: என்னுடைய உறவினர் ஒருவர், தினமும் கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பதைப் பல வருடங்களாகப் பின்பற்றுகிறார். கோதுமைப்புல் ஜூஸ் குடித்தால் புற்றுநோய் ரிஸ்க் குறையும், உடல் எடை குறையும் என்கிறார்...... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெற்றிலையில் கற்பூரம் வைத்துச் சாப்பிட்டால், பீரியட்ஸ் தள்ளிப்போகுமா?

Doctor Vikatan: எங்களுடையது கூட்டுக்குடும்பம். அதனால் அடிக்கடி ஏதேனும் பூஜை, விசேஷங்கள் வந்துகொண்டே இருக்கும். பீரியட்ஸ் நாள்களில் ஒதுங்கியே இருக்க வேண்டும். முக்கியமான தினங்களின் போது பீரியட்ஸ் வந்து... மேலும் பார்க்க

"ஒரே பேஸ்ட் எல்லாருக்கும் சரியா? உங்கள் குழந்தைக்கு அது பாதுகாப்பா?" - மருத்துவர் விளக்கம்

குழந்தைகளுக்கு எந்தப் பொருள் வாங்கினாலும், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பது அம்மாக்களின் இயல்பு. பால் குடிக்கும் பாட்டில் சுத்தமாக இருக்க வேண்டும், அணியும் துணி மிருதுவாக இருக்க வேண்டும், சாப்பிடும் பொ... மேலும் பார்க்க

'பாதமே நலமா...' - சென்னையில் நடந்த பிரம்மாண்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

'ஆனந்த விகடன்' மற்றும் 'டாக்டர் ஆர். கே. நீரிழிவு கால் மற்றும் பாத மருத்துவமனை' இணைந்து நடத்திய 'பாதமே நலமா' சீசன்-2 விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (29.03.2026) சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொழுப்பை அறவே தவிர்த்த, புரோட்டீன் உணவுகள் எடை குறைக்க உதவுமா?

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறேன். பலரும் என்னை ஜிம்முக்குச் சென்று வொர்க் அவுட் செய்யும்படி அட்வைஸ் செய்கிறார்கள். ஜிம்முக்குப் போய் வெயிட் தூக்கி உடற்பயிற்சிகள... மேலும் பார்க்க

Doctor Vikatan: வழக்கமான சோடாவுக்கு மாற்றாகுமா டயட் சோடா... அது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: நான் முன்பெல்லாம் அடிக்கடி சோடா குடித்துக்கொண்டிருந்தேன். செரிமான பிரச்னை வந்தால் உடனே சோடா குடித்துவிடுவேன். ஆனால், அது தவறானது என்று சொல்லி என் நண்பன் டயட் சோடாவை அறிமுகப்படுத்தினான்... மேலும் பார்க்க