செய்திகள் :

Egg less Cakes: `ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

post image

ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்

சர்க்கரை - அரை கப்

கார்ன் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

ரிஃபைண்ட் எண்ணெய் - கால் கப் + 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்

துருவிய ஆரஞ்சுப்பழத் தோல் - 2 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

ஆரஞ்சு எசென்ஸ் - அரை டீஸ்பூன்

ஆரஞ்சு நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) – கால் டீஸ்பூன்

உலர்ந்த க்ரான்பெர்ரி பழம் - 2 டேபிள்ஸ்பூன்

ஆரஞ்சு க்ரான்பெர்ரி கேக்

செய்முறை:

மைக்ரோவேவ் ஓவனை 180 டிகிரி செல்சியஸுக்கு பிரீஹீட் செய்யவும். கோதுமை மாவு, கார்ன் மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா ஆகியவற்றை இரண்டு முறை சலித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, கால் கப் எண்ணெய், இரண்டையும் சேர்த்து சர்க்கரை கரைந்து க்ரீம் போல ஆகும்வரை நன்கு அடிக்கவும்.

பிறகு இதனுடன் ஆரஞ்சு ஜூஸையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் துருவிய ஆரஞ்சுப்பழத் தோல், ஆரஞ்சு எசென்ஸ், ஒரு டேபிள் ஸ்பூன் க்ரான்பெர்ரி பழம், ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் சலித்துவைத்துள்ள கோதுமை மாவு ஆகியவற்றை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஒரு பேக்கிங் பானில் எண்ணெய் தடவவும். அதில் பேக்கிங் பேப்பரை வைக்கவும். அதன் மேலும் எண்ணெய் தடவவும். இதில் தயாரித்துவைத்துள்ள கேக் கலவையை ஊற்றி அதன்மீது ஒரு டேபிள்ஸ்பூன் உலர்ந்த க்ரான்பெர்ரியைத் தூவவும்.

பின்னர் இதை ஓவனில் 30 முதல் 35 நிமிடங்கள் வைத்து நன்றாக பேக் செய்து எடுக்கவும்.

ரஷ்யர்கள் தங்களின் வசந்தக் கடவுளான Maslenitsa-வுக்குச் சிறிய வட்ட வடிவ கேக்குகளை ‘சூரிய கேக்குகள்’ என்னும் பெயரில் படைத்தனர்.

Eggless Cakes: `சாக்லேட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

சாக்லேட் கேக்தேவையானவை: மைதா - ஒன்றரை கப் கோகோ பவுடர் – கால் கப் ரிஃபைண்ட் எண்ணெய் – கால் கப் + 2 டேபிள்ஸ்பூன் பால் – அரை கப் தயிர் – அரை கப் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன... மேலும் பார்க்க

Egg less Cakes: `கேரட் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

கேரட் கேக்தேவையானவை: கோதுமை மாவு – ஒன்றரை கப் கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன் துருவிய கேரட் – ஒரு கப் எண்ணெய் – அரை கப் + 2 டேபிள் ஸ்பூன் தயிர் – ஒரு கப் பால் – கால் அல்லது அரை கப் வெனிலா எசென்ஸ் - ஒரு ட... மேலும் பார்க்க

Egg less Cakes: `ஜாம் ரோல்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

ஜாம் ரோல்தேவையானவை: மைதா – ஒரு கப் பொடித்த சர்க்கரை - அரை கப் உருக்கிய வெண்ணெய் - 6 டேபிள்ஸ்பூன் தயிர் – கால் கப் பால் – அரை கப் மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - 4 டேபிள்ஸ்பூன் வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன் பே... மேலும் பார்க்க

Eggless Cakes: `மார்பிள் கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

மார்பிள் கேக்தேவையானவை: மைதா – ஒன்றேகால் கப் கண்டன்ஸ்டு மில்க் - 200 மில்லி கோகோ பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன் வெண்... மேலும் பார்க்க

Eggless Cakes: `டூட்டி ஃப்ரூட்டி கேக்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

டூட்டி ஃப்ரூட்டி கேக்தேவையானவை: மைதா அல்லது கோதுமை மாவு - ஒன்றரை கப் பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன் பொடித்த சர்க்கரை - ஒரு கப் வெனிலா எசென்ஸ் – ஒரு டீஸ்பூன் ரிஃபைண்ட் எண்ண... மேலும் பார்க்க

Egg less Cakes: `ப்ளூ பெர்ரி மஃப்பின்' - அசத்தலாக வீட்டிலேயே செய்வது எப்படி?

ப்ளூ பெர்ரி மஃப்பின்தேவையானவை: மைதா அல்லது கோதுமை மாவு - ஒரு கப் கார்ன் மாவு - 2 டேபிள்ஸ்பூன் ரிஃபைன்ட் எண்ணெய் – கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன் கெட்டியான தயிர் - கால் கப் பால் – முக்கால் அல்லது ஒரு கப் ... மேலும் பார்க்க