செய்திகள் :

"அம்மா அதை நினைவூட்டியிருக்கிறார்!" - நடிகை ஊர்வசியின் மகள் தேஜலக்‌ஷ்மி

post image

நடிகர் ஊர்வசியின் மகளான தேஜலக்‌ஷ்மி சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார்.

மலையாளத்தில் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஊர்வசியுடன் 'பாப்லோ பார்ட்டி' என்ற திரைப்படத்திலும் இவர் இணைந்து நடித்து வருகிறார்.

Urvashi Daughter - Tejalakshmi
Urvashi Daughter - Tejalakshmi

மகள் நடிக்க வருவது குறித்து இவருடைய தந்தை மனோஜ் கே ஜெயன் பேசியிருந்த காணொளி வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நடிப்பின் பக்கம் வரும்போது தாய் தந்தையர் கொடுத்த அட்வைஸ் குறித்து மலையாளத்தில் வெளிவரும் வனிதா பத்திரிகைக்கு பேட்டியளித்திருக்கிறார்.

தேஜலக்ஷ்மி கூறுகையில், “நான் எப்போதுமே விஷயங்களை லேசாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவள்.

சிறு வயதிலிருந்தே பெரும்பாலான சூழ்நிலைகளை அதிகம் யோசிக்காமல், அமைதியாக அணுகுவது என்னுடைய பழக்கம்.

சினிமாவுக்குள் வரும் முடிவை எடுத்ததும் அம்மாவும் அப்பாவும் ஒழுக்கம் பற்றி மிகத் தெளிவாக சொல்லித் தந்திருக்கிறார்கள்.

இந்தத் துறையில் ஒழுக்கம் அவசியம் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.

நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்வது, கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே இருப்பது, நீண்ட நேர ஷூட்டிங்குகளுக்கு ஏற்றவாறு சரிசெய்து கொள்வது போன்றவற்றை குறித்து எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

Urvashi Daughter - Tejalakshmi
Urvashi Daughter - Tejalakshmi

காட்சிகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றி அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்று என் அம்மா அறிவுரை வழங்கினார்.

செட் முழுவதும் உள்ள அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், மரியாதை காட்ட வேண்டும், அனைத்து குழு உறுப்பினர்களையும் மதிக்க வேண்டும் என்பதை அவர் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்.

‘சினிமாவும் நம்முடைய வீடுதான், அதில் இருப்பவர்கள் அனைவரும் நமது குடும்ப உறுப்பினர்கள்’ என்று அவர் எனக்கு அடிக்கடி நினைவூட்டுவார்" எனக் கூறியிருக்கிறார்.

Parvathy Thiruvothu: "அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன்!" - நடிகை பார்வதி திருவோத்து

நடிகை பார்வதி திருவோத்து, அவருடைய குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அவர் சிறு வயதில் இருக்கும்போது தெரியாத நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தியது கு... மேலும் பார்க்க

Sarvam Maya: "அப்பாவை அப்படி முத்திரை குத்துவது தவறானது!" - சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன்

மலையாள சினிமாவின் சீனியர் இயக்குநரான சத்யன் அந்திக்காடின் மகன் அகில் சத்யன் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது 'சர்வம் மாயா' திரைப்படம். நிவின் பாலி நடித்திருக்கும் இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும்,... மேலும் பார்க்க

மோகன்லாலின் தாயார் மறைவு: "நாங்கள் பேசுவோம், சிரிப்போம்!" - நினைவுகளைப் பகிரும் மோகன்லாலின் நண்பர்

நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தாகுமாரி இயற்கை எய்தியிருக்கிறார். 90 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்றைய தினம் கேரளா, கொச்சியிலுள்ள அவருடைய இல்லத்தில் காலமானார்.மோகன்லாலின் தாயாரின் மறைவுக்கு மலையாள... மேலும் பார்க்க

Sreenivasan: "'விஷம் சாப்பிடாமல் இருப்பதுதான் லாபம்' என்பார்!" - பகிர்கிறார் ஸ்ரீனிவாசனின் நண்பர்!

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக் குறைவால் கடந்த சனிக்கிழமை இயற்கை எய்தினார். 69 வயதானவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சனிக்கிழமை திடீரென இவருக்கு மூச்சு... மேலும் பார்க்க

Anaswara Rajan: "அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என நினைத்துக் கொண்டிருந்தேன்" - அனஸ்வரா ராஜன்

மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து பக்கங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார் நடிகை அனஸ்வரா ராஜன்.அவர் நடித்திருக்கும் 'சாம்பியன்' என்ற தெலுங்கு திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இதுதான்... மேலும் பார்க்க

Sreenivasan: "ஸ்ரீனி மூலமாக மக்கள் அதை திரையில் கண்டார்கள்!" - மோகன்லால் உருக்கம்!

mமலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார். இவருக்கு வயது 69. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்கு... மேலும் பார்க்க