செய்திகள் :

Doctor Vikatan: 23 வருடங்களாக சர்க்கரை நோய்... அதீத சோர்வு... உடலில் சத்துக்குறைபாடு இருக்குமா?

post image

Doctor Vikatan: எனக்கு 43 வயதாகிறது. 20 வயதில் எனக்கு சர்க்கரைநோய்  இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அப்போது glyciphage vg1  என்ற மாத்திரையை எடுத்துக்கொண்டேன். இப்போது என்னால் வெகுதூரம் நடக்க முடியவில்லை. உடலில் சத்து இல்லையா என்று தெரியவில்லை.  வேறு எந்த மாத்திரையும் எடுத்துக் கொள்ளவில்லை, வீட்டில் என்  தாய்வழி உறவினர்கள்ள் அனைவருக்கும் சர்க்கரைநோய் இருக்கிறது. என் பிரச்னைக்கு என்ன தீர்வு?

-Tamil Selvan, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

உங்களுடைய கேள்வியை வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு கடந்த 23 ஆண்டுகளாக நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.  20 ஆண்டுகளுக்கும் மேலாக கிளைசிஃபேஜ் விஜி1 (Glyciphage VG1) என்ற ஒரே மாதிரியான மருந்தையே உட்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது மூன்று மருந்துகள் கலந்த ஒரு கூட்டு மருந்து (Triple drug combination).

நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மருந்தைப் பயன்படுத்தினாலும், உங்களுடைய தற்போதைய சர்க்கரை அளவு எவ்வளவு என்பது குறித்து தகவல்கள் இல்லை.  உங்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய்கள் உள்ளனவா அல்லது  உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும்  நீங்கள் குறிப்பிடவில்லை. கிளைசிஃபேஜ் விஜி1 மாத்திரைகளை எத்தனை காலமாக எடுத்து வருகிறீர்கள் என்ற தகவலும் இல்லை.

 உடல் சோர்வாக இருப்பதாகவும்  குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவையான நுண் சத்துகள் (Micronutrients) உடலில் சேர்வதில் தடைகள் இருக்கும். அதன் காரணமாகவே அவர்களுக்குச் சத்து மாத்திரைகள் (supplements ) பரிந்துரைக்கப்படுகின்றன.

உங்களுடைய மூன்றுமாத சராசரி சர்க்கரை அளவான ஹெச்எஏ1சி (HbA1c) பரிசோதனை முடிவுகள் என்ன என்பது பற்றியும் நீங்கள் குறிப்பிடவில்லை.

தற்போது  நீங்கள் மிக அதிக உடல் சோர்வை உணர்வதால், உடனடியாக ஒருமுழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். மேலும், பயிற்சிபெற்ற  நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரை (Diabetologist) அணுகி ஆலோசனை பெற வேண்டும். முறையான பரிசோதனை இன்றி உங்களுடைய தற்போதைய நிலையைத் துல்லியமாகக் கூற இயலாது. சர்க்கரை நோயுடன் சேர்த்து வேறு இணை நோய்கள் உள்ளனவா என்பதையும் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய தாய்வழி உறவினர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பதற்கும் உங்களுடைய தற்போதைய உடல்நிலைக்கும் நேரடித் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. எனவே, அது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.  உடனடியாக மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனை பெறுவதே  சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

தூக்கமின்மை முதல் முடி உதிர்வு வரை... டிரெண்டாகும் Gummies! சர்வரோக நிவாரணியா?

தூக்கம் வரலையா... அதுக்கொரு கம்மீஸ்...முடி உதிருதா.... அதுக்கொரு கம்மீஸ்...ஸ்கின் அழகாகணுமா... அதுக்கும் கம்மீஸ் இருக்கு.... இப்படி இன்று பல பிரச்னைகளுக்குமான தீர்வாகப் பிரபலமாகி வருகிறது கம்மீஸ் (Gum... மேலும் பார்க்க

இளைஞர்களை சாய்க்கும் முதுகு வலி... ஓய்வா... உடற்பயிற்சியா எது தீர்வு?

வயதானவர்களை மட்டுமே பாதிக்கும் என்ற கருதப்பட்ட பல்வேறு நோய்கள் இன்று இளவயதினரையும் பாதித்து வருவதைக் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர்கிறது இளைஞர்களை பாதிக்கும் முதுகு வலி. இந்தியா உள்ளிட்ட பல்வேறு ந... மேலும் பார்க்க

Doctor Vikatan: கசப்பான வெள்ளரிக்காய்... பாம்பு ஏறியதுதான் காரணமா... அதைச் சாப்பிடலாமா?

Doctor Vikatan:வெள்ளரிக்காய் வாங்கும்போது சில காய்கள் கசப்புத்தன்மையோடு இருக்கின்றன. பாம்பு ஏறிய காய், அப்படித்தான் கசக்கும் என்கிறார்களே... அது உண்மையா... கசப்புச்சுவை உள்ள வெள்ளரிக்காய்களைச் சாப்பிட... மேலும் பார்க்க

மேகாலயாவில் அதிகரித்த HIV பாதிப்பு; அதிர்ச்சிக்குள்ளாக்கும் புள்ளி விவரம்! - அமைச்சர் சொல்வதென்ன?

மேகாலயாவில் வெளியாகியிருக்கும் ஹெச்.ஐ.வி பாதிப்பு எண்ணிக்கை தரவு, அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக ஹெச்.ஐ.வி பாதிப்பு கொண்ட மாநிலமாக மேகாலயா இருக்கிறது. இது தொடர்பாக மேகால... மேலும் பார்க்க

Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த மேரி ட்ரெய்னர் என்ற பெண்ணுக்கு அவர் வீட்டில் வளர்க்கும் நாய் நக்கியதால், தீவிர தொற்றும், பலமுறை மாரடைப்பும் ஏற்பட்டதாக செய்தியில் பார்த்தேன். மரு... மேலும் பார்க்க

Weight Loss டயட்டை தொடர முடியலையா? - மூளையோட வேலைதான் காரணம்!

வெயிட் லாஸ் செய்ய வேண்டும் என்ற முடிவோடு உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கியிருப்பார்கள். ஆரம்ப நாள்களில், 'அதைச் சாப்பிட மாட்டேன்', 'இதை அதிகம் சாப்பிட வேண்டும்', 'இவ்வளவு தான் சாப்பிடுவே... மேலும் பார்க்க