செய்திகள் :

EVM குற்றச்சாட்டு: ``பிரகாஷ் ராஜ் திரையில் என்ன கேரக்டரோ... நிஜத்திலும் அப்படியே!" - நயினார் சாடல்!

post image

நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர் சந்திப்பில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை உச்ச நீதிமன்றமே நேரடியாகக் கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், ``தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு EVM எரிக்கப்படுவது மற்றும் முக்கிய அலுவலகங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. இதைக் கேட்பதற்கு ஆளில்லையா?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், ``ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேசுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. இந்த EVM கொண்டுவந்தது யார்? காங்கிரஸ் கட்சிதானே கொண்டுவந்தது? அதற்குப் பிறகும் அவர்கள் எத்தனை முறை ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்?

இப்போது கேரளாவில் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்.. காங்கிரஸ் கட்சிதானே இருக்கிறது. பா.ஜ.க-வா ஆட்சிக்கு வந்திருக்கிறது? வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்திருந்தால் நாங்கள்தானே அனைத்து இடங்களிலும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை யாரும் எதுவும் சொல்லாமல், திடீரென்று இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது தேவையற்ற விளம்பரத் தேடலேயாகும். இப்போது சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி அரசியல் செய்வது ஒரு வழக்கமாகிவிட்டது. சமூக வலைதளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருடன் இருந்தார், என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் திடீரென்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்பதும் தெரியும். அப்போதெல்லாம் EVM குளறுபடியினால்தான் வெற்றி பெற்றோம் என்று சொல்லவில்லையே? இதையெல்லாம் ஒரு பிரச்னையாக ஆக்குவது சிரிப்பையே வரவழைக்கிறது.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர்களையும் 'ரங்கா-பில்லா' என்றும், அவர்கள் வாக்குகளைத் திருடிவிட்டார்கள் என்றும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறார். அவர் திரைப்படங்களில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறாரோ, அதே போன்ற குணம் மற்றும் குணாதிசயம்தான் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுகிறது" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தனுஷ்இது ச... மேலும் பார்க்க

பழனி மட நில மோசடி வழக்கில் மேலும் இருவர் கைது; சூடுபிடிக்கும் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.இந்நிலையில்,... மேலும் பார்க்க

"துரோக அமைப்புடன் சேர்ந்து செயல்பட முடியாது; திமுக தனித்தே போராடும்" - யாரைச் சொல்கிறார் RS பாரதி?

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்தும், பா.ஜ.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, இந்தியா... மேலும் பார்க்க

'ஞானேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற தேர்தல்களை ரத்து செய்து, மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும்!'- சீமான்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்வதோடு, அவரது தலைமையில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களையும் ரத்து செய்து, நேர்மையான முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி... மேலும் பார்க்க

'இதுதான் உண்மை; மாத்திரை உறை விவகாரத்தில் மலிவான அரசியல் செய்கிறது திமுக' - அமைச்சர் அருண்ராஜ்

கோவை மற்றும் கரூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரை உறைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுவது சா்ச்சையைய... மேலும் பார்க்க

கோவை அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் 'இந்தி' சர்ச்சை; உடனடியாக மாற்றப்பட்ட கவர்; பின்னணி என்ன?

கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். கோவையில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்களும் அதிகளவில் சிகிச்ச... மேலும் பார்க்க