செய்திகள் :

Drishyam 3: "த்ரிஷ்யம் 4' படம் வருமா?" - இயக்குநர் ஜீத்து ஜோசஃப் பளிச் பதில்

post image

இயக்குநர் ஜீத்து ஜோசஃப் தற்போது ‘த்ரிஷ்யம் 3’ படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்திருந்தது.

மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த இந்தப் படத்தொடரின் முதல் இரண்டு பாகங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

Mohanlal - Drishyam 3
Mohanlal - Drishyam 3

மக்களிடம் இப்படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பைத் தொடர்ந்து, இதன் மூன்றாம் பாகத்தைத் தற்போது எடுத்து வருகிறார் இயக்குநர் ஜீத்து ஜோசஃப்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘த்ரிஷ்யம்’ படத்தின் நான்காம் பாகம் உருவாகுமா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ஜீத்து ஜோசஃப், “என்னுடைய கனவில்கூட நான் அதை நினைத்துப் பார்த்தது கிடையாது. நான் இக்கதையை முடிக்கவே நினைக்கிறேன். மக்களும் கதையை முடிக்கச் சொல்லிதான் என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

ஜீத்து ஜோசப்
ஜீத்து ஜோசப்

அதைத்தொடர்ந்து ‘த்ரிஷ்யம் 3’ படத்திற்கு நிலவும் எதிர்பார்ப்பு குறித்துப் பேசியவர், “மக்கள் இரண்டாம் பாகத்தைப் போல ஒரு கனமான, அறிவார்ந்த த்ரில்லரை எதிர்பார்த்தால், அவர்கள் ஏமாற்றமடையலாம்” எனக் கூறியிருக்கிறார்.

"அம்மா அதை நினைவூட்டியிருக்கிறார்!" - நடிகை ஊர்வசியின் மகள் தேஜலக்‌ஷ்மி

நடிகர் ஊர்வசியின் மகளான தேஜலக்‌ஷ்மி சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். மலையாளத்தில் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஊர்வசியுடன் 'பாப்லோ பார்ட்டி' என்ற திரை... மேலும் பார்க்க

Parvathy Thiruvothu: "அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்!" - நடிகை பார்வதி திருவோத்து

நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது கு... மேலும் பார்க்க