Vijay Sethupathi: 'முதல் தமிழ் திரைப்படம்!' - ஹாலிவுட்டில் ரீமேக்காகும் விஜய் சே...
Emmy 2026: கோலாகலமாக நடந்து முடிந்த 78வது எம்மி விருதுகள்; வெற்றியாளர்கள் யார் யார்... முழு பட்டியல்
78-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலஸிலுள்ள பீகாக் தியேட்டரில் (Peacock Theater) நடைபெற்றது. அதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது வென்ற வெற்றியாளர்களின் பட்டியலைப் பின்வருமாறு பார்க்கலாம்.

சிறந்த நாடகத் தொடர் (Drama Series):
ஆர். ஸ்காட் ஜெம்மில் இயக்கிய 'தி பிட்' (The Pitt) சிறந்த நாடகத் தொடருக்கான விருதினை வென்றது. 'தி பிட்' தொடர்ச்சியாக 2-வது ஆண்டாகச் சிறந்த நாடகத் தொடருக்கான விருதை வென்றது கூடுதல் சிறப்பாகப் பார்க்கப்பட்டது.
சிறந்த நகைச்சுவைத் தொடர் (Comedy Series):
கேட்டி டிப்போல்ட் இயக்கிய `விடோஸ் பே' (Widow’s Bay) என்ற தொடருக்குச் சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
நாடகத் தொடர் – சிறந்த நடிகர்: நாடகத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை 'தி பிட்' தொடரில் நடித்த 'நோவா வைல்' (Noah Wyle) வென்றார்.
நாடகத் தொடர் – சிறந்த நடிகை:
நாடகத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை 'ப்ளூரிபஸ்' (Pluribus) தொடரில் நடித்த 'ரியா சீஹார்ன்' (Rhea Seehorn) வென்றார்.
நாடகத் தொடர் – சிறந்த துணை நடிகர்:
'டாஸ்க்' (Task) நாடகத் தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகருக்கான விருதினை 'டாம் பெல்ஃப்ரி' (Tom Pelphrey) வென்றார்.
நாடகத் தொடர் – சிறந்த துணை நடிகை:
'தி டிப்ளமேட்' (The Diplomat) நாடகத் தொடரில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகைக்கான விருதினை அல்லிசன் ஜேனி (Allison Janney) வென்றார்.

நகைச்சுவைத் தொடர் – சிறந்த நடிகர்:
நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதினை மேத்யூ ரைஸ்' (Matthew Rhys) விடோஸ் பே' (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.
நகைச்சுவைத் தொடர் – சிறந்த நடிகை:
நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை ஜீன் ஸ்மார்ட்' (Jean Smart) ஹேக்ஸ்' (Hacks) தொடரில் நடித்ததற்காக வென்றார். ஹேக்ஸ் தொடருக்காகத் தொடர்ச்சியாக 5-வது முறையாக நகைச்சுவைத் தொடரில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.
நகைச்சுவைத் தொடர் – சிறந்த துணை நடிகர்:
'ஸ்டீபன் ரூட்' (Stephen Root) நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை `விடோஸ் பே' (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.
நகைச்சுவைத் தொடர் – சிறந்த துணை நடிகை:
'கேட் ஓ’ஃப்ளின்' (Kate O’Flynn) நகைச்சுவைத் தொடரில் சிறந்த துணை நடிகைக்கான விருதினை `விடோஸ் பே' (Widow’s Bay) தொடரில் நடித்ததற்காக வென்றார்.
சிறந்த ஆந்தாலஜி/ லிமிடெட் தொடர்:
`டி.டி.எஃப் செயிண்ட் லூயிஸ்' (DTF St. Louis) என்ற தொடருக்குச் சிறந்த லிமிடெட் மற்றும் ஆந்தாலஜி தொடர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.
ஆந்தாலஜி / லிமிடெட் தொடர் – சிறந்த நடிகர்:
`தி பீஸ்ட் இன் மீ' (The Beast in Me) தொடரில் நடித்ததற்காக மேத்யூ ரைஸுக்கு (Matthew Rhys) லிமிடெட் தொடரில் சிறந்த நடிகர் என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.
ஆந்தாலஜி தொடர் – சிறந்த நடிகை:
'ரிமார்க்கப்ளி பிரைட் க்ரீச்சர்ஸ்' (Remarkably Bright Creatures) தொடரில் நடித்ததற்காகச் சாலி ஃபீல்ட் (Sally Field) லிமிடெட் தொடரில் சிறந்த நடிகை என்ற பிரிவின் கீழ் விருது வழங்கப்பட்டது.
சிறந்த நாடகத் தொடர் இயக்குநர்:
சிறந்த நாடகத் தொடர் இயக்குநர் என்ற விருதினை 'சவுல் மெட்ஸ்ஸ்டைன்' (Saul Metzstein) 'ஸ்லோ ஹார்ஸஸ்' (Slow Horses) என்ற தொடரை இயக்கியதற்காக வென்றார்.

சிறந்த நகைச்சுவைத் தொடர் இயக்குநர்:
சிறந்த நகைச்சுவைத் தொடர் இயக்குநர் என்ற விருதினை 'ஹிரோ முராய்' (Hiro Murai) 'விடோஸ் பே' (Widow’s Bay) என்ற தொடரை இயக்கியதற்காக வென்றார்.
சிறந்த நாடகத் தொடர் எழுத்தாளர்:
சிறந்த நாடகத் தொடர் எழுத்தாளர் என்ற விருதினை 'வின்ஸ் கில்லிகன்' (Vince Gilligan) 'ப்ளூரிபஸ்' (Pluribus) என்ற தொடரை எழுதியதற்காக வென்றார்.
சிறந்த நகைச்சுவைத் தொடர் எழுத்தாளர்:
சிறந்த நகைச்சுவைத் தொடர் எழுத்தாளர் என்ற விருதினை 'கேட்டி டிப்போல்ட்' (Katie Dippold) 'விடோஸ் பே' (Widow’s Bay) என்ற தொடரை எழுதியதற்காக வென்றார்.
பாப் ஹோப் மனிதாபிமான விருது:
மைக்கேல் ஜே. ஃபாக்ஸுக்கு (Michael J. Fox) பாப் ஹோப் மனிதாபிமான விருது (Bob Hope Humanitarian Award) வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
















