செய்திகள் :

FIFA: "வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும்" - தோல்வி குறித்து மெஸ்ஸி எமோஷனல்

post image

ஸ்பெயின் - அர்ஜெண்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்.

ஸ்பெயின்
ஸ்பெயின்

இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியுடனான தோல்விக்கு பின் அர்ஜெண்டின நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மைதானத்தில் உடைந்து அழுதார். இந்நிலையில் மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வலி அளவற்றது, இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும். இருப்பினும் இதில் உள்ள நல்ல விஷயங்களையும் நான் நினைவில் கொள்வேன்.

நமது அணியின் உழைப்பு மற்றும் முயற்சியுடன் இணைந்து, நம்மை மீண்டும் உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாகக் கொண்டு வந்ததை நான் எப்போதும் நினைவில் கொள்வேன்.

மெஸ்ஸி
மெஸ்ஸி

நாங்கள் சாதித்ததை இன்று மதிப்பிடுவது கடினம் என்றாலும், இந்த அணி தொடர்ந்து இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது என்பதைச் சொல்ல வேண்டும்.

எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. அர்ஜெண்டினியனாக பெருமை கொள்கிறேன். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Keyne: உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசி... மேலும் பார்க்க

ஆட்டம் மொத்தமும் ஸ்பெயின் வசமே... அர்ஜென்டினாவை அடிச்சு தூக்கி சாம்பியன் ஆனது எப்படி?

ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினாவிற்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின்.நியூயார்க் நியூ ... மேலும் பார்க்க

"எனக்குக் கோப்பையை விட இந்த நீண்ட பயணம் தந்தவையே மாபெரும் பரிசு!" – லியோனல் மெஸ்ஸி உருக்கம்

உலக கால்பந்து ரசிகர்கள் அனைவரும் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நடக்கவிருக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்காக மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்கியமான நேரத்தில், அ... மேலும் பார்க்க

கடைசி நிமிடம் வரை திக் திக் : இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !

அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து க்கு இடையேயான கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா.அட்லான கால்பந்து மைதானத்தில் நடந்த இப்போட்டியில... மேலும் பார்க்க

எம்பாப்பேவால் முடியவில்லை! டீம் வொர்க்கால் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின் வென்றது எப்படி?

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், கிலியன் எம்பாப்பே தலைமையிலான பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறி... மேலும் பார்க்க