நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் - சர்ச்சையின் பின...
IND vs SA: "நேற்றைய ஆட்டத்தில் 2016-18 ஆம் ஆண்டுகளின் கோலி வெர்ஷனைப் பார்த்தோம்" - குல்தீப் யாதவ்
இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று (நவ.30) ராஞ்சியில் நடைபெற்றது.

இதில், 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.
அதிரடி சதமடித்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
இந்நிலையில் விராட் கோலி குறித்து குல்தீப் யாதவ் பேசியிருக்கிறார்.
"விராட் கோலி கேப்டன்சியின்போதுதான் எனது கிரிக்கெட் பயணம் தொடங்கியது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக கோலி பேட்டிங் செய்யும் போது 2016-18 ஆம் ஆண்டுகளின் வெர்ஷனைப் பார்த்தோம்.
இது ஒரு நல்ல இன்னிங்ஸாக இருந்தது. அவர் பந்தை எதிர்கொண்ட விதம் அருமையாக இருந்தது.

நான் பந்து வீசும்போது என்னிடம் நிறைய ஆலோசனைகளை வழங்குவார். கோலி மாதிரியான சீனியர்கள் அணிக்குத் திரும்பியிருப்பது பெரிய பலமாக இருக்கிறது.
அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இப்படிப்பட்ட சீனியர்கள் அணியில் இருப்பது நல்லது மற்றும் அதிர்ஷ்டம்" என்று கோலி குறித்து குல்தீப் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.


.jpg)













