7 நாள் கெடு: காங்கிரஸ் தலைவர்கள் கணக்குகளுக்கு கட்டுப்பாடு விதித்த மெட்டா அலுவல...
Gold: 10 நாள்களில் ரூ.13,900 குறைந்த தங்கம் விலை; சறுக்கலுக்கு என்ன காரணம்?
சென்னையில் கடந்த நவம்பர் 10-ம் தேதியிலிருந்து (கிட்டத்தட்ட 10 நாள்களில்) தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது.
கடந்த நவம்பர் 10-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,210-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,05,680-க்கும் விற்பனையாகி இருந்தது.
அன்றிலிருந்து இப்போது வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,745-உம், பவுனுக்கு ரூ.13,960-உம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,465-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.91,720-க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சறுக்கி வருவதே, இங்கு தங்கம் விலை குறைந்து வருவதற்குக் காரணமாகும். சர்வதேச சந்தையில் பார்த்தால், கடந்த 10-ம் தேதி, ஒரு அவுன்ஸ் தங்கம் (28.35 கிராம்) சுமார் 4,032 டாலருக்கு வர்த்தகமாகியுள்ளது.
நேற்று (நவம்பர் 20) 3,535 டாலருக்கு வர்த்தகமாகி இருக்கிறது.
ஏன் இந்தச் சறுக்கல்?
> அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவாகி வருகிறது.
> கச்சா எண்ணெய் விலை இன்னும் பெரிய அளவில் இறக்கம் காணவில்லை.
> உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஏற்கெனவே வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளன. அடுத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் வட்டி வருமானம் தராத ஒரு முதலீடு ஆகும். அதனால், முதலீட்டாளர்கள் வட்டி தரும் முதலீடுகள் பக்கம் மாறி வருகின்றனர்.
இன்னும் குறையுமா?
சர்வதேச அளவில் வேறு ஏதேனும் கவனிக்கத்தக்க மாற்றம் நடந்தால் தங்கம் விலை திசை மாறலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.



















