செய்திகள் :

'FIR மீது விசாரணை நடத்தலாம்' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு; மீண்டும் போராட்டத்தைத் தொடங்குகிறதா CJP?

post image

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்தியது காக்ரோச் ஜனதா கட்சி.

சூர்ய காந்த்தின் தீர்ப்பு

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அளித்த தீர்ப்பின் சாராம்சம்...

> குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தவிர, மற்ற போராட்டக்காரர்கள் மீது எவ்விதக் கடுமையான அல்லது கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இருப்பினும், எஃப்.ஐ.ஆர் மீதான விசாரணைக்கு எவ்விதத் தடையும் இல்லை.

சூர்ய காந்த் - தலைமை நீதிபதி
சூர்ய காந்த் - தலைமை நீதிபதி

> போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

> போராட்டக்காரர்களின் டிஜிட்டல் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

> அனைத்து சிசிடிவி (CCTV) காட்சிகள், ட்ரோன் பதிவுகள், பாடி கேமரா பதிவுகள், வயர்லெஸ் உரையாடல்கள், பிசிஆர் (PCR) அழைப்புப் பதிவுகள் ஆகியவைப் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பில் உள்ள 'எஃப்.ஐ.ஆர் மீதான விசாரணைக்கு எவ்விதத் தடையும் இல்லை' என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது காக்ரோச் ஜனதா கட்சி.

இதை விமர்சித்து காக்ரோச் ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

''உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், விசாரணைகளை நடத்தவும் அரசுக்கு அனுமதி அளிக்கும் 'உத்தரவு எண். 4' மிகப்பெரிய கவலைகளை எழுப்புகிறது.

சௌரவ் தாஸ்
சௌரவ் தாஸ்

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதி

2026 ஜூலை 25 அன்று இந்த நாட்டின் இளைஞர்களுக்கு இந்திய அரசு அளித்த உறுதியான வாக்குறுதி மற்றும் உத்தரவாதத்திற்கு - அதாவது எஃப்.ஐ.ஆர்கள் திரும்பப் பெறப்படும் மற்றும் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் பங்கேற்ற எந்தவொரு போராட்டக்காரரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிவைக்கப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதிக்கு - இந்த உத்தரவு நேர் எதிரானதாக உள்ளது.

மீண்டும் போராட்டம்?

இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வின் இந்த உத்தரவைப் பயன்படுத்தி, தனிப்பட்ட போராட்டக்காரர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்களைத் தொடரவும், அவர்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கவும் இந்திய அரசும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் முயலக்கூடும் என்ற நம்பத்தகுந்த அச்சம் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு தனது உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. அரசு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இது தவறினால், ஏற்கெனவே அறிவித்தபடி, தங்களின் நலனுக்காக மட்டுமின்றி இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடிய மாணவர்களையும் இளம் போராட்டக்காரர்களையும் பாதுகாக்க, காக்ரோச் ஜனதா கட்சி தனது நாடு தழுவிய போராட்டத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை".

IIT Madras இயக்குநர் காமகோடி 'கோமிய நிபுணரா'? பிரியங்கா காந்தி vs அனுராக் தாகூர் காரசார விவாதம்

தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. மக்களவையில் உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி மற்றும் அனுராக் தாகூருக்கு இடையே ஐ.ஐ.டி மெட்ராஸின் இயக்குநர் காமகோடி குறித்து காரசார விவாதம் ... மேலும் பார்க்க

``சாக்கடை தலைமுறை; வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது"- மாணவர்கள் போராட்டம் குறித்து கங்கனா

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் மாணவர்களின் முழக்கமும், செயல்பாடுகளும் வாந்தி வரும் உணர்வை ஏற்படுத்தியதாக இமாச்சலப் பிரதேசத்தின் பா.ஜ.க எம்.பி கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிற... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``யார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கு முதலிடமே இருக்கும்..!" - தவெக பதிவு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தலைமை தாங்கிய இந்த விழாவில், முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில்... மேலும் பார்க்க

அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.15 லட்சம் பேரம் பேசிய தவெக நிர்வாகி; வெளியான ஆடியோ - அறிக்கை விட்ட மா.செ

தமிழகம் முழு​வதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்​துக்கு ரூ.5 லட்​சம் முதல் ரூ.30 லட்​சம் வரை லஞ்​சம் பெறு​வ​தாக விழுப்புரத்தை சேர்ந்த த.வெ.க வழக்கறிஞரணி நிர்​வாகி​யான ஞானசவுந்​தரி என்பவர் சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து: ``ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது" - அமைச்சர் நிர்மல் குமார்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் தலைமை தாங்கிய இந்த விழாவில், முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில்... மேலும் பார்க்க

நெல்லை: கண்ணீர் விட்ட மாணவிகள்; மன்னிப்பு கேட்ட ஆளுநர்; மூன்றாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

நெல்லை: கண்ணீர் விட்ட மாணவிகள்; மன்னிப்பு கேட்ட ஆளுநர்; மூன்றாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! மேலும் பார்க்க