செய்திகள் :

GRT: வியப்பூட்டும் சலுகைகள்; 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்'- அறிமுகப்படுத்திய ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ்

post image

வியப்பூட்டும் சலுகைகளுடன் பிரம்மாண்டமான 'தி டாஸ்லிங் டைமண்ட் ஃபெஸ்டிவல்' -ஐ ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் அறிவித்துள்ளது.

ஜி.ஆர்.டி ஜூவல்லரஸ், 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் மதிப்புமிக்க நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. துல்லியமான கைவினைத் திறன் அற்புதமான வடிவமைப்புத் திறன் மற்றும் நீடித்த மதிப்புகள் ஆகியவற்றிற்காக பிரசித்திபெற்ற இந்த நிறுவனம் தங்கம் வைரம் பிளாட்டினம்.

வெள்ளி, மற்றும் நவரத்தினங்களில், நேர்த்தியான தொகுப்புகளை உருவாக்குவதின் மூலம் இந்நிறுவனம் தலைமுறைகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தென் இந்தியா முழுவதும் 65 ஷோரூம்கள் மற்றும் சிங்கப்பூரில் 1 ஷோரூம் என மொத்தம் 66 ஷோரூம்களுடன் ஜி ஆர்டி ஜூவல்லர்ஸ் அது சேவை செய்யும் சமூகங்களுடன் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமில்லாமல், அதன் கலைத்திறன் மற்றும் நம்பகத்தன்மையின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறது.

GRT
GRT

இந்த மரபைத் தொடர்ந்து, ஜி ஆர் டி ஜூவல்லர்ஸ் ஒரு ஒப்பிடமுடியாத மற்றும் தவிர்க்கமுடியாத சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சீசனில், ஜி.ஆர்டி ஜுவல்லர்ஸ் அதன் மிகவும் பிரபலமான "தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல் ஐ தொடங்கியுள்ளது. மின்னும் வைர அற்புதங்களின் கண்கவர் கலெக்ஷன்களை முன்னிறுத்தும் இந்த விழா ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒளிவீசும் அழகையும் மேன்மையையும் கொண்டாடுகிறது.

வாடிக்கையாளர்கள் வைரம் மற்றும் அன்கட் வைரத்தின் மதிப்பில், (சாலிடர்களைத் தவிர்த்து) 25% வரை தள்ளுபடியும், மேலும் பிளாட்டினம் நகைகளுக்கான செய்கூலி மற்றும் சேதாரத்தில் (VA) 30% தள்ளுபடியும் பெறலாம். இந்த சலுகையில் மேலும் பிரகாசம் சேர்க்கும் விதமாக வாடிக்கையாளரின் ஒவ்வொரு நாளையும் சிறிது கூடுதல் பிரகாசமாக்க வடிவமைக்கப்பட்ட எளிய மற்றும் அழகிய 'ஒரியானா என்னும் வைர ஆபரண கலெக்ஷன்களிலும் இந்த ஆஃபர்கள் பொருந்தும்.

ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் வழங்கும் ஒவ்வொரு வைர நகையும் 'ஜி.ஆர்.டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' எனும் முழுமையான உறுதிப்பாட்டுடன் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதனால் இதன் செயல்முறை முழுவதும் ஒரு முழுமையான வெளிப்படைத்தன்மையை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

GRT
GRT

குறிப்பாக, ஒவ்வொரு நகையும் சான்றளிக்கப்பட்ட தரமான வைரங்கள், துல்லியமான எடை அடிப்படையிலானவிலை நிரணயம், வாழ்நாள் பராமரிப்பு, தெளிவான விலை நிர்ணயம், காரட் உத்தரவாதம், நெறிமுறைப்படி பெறப்பட்ட வைரங்கள், HUID குறி மற்றும் உத்தரவாதமான திரும்பப் பெறுதல் ஆகிய ஒன்பது உத்திரவாத கொள்கைகளை கொண்டுள்ளது. இந்த விரிவான உத்தரவாதத்தால் வாடிக்கையாளர்கள், தாங்கள் முதலீடு செய்வதை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

'ஒவ்வொரு ஒளிர்விலும் ஒரு கதை உள்ளது. என்கிறார் ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குனர் திரு. ஜி.ஆர். 'ஆனந்த்' அனந்தபத்மநாபன் அவர்கள் 'இந்த தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்' என்பது வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாட உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு படைப்பும் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் எங்கள் பயணத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் புத்திசாலித்தனத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கு நம்பகமான "ஜிஆர்டி டயமண்ட் அஷ்யூரன்ஸ்' அதற்க்கு ஆதரவு அளிக்கிறது.

GRT
GRT

தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் மற்றொரு நிர்வாக இயக்குனர் திரு ஜி ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆறு தகாப்தங்களுக்கும் மேலாக 66 ஷோரூம்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களுடனான எங்களது உறவு என்பது புரிதல், நம்பிக்கை மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. பெரும்பாலானோர் தங்களின் முக்கிய தருணங்களை வைரங்களால் கொண்டாடும் இந்த காலத்தில் எங்களின் 'தி டாஸ்லிங் டயமண்ட் ஃபெஸ்டிவல்" உங்களை, இன்னும் பிரகாசமாய் திகழவும் தன்னம்பிக்கையுடன் உங்களின் வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை கொண்டாடவும் வழிவகுக்கிறது.

ஜி.ஆர்.டியின் நன்கொடைகள்: குழந்தைகள் முதல் கோயில் வரை; ரூ.53.7 லட்சத்திற்கும் அதிகமான நன்கொடைகள்

ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் எப்போதும் தனது சிறந்த கைவினைப் பணியைத் தாண்டிய மதிப்புகளை நிலைநிறுத்தி வருகிறது. இந்தியாவின் மிகவும் போற்றப்படும் நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ், வணிகத்தைத் தாண்டி ... மேலும் பார்க்க

`தொழிலில் ரூ.1000 கோடி சாம்ராஜ்யம்' - சத்தமே இல்லாமல் சாதித்த மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்தார். உலகமே வியக்கும் வகையில் கிரிக்கெட்டில் சாதித்த மகேந்திர சிங் தோனி சென்னை ஐ.பி.எல் அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.சர்வதேச கிரிக்கெ... மேலும் பார்க்க

'தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களை விட 25 ஆண்டுகள் அட்வான்ஸாக சிந்திக்கிறோம்' - மு.க.ஸ்டாலின்

கோவை தனியார் நட்சத்திர ஹோட்டலில் 'TN Rising' முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து 15 முறைக்கு மேல் கோவைக்கு வந... மேலும் பார்க்க