செய்திகள் :

Doctor Vikatan: கொழுப்பை அறவே தவிர்த்த, புரோட்டீன் உணவுகள் எடை குறைக்க உதவுமா?

post image

Doctor Vikatan: கடந்த சில வருடங்களாக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகிறேன். பலரும் என்னை ஜிம்முக்குச் சென்று வொர்க் அவுட் செய்யும்படி அட்வைஸ் செய்கிறார்கள்.

ஜிம்முக்குப் போய் வெயிட் தூக்கி உடற்பயிற்சிகள் செய்தால், உடல் ஆண்களைப் போல மாறுமோ என்ற பயத்தால் அதைத் தவிர்த்து வருகிறேன். அப்படி ஆவதற்கு வாய்ப்பு உண்டா...

அதே போல எடையைக் குறைக்க வேண்டும் என்றால் கொழுப்பை அறவே தவிர்த்து, புரோட்டீன் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவதுதான் சரி என்று சிலர் சொல்வதும் எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

வெயிட் தூக்கினாலோ, ஜிம் சென்று வொர்க் அவுட் செய்தாலோ ஆண்தன்மை வந்துவிடுமோ என்ற பயம் தேவையற்றது. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களின் உடலில் வெறும் 10 சதவிகிதம்தான் டெஸ்ட்டோஸ்டீரோன்  ஹார்மோன் இருக்கும். டெஸ்ட்டோஸ்டீரோன் அதிகரிக்கும்போதுதான் உடலில் தசைகள் உருண்டு, திரண்டு மாறும். 

பெண்களைப் பொறுத்தவரை அதிக வெயிட் தூக்கும்போதுதான்  சருமத்தின் அடியில் உள்ள சப்கியூட்டேனியஸ் ஃபேட் (Subcutaneous fat ) என்ற கொழுப்பும், வயிற்றுப் பகுதியில் உள்ள விஸெரல் ஃபேட்டும் (Visceral fat) கரையும்.

கூடவே நல்ல டயட்டையும் பின்பற்ற வேண்டும். இதனால் உங்கள் உடல் ஆண்களைப் போலவெல்லாம் மாறிவிடாது.  ஆண்களிலுமே வெயிட் தூக்கும் எல்லோருக்கும் தசைகள் உருண்டு, திரண்டு மாறுவதில்லை. அதற்காக பிரத்யேக பயிற்சிகள் செய்வது, அதிக அளவு புரதம் சாப்பிடுவது, சப்ளிமென்ட் எடுப்பது எனப் பல விஷயங்களைச் செய்வோருக்குத்தான் அப்படி மாறும்.

பெண்களைப் பொறுத்தவரை அதிக வெயிட் தூக்கும்போதுதான் சருமத்தின் அடியில் உள்ள சப்கியூட்டேனியஸ் ஃபேட் (Subcutaneous fat ) என்ற கொழுப்பும், வயிற்றுப் பகுதியில் உள்ள விஸெரல் ஃபேட்டும் (Visceral ) கரையும்.

புரோட்டீன் உணவுகள் கொழுப்பைக் கரைக்க உதவும் என்பது உண்மைதான். அதே சமயம், அதற்காக கார்போஹைட்ரேட்டையும் கொழுப்பையும் அறவே தவிர்த்த உணவுப்பழக்கம் தேவையற்றது. ஒரு கட்டடம் கட்ட, சிமென்ட், மணல், தண்ணீர் என எல்லாமே அவசியம். உடலுக்கும் அப்படித்தான்.

கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதச்சத்து என மூன்றுமே அவசியம். அவற்றின் அளவுதான் முக்கியம். சிலர் கார்போஹைட்ரேட்டை அறவே தவிர்த்தால் சீக்கிரம் எடை குறையும் என்று நினைத்து அதைத் தவிர்ப்பதுண்டு. அதுவும் தவறானது.

கார்போஹைட்ரேட்தான் உடலின் ஆற்றலுக்கான பிரதானம். அதைத் தவிர்க்காமல், 60 சதவிகிதம் புரதம், 30  சதவிகிதம் கார்போஹைட்ரேட், 10 சதவிகிதம் கொழுப்பு என்ற விகிதத்தில் உணவுப்பழக்கத்தை வைத்துக்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: வழக்கமான சோடாவுக்கு மாற்றாகுமா டயட் சோடா... அது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: நான் முன்பெல்லாம் அடிக்கடி சோடா குடித்துக்கொண்டிருந்தேன். செரிமான பிரச்னை வந்தால் உடனே சோடா குடித்துவிடுவேன். ஆனால், அது தவறானது என்று சொல்லி என் நண்பன் டயட் சோடாவை அறிமுகப்படுத்தினான்... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலை உணவுக்குப் பிறகு சாப்பிட வேண்டிய மாத்திரையை மறந்தால், மதியம் எடுக்கலாமா?

Doctor Vikatan:காலை டிபன் சாப்பிட்ட பிறகு டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளில் சில நேரம் போடுவதற்கு மறந்துவிடுகிறேன். இந்த மாத்திரையை பகல் உணவுக்குப் பிறகு போடலாமா?பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்... மேலும் பார்க்க

ஆயுர்வேதா, சித்தா மருந்து எடுக்கப்போறேன்; அதனால், அலோபதி மருந்துக்கு 'Bye' - சரியான அணுகுமுறையா?

கடந்த மாதம், எழுத்தாளர் ராஜேஷ் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன் சாராம்சம் இது தான்..."ராஜேஷ் குமாருக்கு தெரிந்த ஒருவருக்கு பி.பி, சுகர் இருந்திருக்கிறது. இவர் ஒரு நாள் நல... மேலும் பார்க்க

``கண்ணுக்கு குளிர்ச்சி… உடலுக்கு? - சம்மர் ரோஸ் மில்க், ஜூஸ்களின் மறுபக்கம்!”

சம்மர் வந்துடுச்சுனா, ரோஸ் மில்க் பிங்க் நிறத்துல கண்ணைக் கவரும். ஜூஸ்கள் கலர்ஃபுல்லா வரிசை கட்டும். ஐஸ்கிரீம்கள் ‘வாங்க வாங்க’னு கூப்பிடும். வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன், ஒரு கப் குளிர்ந்த ஜூஸ... மேலும் பார்க்க

Doctor Vikatan: டீன் ஏஜ் மகளுக்கு ரத்தச்சோகை... 7-ஆகக் குறைந்த ஹீமோகுளோபின்; என்னதான் தீர்வு?

Doctor Vikatan: என் மகளுக்கு 16 வயதாகிறது. அவளுக்குத் தீவிரமான ரத்தச்சோகை பிரச்னை இருக்கிறது. ரத்தப் பரிசோதனை செய்ததில் ஹீமோகுளோபின் அளவு 7 என்று காட்டுகிறது. இது மிகவும் மோசமான நிலை என்கிறார் மருத்து... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு 10 மணி முதல் காலை 5.30 வரை தூக்கம்: ஆனாலும் சோர்வாக உணர்வது ஏன்?

Doctor Vikatan:தினசரி இரவு 10 மணிக்கு உறங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் (உதாரணத்துக்கு 5.30 மணிக்கு) எழுந்துவிடுவேன். சில நேரம் இரவு 12 மணிக்கு மேல் உறங்கினாலும் காலை 5.30 மணிக்கு எழுந்துவிடுகி... மேலும் பார்க்க