செய்திகள் :

எம்பாப்பேவால் முடியவில்லை! டீம் வொர்க்கால் பிரான்ஸை வீழ்த்திய ஸ்பெயின் வென்றது எப்படி?

post image

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், கிலியன் எம்பாப்பே தலைமையிலான பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி, ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியது. தனிநபர் திறமையை விட, அணியின் ஒருங்கிணைந்த ஆட்டமே வெற்றிக்கு முக்கியம் என்பதை ஸ்பெயின் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

டெக்சாஸில் உள்ள AT&T மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆரம்பம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. அவர்களின் அட்டாக்கிங், பாஸிங் மற்றும் தடுப்பாட்டம் என அனைத்திலும் ஒருவித கட்டுக்கோப்பு தெரிந்தது. மறுபுறம், இந்த தொடர் முழுவதும் கோல் மழை பொழிந்த கிலியன் எம்பாப்பே, மைக்கேல் ஒலிஸ் போன்ற நட்சத்திர வீரர்களால் ஸ்பெயினின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை. பிரான்ஸ் அணி கையில் பந்து வைத்திருந்ததை விட, பந்தை துரத்திய நேரமே அதிகமாக இருந்தது.

ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த கோல்கள்!

ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில், ஸ்பெயினின் இளம் புயல் 19 வயதான லமைன் யமால், பிரான்ஸ் பாக்ஸிற்குள் அபாரமாக ஊடுருவியபோது ஃபவுல் செய்யப்பட்டார். இதனால் ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திய மைக்கேல் ஓயர்சபால், கோலாக மாற்றி ஸ்பெயினுக்கு முதல் முன்னிலையைப் பெற்றுத் தந்தார். முதல் பாதி இந்த கோலுடன் முடிய, இரண்டாம் பாதியிலும் ஸ்பெயினின் ஆதிக்கமே தொடர்ந்தது. ஆட்டத்தின் 58-வது நிமிடத்தில், டேனி ஓல்மோவின் அற்புதமான பாஸை பெட்ரோ போரோ கோலாக மாற்றி, ஸ்பெயினின் வெற்றியை உறுதி செய்தார்.

‘ஸ்பெயினை வீழ்த்த முடியவில்லை’ - பிரான்ஸ் பயிற்சியாளர் ஒப்புதல்!

போட்டிக்குப் பிறகு பேசிய பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ், தோல்வியை ஒப்புக்கொண்டார். "ஸ்பெயின் போன்ற அணிகள் தங்களின் தடுப்பாட்டத்தை சிறப்பாக கையாளத் தெரிந்தவை. அவர்கள் அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டனர். இந்தத் தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஸ்பெயின் அணிக்கு என் வாழ்த்துகள். இதுதான் உயர்நிலை கால்பந்தின் தரம்," என்று குறிப்பிட்டார். இந்தத் தோல்வியின் மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பிரான்ஸின் கனவு தகர்ந்தது. மேலும், 14 ஆண்டுகள் பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த டெஷாம்ப்ஸின் சகாப்தம், மூன்றாவது இடத்திற்கான போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.

‘நாங்கள் ஒரு டீம்... எங்களை வீழ்த்த முடியாது!’ - கர்ஜித்த ஸ்பெயின்!

ஸ்பெயின் பயிற்சியாளர் லூயிஸ் டி லா ஃபுயன்டே, அணியின் கூட்டு முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். "இந்த அணி தனிப்பட்ட திறமை வாய்ந்த வீரர்களால் ஆனது. ஆனால், அனைவரும் அணிக்காக உழைக்கிறார்கள். நாங்கள் ஒரு அணியாக விளையாடும்போது, எங்களை யாராலும் வெல்ல முடியாது. அப்படித்தான் நாங்கள் இப்போது உணர்கிறோம்," என்றார். மேலும், வெற்றிக்குப் பிறகு ஸ்பெயின் மன்னர் ஃபெலிப் VI தமக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததை பெருமையுடன் குறிப்பிட்டார்

16 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஸ்பெயின், கடந்த 37 போட்டிகளாகத் தோல்வியைச் சந்திக்காமல் வெற்றிநடை போடுகிறது. இந்தத் தொடரில் இதுவரை ஒரே ஒரு கோலை மட்டுமே அந்த அணி வாங்கியுள்ளது என்பது அவர்களின் தடுப்பாட்ட வலிமைக்குச் சான்று.

வரும் ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அல்லது இங்கிலாந்து அணியை ஸ்பெயின் எதிர்கொள்ளும். தற்போதைய ஃபார்மைப் பார்க்கும்போது, ஸ்பெயின் அணிக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

கால்பந்தின் நிகழ்காலம் எம்பாப்பே vs எதிர்காலம் யமால் - அரையிறுதியில் அனல் பறக்கும் யுத்தம்!|Preview

2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டெக்சாஸின் ஆர்லிங்டனில் உள்ள பிரம்மாண்டமான AT&T ஸ்டேடியத்தில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், உலகின் முன்னணி அணிகளான பிரான்ஸு... மேலும் பார்க்க

மெஸ்ஸியுடன் கோல்கள் சமம், ஆனால் முதலிடத்தில் எம்பாப்பே! கோல்டன் பூட் போட்டியை மாற்றுவது எது?

2026 ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோல்டன் பூட் விருதுக்கான போட்டி நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கிறது. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்... மேலும் பார்க்க

தவறவிட்ட பெனால்டி, படைத்த புதிய வரலாறு! 30-க்குள் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் எம்பாப்பே

சாதனை மேல் சாதனை. பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பேவின் பெயர் மீண்டும் ஒருமுறை உலகக் கால்பந்து வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. 2026 FIFA உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில், மொராக்கோ அணிக்கு எதிராக இர... மேலும் பார்க்க

FIFA: பழிதீர்க்குமா மொராக்கோ? இங்கிலாந்தை வீழ்த்துவாரா ஹாலண்ட்? - அனல் அடிக்கும் காலிறுதி ஆட்டங்கள்!

கடைசி நிமிட கோல்கள், அதிர்ச்சித் தோல்விகள், நம்பமுடியாத கம்பேக்குகள், ஜாம்பவான்களின் கண்ணீருடன் கூடிய பிரியாவிடை என அத்தனை உணர்ச்சிகளையும் ஒருங்கே கொட்டி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்ற... மேலும் பார்க்க

ARG vs EGY : கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோ; காட்டமான எகிப்து கோச்! - பரபரப்பான நொடிகளின் தொகுப்பு!

அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: பரபரப்பான நொடிகளின் தொகுப்பு.!அர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தில் மெஸ்ஸி & கோஅர்ஜென்டினா vs எகிப்து: கொண்டாட்டத்தி... மேலும் பார்க்க

`உலகக்கோப்பையில் மெஸ்ஸி நீடிக்க எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!' - எகிப்து கோச்'சின் நேரடி குற்றச்சாட்டு

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், நடுவர்களின் முடிவுகள் ஒருதலைபட்ச... மேலும் பார்க்க