செய்திகள் :

Doctor Vikatan: விக்கல் உடனே நிற்காமல் பல நிமிடங்கள் நீடிப்பது பிரச்னையின் அறிகுறியா?

post image

Doctor Vikatan: என் உறவினர் ஒருவருக்கு அடிக்கடி விக்கல் வருகிறது. அப்படி விக்கல் வந்தால் உடனே நிற்பதில்லை. பல நிமிடங்களுக்கு நீடிக்கிறது. இப்படி நீண்டநேரம் விக்கல் தொடர்வது ஏதாவது பிரச்னையின் அறிகுறியா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்
பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்

இந்தக் கேள்விக்கான விளக்கத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன், விக்கல் ஏன் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது அவசியம்.

குழந்தை, தாயின் வயிற்றுக்குள் இருக்கும்போதிலிருந்து அது முதியவராகும்வரை எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு விக்கல் வரலாம்.

நெஞ்சுப்பகுதிக்கும் வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் (Diaphragm) என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும். அப்போது விக்கல் வரும்.  பொதுவாக உதரவிதானம் உள்வாங்கும்போது , நுரையீரலுக்குள் காற்று போகும்.  உதரவிதானம் ஓய்வெடுக்கும்போது  நுரையீரலுக்குள் உள்ள காற்று வெளியே போகும். 

விக்கல் வந்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் நின்றுவிடும். சிலருக்கு அது நீண்ட நேரம் நீடிக்கலாம். சில நொடிகள் முதல் சில நிமிடங்கள்வரை நீடிக்கும் விக்கலானது, அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாலோ, அதிக காரமுள்ள உணவுகளாலோ, மது அருந்துவதாலோ வரலாம்.

hiccupping | விக்கல்
கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும் விக்கல் வரலாம்.

சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிப்பதாலும், அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவதாலும்கூட விக்கல் வரலாம்.  திடீரென காற்றின் வெப்பநிலை மாறும்போதுகூட சிலருக்கு விக்கல் வரும். 

அதீத ஸ்ட்ரெஸ் அல்லது அதீதமாக உணர்ச்சிவசப்படுதல் காரணமாகவும் விக்கல் வரலாம். ஆண்களுக்கு பெண்களைவிட விக்கல் அடிக்கடி வரும்.

மன ரீதியான படபடப்பு, பதற்றம் அதிகமுள்ளோருக்கும் விக்கல் வரலாம். வயிற்றுக்குள் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும், ஜெனரல் அனஸ்தீசியா கொடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மற்றவர்களைவிட அதிகமாக விக்கல் வரும். 

விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும்.  மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும்.  கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும்.  ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும். 

தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும்.
தண்ணீர் குடித்தாலும் விக்கல் நிற்கும்.

இதையெல்லாம் முயற்சி செய்தும் விக்கல் நிற்கவில்லை, அதாவது தொடர்ந்து இரண்டு நாள்களாக விக்கல் நிற்கவில்லை என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அவர்கள் கரோட்டிடு சைனஸ் மசாஜ் (Carotid sinus massage ) செய்வார்கள். கரோட்டிடு ரத்தக்குழாய் கழுத்துப் பகுதியில் இருக்கும். அதில் மருத்துவர் மசாஜ் செய்யும்போது விக்கல் நிற்கும். மூக்கு வழியே வயிற்றுக்குள் டியூப் விட்டு ஒரு சிகிச்சை செய்வார்கள். உதரவிதானத்தில் உள்ள குறிப்பிட்ட நரம்பில் அனஸ்தீசியா கொடுப்பதன் மூலமும் விக்கலை நிறுத்தச் செய்வார்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: ஸ்ட்ரோக் பாதிப்பு; பார்வை மற்றும் பேச்சுக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?

Doctor Vikatan: ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வந்த பிறகு, பார்வைக் குறைபாடு (Vision Loss) அல்லது பேச்சுக் குறைபாடு (Speech Impairment) ஏற்பட்டால், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிகள், சிகிச்சைகள் உண்டா... எ... மேலும் பார்க்க

Calorie: நம் உடலில் கலோரிகள் கூடினால் அல்லது குறைந்தால் என்னவாகும்?

"நம் உடலும் மூளையும் சரியாக இயங்குவதற்கு, நாம் உட்கொள்ளும் உணவிலிருந்துதான் ஆற்றல் (Energy) கிடைக்கிறது. இந்த ஆற்றல்தான், கலோரி (Calorie) எனப்படுகிறது. இந்த கலோரிகள், உடலிலுள்ள செல்களின் திறனை ஊக்கப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவு தூங்கச் செல்லும் முன் கண்களில் விளக்கெண்ணெய் விடுவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan:இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை (Castor Oil) கண்களில் விடும் பழக்கம் பல காலமாக, பலராலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படிச் செய்வதால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும், ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் பூண்டை பச்சையாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது உண்மையா?

Doctor Vikatan: என்உறவினர் ஒருவர், தினமும் இரவில் நான்கைந்து பற்கள் பூண்டை, பச்சையாகச் சாப்பிடும் வழக்கம் வைத்திருக்கிறார். அப்படிச் சாப்பிட்டால் எந்த உடல்நலப் பிரச்னையும் வராது என்கிறார். நிறைய வீடிய... மேலும் பார்க்க

Throat infection: குளிர்கால தொண்டை தொற்று; வீட்டு மருத்துவம் சொல்லும் சித்த மருத்துவர்!

குளிர்காலம் தொடங்கியதிலிருந்தே ’தொண்டை ஒரே எரிச்சலா இருக்கு. எச்சில் விழுங்கும்போதெல்லாம் வலிக்குது' போன்ற புலம்பல்களை அதிகமாகக் கேட்க முடிகிறது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இதுபோன்ற தொண்டை சார்ந்... மேலும் பார்க்க

குளிரில் ஏன் உடல் நடுங்குகிறது தெரியுமா? - அறிவியல் காரணம் இதான்!

குளிர்காலம் வரும்போது அல்லது குளிர்ந்த காற்று வீசும்போது நமது உடல் தாமாகவே நடுங்குவதை நாம் அனைவரும் உணர்ந்து இருப்போம். ஸ்வெட்டர், கனமான ஆடைகள் அணிந்து இருந்தாலும் கூட சில சமயங்களில் இந்த நடுக்கம் நிற... மேலும் பார்க்க