செய்திகள் :

Doctor Vikatan: சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் புளிப்பான உணவுகளை அறவே தவிர்க்கவேண்டுமா?

post image

Doctor Vikatan: என் உறவினருக்கு நீண்டகாலமாக சைனஸ் பிரச்னை உள்ளது. குளிர்காலத்தில் அது இன்னும் தீவிரமாகும். அவர் உணவில் புளிப்புச்சுவையை அறவே சேர்த்துக்கொள்வதில்லை. புளி உள்ளிட்ட அனைத்து புளிப்பு உணவுகளும் சைனஸ் பாதிப்பை அதிகப்படுத்தும் என்கிறார், அது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார், திருப்பத்தூரைச் சேர்ந்த அரசு, சித்த மருத்துவர் விக்ரம்குமார்.

சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்
சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார்

சைனஸ் மாதிரி பிரச்னைக்கும் சரி, மற்ற எந்த விஷயத்துக்குமே பத்தியம் என்பதை  இரண்டு விதங்களாகப் பார்க்கலாம். ஒன்று நோய்க்கு ஏற்ற பத்தியம், இன்னொன்று மருந்துகள் சார்ந்த பத்தியம்.  

பெருமருந்துகள்  கொடுக்கும்போது, சித்த மருத்துவத்தில் சில பத்தியங்கள் அறிவுறுத்தப்படும். அதில் புளிப்புச்சுவையை குறைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விஷயம்.  

எல்லா நோய்களுக்கும் புளிப்பை முழுவதுமாக நீக்க வேண்டியதில்லை, ஆனால், கொஞ்சம் குறைத்துக் கொள்வது நல்லது.
சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய் என்பதால், புளிப்புச் சுவை அதிகமாகும் போது கபம் அதிகரிக்கலாம். சுவை தத்துவத்தின்படி, புளியைக் குறைப்பது சைனஸ் சிகிச்சைக்கு உதவும்.  

புளியை முற்றிலுமாக நீக்குவது பெரிய மருந்துகள் எடுக்கும்போதும், புற்றுநோய் போன்ற தீவிர சிகிச்சை எடுக்கும்போதும் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது.

சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய்
சைனஸ் என்பது கபம் சார்ந்த நோய்

மற்ற நேரங்களில், புளியை முழுமையாக நீக்காமல் கொஞ்சம் குறைத்து எடுக்கலாம். சுவையே இல்லாமல் உண்பதும் தவறு.   புளிப்புத் தன்மை குறைவாக உள்ள, ஆனால் புளியின் பலன்களைக் கொடுக்கக்கூடிய கேரளத்துக் குடம் புளியை பயன்படுத்தலாம்.  

சைனஸ் ஏற்படும் சீசனிலும், சைனஸ் தீவிரமாக இருக்கும்போதும் நல்ல உணவியல் முறைகளைப் பின்பற்றவது,  ஆவி பிடிப்பது, ஃப்ரெஷ்ஷாக சமைத்த சூடான உணவுகளைச் சாப்பிடுவது,  கார்ப்புத்தன்மை உடைய, வெப்ப வீரியம் உள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்வது (உதாரணத்துக்கு, தூதுவளைத் துவையல், கொள்ளுத்துவையல், கொள்ளு ரசம் போன்றவை)   போன்றவற்றைப் பின்பற்றினாலே ஆரோக்கியமாக இருக்கலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Digestion: ஜீரணப் பிரச்னை; வராமல் தடுக்க மருத்துவர் கு.சிவராமன் கம்ப்ளீட் வழிகாட்டல்!

''சிலருக்கு நெஞ்சு எலும்புக்குக் கீழே ஒருவித எரிச்சலுடன்கூடிய வலி, மாரடைப்பது போன்ற உணர்வு வரும். காரணம், நாம் சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டா, சாம்பாருடன் கூடிய பொங்கல் என ஏதோ ஒன்று செரிமானம் ஆகாததால... மேலும் பார்க்க

Doctor Vikatan: சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்குமா வைட்டமின் சி மாத்திரைகள்?

Doctor Vikatan: கொரோனா காலத்தில் வைட்டமின் சி மாத்திரைகளைஎடுத்துக்கொள்ளச்சொல்லி அதிகம் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே, வைட்டமின் சி மாத்திரைகளைதினமும் எடுத்துக்கொண்டால், சளி, காய்ச்சல் பாதிக்காது என்று... மேலும் பார்க்க

Doctor Vikatan: அனீமியா, பிறப்புறுப்புக் கசிவு, மெனோபாஸுக்கு பிறகும் தொடருமா?

Doctor Vikatan: என்வயது 47. எனக்குக் கடந்த சில வருடங்களாக தீவிர அனீமியா (ரத்தச்சோகை) பிரச்னை இருக்கிறது. மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். பீரியட்ஸின்போதுப்ளீடிங்அதிகமிருப்பதுதான் காரணம் என்றும், ... மேலும் பார்க்க

சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண்களுக்குள் ரத்தக்கசிவு - காரணம் என்ன, தீர்வு உண்டா?

Doctor Vikatan:என் உறவினர் பெண்ணுக்கு 70 வயதாகிறது. அவருக்கு கண்களுக்குள் ரத்தக் கசிவு இருப்பதாகவும் அதை சரிசெய்ய முடியாதென மருத்துவர் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறார். கண்களுக்குள் ரத்தம் கசிவது ஏன், அத... மேலும் பார்க்க

Choking: தொடரும் சோக்கிங் மரணங்கள்; எப்படித் தவிர்ப்பது; எப்படி முதலுதவி செய்வது?

செவ்வாழைப்பழம் தொண்டையில் சிக்கி கல்லூரி மாணவி பலி, ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி, பரோட்டா தொண்டையில் சிக்கி ஆண் பலி என, ஏதோவொரு உணவுப்பொருள் தொண்டையில் சிக்கி இறப்பவர்களைப்ப... மேலும் பார்க்க