செய்திகள் :

Hockey: காவி கலருக்கு மாறிய இந்திய ஹாக்கி அணி; சர்ச்சைக்கு விளக்கமளித்த நிர்வாகம்!

post image

இந்திய ஹாக்கி அணி இதுவரை நீல கலர் உடையணிந்துதான் விளையாடிக்கொண்டிருந்தது. ஆனால் திடீரென அதன் உடை காவி கலருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எஃப்.ஐ.எச் உலகக் கோப்பையில் இந்திய ஹாக்கி அணியின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் தங்களது பாரம்பர்ய நீல நிற உடைகளுக்குப் பதிலாக காவி நிற ஜெர்சியை அணிவார்கள் என்று ஹாக்கி இந்தியா தெரிவித்துள்ளது. அதோடு இதனை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை கடந்த 27-ம் தேதியன்று, ஹாக்கி இந்தியா நிர்வாகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டது.

பாரம்பர்ய நீல நிறத்தில் இருந்து விலகியது சமூக ஊடகங்களில் ஒரு விவாதப்பொருளாக மாறியது. மேலும் முன்னாள் ஆண்கள் அணி கேப்டன் வீரேன் ரஸ்குவின்ஹா ​இது குறித்து கேள்வி எழுப்பினார். 2026 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய அணிகளுக்கான ஜெர்சி நிறத்தை மாற்றியதற்கான காரணங்களை ஹாக்கி இந்தியா நிர்வாகக் குழு தெளிவுபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ``நீல செயற்கை ஆடுகளங்களில் தெரிவுநிலையை மேம்படுத்துவதற்காக 2026 உலகக் கோப்பைக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஹாக்கி ஜெர்சியின் நிறம் காவிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

மேலும் ஊழியர்கள் மற்றும் வீரர்களின் பரிந்துரைகள் மற்றும் விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் சீருடை நிறத்தை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். இப்போது சர்வதேச ஹாக்கி ஆடுகளங்களுக்கான நிலையான நிறமாக நீலம் இருக்கிறது. எனவே அதனைக் கருத்தில் கொண்டு வீரர்களின் உடை நிறத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க