செய்திகள் :

நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி - 3 வார்டன்கள் கைது!

post image

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 13-ம் தேதி) இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் காயங்கள் இருப்பதாகக் கூறி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தியதுடன் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை. இன்றும் பிணவறை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சபரி வர்மனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய உறவினர்களுக்கு நாகர்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் ஆதரவாக களம் இறங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சபரி வர்மன் சிறையில் மரணமடைந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர்.

மரணமடைந்த சபரி வர்மன்
மரணமடைந்த சபரி வர்மன்

இந்த நிலையில் நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் சபரிவர்மன் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதில் சபரி வர்மனின் உடலில் சுமார் 19 காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. எனவே, சிறைக்குள் வைத்து சிறை வார்டன்கள் சபரி வர்மனை தாக்கியதும், அதனால் அவர் இறந்ததும் உறுதியானது. இதற்கிடையே சபரி வர்மனின் மனைவி அனந்தவள்ளி தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட சிறை வார்டன் உள்ளிட்டவர்கள்

சபரி வர்மன் அடித்துக் கொலைசெய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார், தலைமை சிறை காவலர் சுரேஷ் என்ற திருமலை நம்பி ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரவு சிறைக்குள் தூக்கம் வராமல் சபரி வர்மன் சத்தம்போட்டதாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரிவான விசாரணை நடத்திய பிறகே கூடுதல் தகவல்கள் வெளியாகும்.

டிடர்ஜென்ட், பாமாயில் மூலம் செயற்கை பால் தயாரிப்பு: மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் விநியோகம்

மகாராஷ்டிராவில் பால் கலப்படத்திற்கு எதிராக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடத்திய ரெய்டில் பெரிய அளவில் பால் கலப்படம் நடப்பது கண... மேலும் பார்க்க

தூத்துக்குடி: 10 சவரன் தங்க நகைக்காக பெரியம்மாவைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மகன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலாபுரத்தைச் சேர்ந்தவர் திருக்கண்ணன் என்பவரின் மனைவி கலாவதி. இவர், சத்துனவு திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு இரு மகன்... மேலும் பார்க்க

ரூ.15 கோடி'பொருள்' - பங்கு பிரிப்பதில் மோதல்; சிவகங்கையில் சிக்கிய சர்வதேச குருவிகள்!

சிக்கிய 4 'குருவிகள்'!சிவகங்கையில் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.100 கிலோ 'மெத்தாம்பேட்டமைன்' என்ற பயங்கர போதைப்பொருளைப் பறிமுதல் செய்த சிவகங்கை நகர் காவல்துறையினர், இது தொடர்பாகப் பதுங்கியிருந்த... மேலும் பார்க்க

கோவை: சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - கிராம மக்கள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம், அரிசி பாளையம் மூலக்கடை வீதியைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவர் தனது வளர்ப்பு நாயுடன் வி.கே.சி கம்பெனி அருகே இன்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு குழந்தையின் அ... மேலும் பார்க்க

3 வயது சிறுமி வன்கொடுமை: அபராத பணத்தில் மது விருந்து வைத்த கிராம பஞ்சாயத்து - அதிர்ச்சி சம்பவம்!

நவீன இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைத்தாலும், சில கிராமங்களில் இன்னும் காட்டுமிராண்டித்தனமான செயல்களும், பஞ்சாயத்து என்ற பெயரில் நடைபெறும் அநீதிகளும் தொடர்கின்றன என்பதற்கு ஜார்கண்ட் மாநி... மேலும் பார்க்க

கரூர்: திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; தவெக நிர்வாகி மீது புகார்; கனிமொழி கண்டனம்

கரூர் மாவட்டம் குளித்தலையில் திருமணமான பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த தவெக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டம், குளித்தலை, மலையப்பன் நகரைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண். ... மேலும் பார்க்க