செய்திகள் :

Doctor Vikatan: சுகர்ஃப்ரீ பிஸ்கட், ஸ்வீட்ஸ்... சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

post image

Doctor Vikatan: எனக்கு வயது 45. கடந்த 3 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. கடைகளில் விற்கும் சுகர்-ஃப்ரீ (Sugar-free) பிஸ்கட் மற்றும் ஸ்வீட்டுகளை சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாமா...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

பொது மருத்துவர் அருணாசலம்
பொது மருத்துவர் அருணாசலம்

நீரிழிவு பாதித்தவர்கள், சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது டயட் பிஸ்கட்டுகளைச் சாப்பிடலாம். ஆனால், அவற்றை அளவோடு வைத்துக்கொள்வது அவசியம்.

அதாவது உணவு இடைவேளைகளுக்கு நடுவில் ஏற்படும் பசிக்கு,  இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு பிஸ்கட்டுகள் வரை மட்டுமே சாப்பிட வேண்டும். அதையே உணவாக நினைத்து நிறைய சாப்பிடக் கூடாது. டயட் பிஸ்கட்டுகள் என்றாலும்  முழு உணவுக்கு மாற்றாகச் சாப்பிடக் கூடாது. சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

சுகர்ஃப்ரீ பிஸ்கட் சாப்பிடும்போது அதனுடன் காய்கறி சாலட் (Vegetable Salad) சேர்த்துச் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.

இனிப்புகளைப் பொறுத்தவரை ஸ்டீவியா (Stevia) போன்ற மாற்று இனிப்பு சேர்த்துச் செய்யப்படும் இனிப்புகளைத் தாராளமாகச் சாப்பிடலாம் என்று பலரும்  நினைத்துக் கொள்கிறார்கள். சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம் என்பதால், இனிப்புகளை எவ்வளவு குறைவாகச் சாப்பிடுகிறோமோ அவ்வளவு நல்லது. ஆசைக்காக எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவதில் தவறில்லை, ஆனால்,  அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

சர்க்கரை இல்லாத இனிப்புகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்தாமல் இருக்கலாம், ஆனால், அவற்றில் சில வகை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே, இதில் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: பால் குடித்தால் அல்சர் பாதிப்பு சரியாகுமா, காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என் வயது 37. எனக்கு கடந்த ஆறு மாதங்களாக அல்சர் பாதிப்பு இருக்கிறது. எந்த உணவு சாப்பிட்டாலும் வயிற்று வலி அதிகரிக்கிறது. இதை எப்படித் தடுக்கலாம்.... அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் பால் குடி... மேலும் பார்க்க

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது எந்த மாத்திரையை எவ்வளவு எடுக்க வேண்டும்?

Doctor Vikatan: மாரடைப்பு அறிகுறிகளை உணரும்போது குளோபிடோக்ரல், ஆஸ்பிரின் போன்ற சில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். சில விதமான மாரடைப்புக்கு நைட்ரேட் மாத்திரையைக் கொடுக்கக்கூடாது என்கிறார்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அசைவம் சாப்பிடாமலும் அதிகரிக்கும் கொழுப்பு... குறைப்பது சாத்தியமா?

Doctor Vikatan:நான் அசைவ உணவுகளே சாப்பிடுவதில்லை. ஆனாலும் எப்போது பிளட் டெஸ்ட் செய்தாலும் எனக்கு கொழுப்பு (Cholesterol) அதிகமாக இருப்பதாகவே ரிப்போர்ட்டில் வருகிறது. இதற்கு என்ன காரணம்... அதிகப்படியான ... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரசவித்த பெண்களுக்கு பத்திய உணவு... ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தாதா?

Doctor Vikatan:பிரசவத்திற்குப் பிறகு கிராமங்களிலும் நகரங்களில் சிலரும் பெண்களுக்கு பத்தியச் சாப்பாடு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். பத்தியச் சாப்பாடு கொடுப்பது பிரசவித்த பெண்களுக்கு உண்மையிலே... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஏசி அறையில் வேலை... சரும வறட்சி, தொடர் தும்மல்... தப்பிப்பது எப்படி?

Doctor Vikatan: ஏசி அறையிலேயே 8 மணி நேரம் வேலை செய்யும் எங்களைப் போன்ற ஐடி ஊழியர்களுக்கு, அடிக்கடி சருமத்தில் வறட்சியும் தும்மலும் ஏற்படுவது ஏன்.. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது?பதில் சொல்கிறார் இங்க... மேலும் பார்க்க

எல்-நினோ தாக்கம்... அதிகரிக்கும் மாரடைப்பு நிகழ்வுகள்! - பாதுகாத்துக்கொள்வது எப்படி? | El Nino

பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும் என்கின்றன புள்ளி விவரங்கள். ஆனால் சமீபமாக கோடைக்காலத்திலும் இந்த பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கி... மேலும் பார்க்க