செய்திகள் :

Doctor Vikatan: ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு அதிகரித்தால் பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?

post image

Doctor Vikatan: என் ரத்தப் பரிசோதனையில் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்படும் கிட்னி செயலிழப்பைத் தடுக்க நான் உணவில் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்... பழங்களைத் தவிர்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்.

சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்
சிறுநீரகச் சிறப்பு மருத்துவர் நித்யா நந்தகோபால்

உங்களின் கிரியாட்டினின் (Creatinine) அளவு 1.8 ஆக இருக்கும்போது, அது ரிவர்ஸ் செய்யக் கூடியதாகவோ (Reversible) அல்லது ரிவர்ஸ் செய்ய முடியாததாகவோ (Irreversible) இருக்கலாம்.

ஒருவேளை கிரியாட்டினின் அதிகரித்தது  ரிவர்ஸ் செய்ய முடியாதது எனப் பரிசோதனையில் தெரிய வந்தால், உங்களுக்கு சி.கே.டி (CKD - Chronic Kidney Disease) எனும் நோய் இருப்பதாகக் கண்டறியப்படும்.

சி.கே.டி என்பது சிறுநீரகச் செயல்பாட்டில் ஏற்படும் நிரந்தரமான, மெதுவான மற்றும் படிப்படியான இழப்பைக் குறிக்கும். இந்தச் சூழலில், நீங்கள் சில உணவுப்பழக்கக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

அதில் முதலிடம் உப்புக் கட்டுப்பாடு (Salt Restriction). உப்பு என்பது உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது. உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகச் செயல்பாட்டை மேலும் மோசமாக்கும்.

சி.கே.டி நோயாளிகள் உணவில் புரதச்சத்தையும் (Protein Restriction) கொஞ்சம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இது மேற்கத்திய நாடுகளின் உணவுமுறைக்குத்தான் அதிகம் பொருந்தும். ஏனெனில் அங்குதான் புரதம் சார்ந்த உணவுகள் அதிகம் சாப்பிடும் வழக்கம் இருக்கிறது.

ஆரம்பகட்ட பாதிப்பில் ஜூஸ் மற்றும் இளநீரையும், அடுத்த கட்டத்தில் பழங்கள் மற்றும் நட்ஸையும் தவிர்த்தாலே போதுமானது.

நமது இந்திய உணவு முறையில் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) தான் பிரதானமானது. சாதம் அல்லது சப்பாத்தியுடன், காய்கறிகள், சிக்கன், மீன் அல்லது முட்டை போன்றவை முதன்மை உணவாக இல்லாமல் சைடிஷாகவே (Side dish) பயன்படுத்தப்படுகின்றன.

நம் உணவில் ஏற்கெனவே புரதம் குறைவாகத்தான் இருக்கிறது என்பதால், புரதத்தை மிக அதிகமாகக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனவே, சி.கே.டி கண்டறியப்பட்ட நோயாளிகள்,  பருப்பு, பனீர், தயிர் என அனைத்தையும் விட்டுவிடத் தேவையில்லை.

உடலின் எடையில் ஒரு கிலோவிற்கு 1 கிராமுக்கும் குறைவாக புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஏற்கெனவே அதைவிடக் குறைவாக எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மேலும் குறைக்க வேண்டியதில்லை.

கிரியாட்டினின் 1.8 இருக்கும்போது பழங்களை அதிகம் குறைக்க வேண்டியிருக்காது. ஆனால், கிரியாட்டினின் அளவு தொடர்ந்து அதிகரித்தால், உணவில் பொட்டாசியம்  சத்தைக்  (Potassium Restriction) குறைக்க வேண்டும்.

பழங்கள், நட்ஸ் (Nuts), இளநீர் மற்றும் பழச்சாறுகளில் பொட்டாசியம் அதிகமிருக்கும். ஆரம்பகட்ட பாதிப்பில் ஜூஸ் மற்றும் இளநீரையும், அடுத்தகட்டத்தில்  பழங்கள் மற்றும் நட்ஸையும் தவிர்த்தாலே போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையால் பற்கள் ஆட்டம் காணுமா?

Doctor Vikatan:பல் மருத்துவர்களை அணுகினால், அடிக்கடி பற்களைச் சுத்தம் செய்யும் ஸ்கேலிங் சிகிச்சையைச் செய்துகொள்ள வேண்டும் என்கிறார்கள். ஸ்கேலிங் சிகிச்சை செய்தால் பற்கள் ஆட்டம் காணுமா, பற்களின் எனாமலை... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய்... மேலும் பார்க்க

மத்திய அரசு அறிமுகம் செய்த Face Wash வெறும் ரூ.47 மட்டுமே; எவற்றுக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

மாறி வரும் உலகில் எப்போதுமே அனைவரும் மிக முக்கியத்துவம் தரும் ஒன்று - 'ஆரோக்கியமான முகப் பராமரிப்பு'.ஆனால், சந்தையில் விற்கும் பெரும்பாலான பராமரிப்புப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்க... மேலும் பார்க்க

SIMS: ஒற்றை துளை எண்டோஸ்கோபிக் - 84 வயது முதியவருக்கு முதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகர சிகிச்சை

பல்வேறு நிலைகளில் முதுகெலும்பு நரம்பு சுருக்கம் மற்றும் சிதைகின்ற முதுகெலும்பு பக்கவிளைவால் நடக்க முடியாமல் கடும் சிரமத்தை எதிர்கொண்ட 84 வயது முதியவருக்கு, வழக்கமான திறந்தநிலை முதுகுத்தண்டு அறுவை சிகி... மேலும் பார்க்க

Doctor Vikatan: பேசும்போது வாயிலிருந்து கெட்ட வாடை.. அவமானம் தரும் பிரச்னைக்கு தீர்வு உண்டா?

Doctor Vikatan: என்வயது 70. நான் பேசும்போது வாயில் இருந்து கெட்ட வாடை வருகிறது. எதிரில் உள்ளவர்கள் மூக்கைப் பிடித்துக் கொள்கிறார்கள். அது எனக்கு அவமானமாக இருக்கிறது. எனக்கு வயிற்றில் புண் எதுவும் இல்ல... மேலும் பார்க்க

Doctor Vikatan: 79 வயதில் ஸ்டென்ட்... படி ஏறினால் மூச்சு வாங்குதல்... என்னதான்தீர்வு?

Doctor Vikatan:எனக்கு வயது 79. ஸ்டெனட் வைத்துள்ளேன். வயிறு நிரம்பி இருக்கும்போது நடந்தாலோ, ஒரே ஒரு படிக்கட்டு ஏறினாலோகூடமூச்சு வாங்குகிறது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்தப் பிரச்னை எதனால் ஏற்படுக... மேலும் பார்க்க